பதிவர்களுக்காக புதிய கூகுள்+ Followers Gadget

கூகுள் ப்ளஸ் தளம் வலைத்தளங்களுக்காக கூகுள் ப்ளஸ் பேட்ஜை முன்பு அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் நமது தளத்திற்கு வரும் வாசகர்கள் எளிதாக நமது கூகுள் ப்ளஸ் பக்கத்தினை பின்தொடரலாம். முன்பு பின்தொடர்பவர்களில் ஐந்து புகைப்படங்களை மட்டுமே காட்டியது. தற்போது பேஸ்புக் லைக் பாக்ஸ் போலவே மேம்படுத்தப்பட்ட புதிய ஃபால்லோவர்ஸ் கேட்ஜட்டை (Google+ Followers Gadget) அறிமுகப்படுத்தியுள்ளது.

நீங்கள் ப்ளாக்கரில் Layout பகுதிக்கு சென்றால் இது பற்றிய அறிவிப்பைக் காட்டும். அதை Close செய்து விட்டு, Add a Gadget என்பதை க்ளிக் செய்து, Google+ Followers gadget-ஐ சேர்த்துக் கொள்ளலாம்.

இதனை சேர்க்க நீங்கள் ப்ளாக்கர் ப்ரொபைலுக்கு பதிலாக கூகுள் ப்ளஸ் ப்ரொஃபைலை பயன்படுத்த வேண்டும். இது பற்றி கூகிள் ப்ளஸ்ஸில் இணைகிறது ப்ளாக்கர் என்ற பதிவில் பார்க்கலாம்.

தற்போது உள்ள ப்ளாக்கர் Followers Gadget தொடர்ந்து செயல்படும் என்று ப்ளாக்கர் தெரிவித்தபோதிலும் இது நிலைத்திருக்குமா என்பது சந்தேகமே!

இதையும் படிங்க:  ப்ளாக்கரில் HTTPS பாதுகாப்பு வசதி அறிமுகம்

14 thoughts on “பதிவர்களுக்காக புதிய கூகுள்+ Followers Gadget”

 1. பாஸ் கூகிள் அடுத்து என்ன வெளியிடப் போறன் ஷக்கர் பெர்க்குக்கு தெரியுதோ இல்லையோ உங்களுக்கு தெரியுது… இது எப்படி சாத்தியம்…
  குற்றம் நடந்தது என்ன

 2. நல்ல தகவல்….உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி…..

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

 3. கூகுள் + ப்ரோபைலை இணைத்துக் கொள்வதோடு, Meta tag மூலம் author முகவரியாகவும் Google+ profile ஐ இணைத்துக் கொண்டால், கூகுள் சர்ச் பக்கத்தில் வரும் தங்களது தள ரிசல்ட்-உடன் நமது கூகுள்+ப்ரொபைல் போட்டோவும் வருகிறது. அதற்கு கூகுள் டீம் அப்ரூவலுக்கான Google + ஐ வலுப்படுத்த வேண்டும்.

  tamil online job site > http://www.padugai.com