பங்கு வர்த்தகத்தில் கால் பதித்தது பேஸ்புக்

சமூக வலையமைப்புத் தளமான பேஸ்புக் நிறுவனம் அமெரிக்காவின் NASDAQ பங்கு சந்தையில் நேற்று காலடி வைத்துள்ளது. பேஸ்புக் நிறுவனம் பங்கு வர்த்தகத்தில் நுழையப் போகிறது என்ற செய்தி வந்ததிலிருந்து உலகம் முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பு காணப்பட்டது. இது பற்றிய சில செய்திகளை இங்கு பார்ப்போம்.

IPO (Initial Public Offering) என்றால் என்ன?

ஆரம்ப பொது விடுப்புகள் (Initial public offering, அல்லது IPO) என்பது ஒரு நிறுவனம் தனது பொது பங்குபத்திரம் மற்றும் பங்குகளை முதல் முறையாக வெளியிடுவதை குறிப்பதாகும். இது பொதுவாக சிறிய, இளம் நிறுவனங்கள் தமது நிறுவனத்தை விரிவாக்கும் பொருட்டு அதற்கான முதலீட்டை ஈட்டுவதற்கும், பெருக்குவதற்கும் ஏற்பாடு செய்யும் முறையாகும், ஆனால் பெரிய தனியார் நிறுவனங்களும் இது போன்று பொது வர்த்தகம் செய்வதற்கு முனையலாம்.

 -விக்கிபீடியாவில் இருந்து…

பேஸ்புக் நிறுவனம் தனது 421 மில்லியன் பங்குகளை நேற்று விற்பனை செய்துள்ளது. இதில் 180 மில்லியன் பங்குகள் பேஸ்புக் நிறுவனமும், 241 மில்லியன் பங்குககள் ஏற்கனவே பேஸ்புக் பங்குகளை வைத்திருந்த பங்குதாரர்களும் விற்பனை செய்தனர். ஒரு பங்கின் விலை 38 டாலர்கள் என நிர்ணயித்தது. இதன் மூலம் முதல் நாளில் மட்டும் 16 பில்லியன் டாலர்களை ஈட்டியுள்ளது. இந்த பங்குகளின் மூலம் பேஸ்புக் நிறுவனத்தின் மதிப்பு சுமார் 104 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது.

பங்குச்சந்தையை தொடங்கி வைத்த மார்க் ஜுக்கர்பெர்க்:

பேஸ்புக்  பங்கின் விலை 38 டாலர்களாக இருந்தாலும் நாஸ்டாக் பங்கு சந்தை தொடங்கியதும் அதன் விலை 42 டாலர்களாக உயர்ந்தது. இடையில் அதிகபட்சமாக 45 டாலரை எட்டினாலும், நாள் இறுதியில் அதன் விலை 38.23 டாலர்களாக குறைந்தது. இது 23 சென்ட்கள் (Cents) மட்டுமே அதிகமாகும்.

பேஸ்புக் நிறுவனத்தின் பங்குச்சந்தை குறியீடு FB ஆகும். இனி கூகிளில் FB என்று தேடினால் அன்றைய பேஸ்புக் நிறுவன பங்குச்சந்தை நிலவரத்தைக் காட்டும்.

தற்போது  பேஸ்புக் நிறுவனத்தின் மதிப்பு McDonald’s, Amazon, Disney, Visa, volkswagen ஆகிய நிறுவனங்களைவிட அதிகமாகும். ஆனால் ஆப்பிள் ($496 பில்லியன்), மைக்ரோசாப்ட் ($246 பில்லியன்), கூகுள் ($196 பில்லியன்) நிறுவனங்களைவிட குறைவு.

பேஸ்புக் நிறுவனம் பங்குச்சந்தையில் எழுச்சி பெறுமா? அல்லது வீழ்ச்சி பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இதையும் படிங்க:  Instagram மென்பொருளை வாங்கிய பேஸ்புக்

7 thoughts on “பங்கு வர்த்தகத்தில் கால் பதித்தது பேஸ்புக்”

  1. போகிற போக்கைப் பார்த்தால் ., பேஸ்புக் நிறுவனம் பங்குச்சந்தையில் எழுச்சி பெறும் என்றே நினைக்கிறேன் ..!

  2. ல் ஆப்பிள் ($496 பில்லியன்), மைக்ரோசாப்ட் ($246 பில்லியன்), கூகுள் ($196 பில்லியன்) //

    அடேங்கப்பா!

    நல்ல தகவல்கள் சகோ.பகிர்வுக்கு நன்றி!