பதிவர்களுக்கு பயனுள்ள 10 தளங்கள்

முஸ்கி 1: இரண்டுமாத இடைவெளிக்கு பிறகு நண்பர்கள் அனைவரையும் பதிவின் மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நேரமின்மை காரணமாக என்னால் பதிவிட முடியாமல் இருந்தது. இப்பொழுதும் கொஞ்சம் பிஸியாக (!) தான் இருக்கிறேன். ஆனாலும் நமக்கிடையே உள்ள பிரிவு அதிகமாகக் கூடாது என்பதற்காகவும் , அப்படியே அலெக்ஸா ரேங்கில் (Alexa Rank) முன்னேறுவதற்காகவும்  இந்த பதிவு.

முஸ்கி 2:
இதுவரை நான் பதிவிட்ட பதிவுகளும், இறைவன் நாடினால் இனி பதிவிடப் போகும் பதிவுகளும் எனது சொந்த படைப்புகள் அல்ல. ஆங்கில தளங்களில் உள்ளவற்றின் மொழிபெயர்ப்புகளே! ஆனால் அந்த தளங்களின் பெயர்களை குறிப்பிடாததற்கு காரணம், ஒரு பதிவை எழுத பத்துக்கும் மேற்பட்ட தளங்களை பார்த்து எழுதுகிறேன். அதனால் தளங்களை குறிப்பிடவில்லை. இந்த பதிவில் அந்த ஆங்கில தளங்களின் பட்டியலை வெளியிடுகிறேன். ப்ளாக்கர் தொழில்நுட்பம் தொடர்பாக பதிவெழுதும் அநேக பதிவர்கள் இதிலிருந்து தான் எழுதுகிறார்கள் என்பது எனது யூகம். அடுத்த பதிவெழுத இன்னும் நேரமாகும் என்பதால் அது வரை நண்பர்கள் இந்த ஆங்கில தளங்களை (விருப்பம் இருந்தால்..) படித்து பயன்பெறவும்.

பதிவர்களுக்கு பயனுள்ள 10 தளங்கள்:

1. http://www.dailyblogtips.com/

2. http://www.problogger.net/

3. http://www.bloggerbuster.com/

4. http://www.anshuldudeja.com/

5. http://www.blogdoctor.me/

6. http://www.abu-farhan.com/ (malware detected)

7. http://www.bloggertipsandtricks.com/

8. http://www.newbloggingtipz.com/

9. http://www.blogspottutorial.com/

10. http://www.allblogtools.com/

குறிப்பு: இந்த அனைத்து தளங்களிலும் விளம்பரம் அதிகமாக இருக்கும். பார்த்துக் கொள்ளவும்.

இதையும் படிங்க:  அவசியம் படிக்க வேண்டிய பதிவுகள்

14 thoughts on “பதிவர்களுக்கு பயனுள்ள 10 தளங்கள்”

  1. நன்றிங்க ஆனால் தமிழில் அதை மாற்றித் தரும் தங்களைப் போன்றவரின் செயற்பாடு அளப்பரியது… அந்த சேவையை செய்யும் உள்ளங்களுக்கு என் நன்றிகள்…

    அன்புச் சகோதரன்…
    ம.தி.சுதா
    பாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம் (கண்டுபிடிப்பு)

  2. வணக்கம் நண்பரே இடைவெளிக்கு பிறகு மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி நண்பரே,

    பயனுள்ள தளங்களை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி நண்பரே 🙂

  3. தங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும் சகோ.அப்துல் பாசித்.

    முன்பு நீங்கள் எங்களுக்கு ஒரு பிளாக்கர் நண்பன்.

    இப்போது உங்களுடைய பல நண்பர்களை எங்களுக்கும் அறிமுகப்படுத்தியுள்ளீர்கள்… மிக்க நன்றி.

    அடிக்கடி எழுதுங்கள் சகோ.

    எனக்கு பின்னூட்டத்தில் ஏதாவது ஒரு வார்த்தையை சொடுக்கினால் அதன் மூலம் லிங்க் ஓபன் ஆகுமே… அதை எப்படி பின்னூட்டம் அடிக்கும்போதே கொடுப்பது?

  4. திரட்டி எழுதுவதில் எந்தத் தவறும் இல்லை, திருடுவதுதான் கூடாது. நீங்கள் அறிவைத் திரட்டிதான் எழுதுகிறீர்கள்.

  5. நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி நண்பா….

    பிரவீன்….

  6. ந‌ண்ப‌ரே எப்ப‌டி ந‌ம் ப்ளாக்கில் எத்த‌னை பேர் ஆன்லைனில் இருக்கிறார்க‌ள் என‌ க‌ண்டுபிடிப்ப‌து…

  7. தங்கள் கருத்துக்களையும், வாழ்த்துக்களையும் பகிர்ந்துக்கொண்ட அனைவருக்கும் நன்றி..!

  8. //nalla said…

    ந‌ண்ப‌ரே எப்ப‌டி ந‌ம் ப்ளாக்கில் எத்த‌னை பேர் ஆன்லைனில் இருக்கிறார்க‌ள் என‌ க‌ண்டுபிடிப்ப‌து…
    //

    நண்பரே! அதற்கு நீங்கள் ஏதாவது stats gadget-ஐ உங்கள் ப்ளாக்கில் நிறுவ வேண்டும்.. அதற்கான தளங்கள்:

    histats.com
    statscounter.com

    அந்த தளங்களில் பதிவு செய்துக் கொண்டால், உங்களுக்கான பிரத்யேக code தருவார்கள். அதனை உங்கள் ப்ளாக்கில் இணைத்தால் தெரிந்துக் கொள்ளலாம்.