மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது விண்டோஸ் 7 இயக்கு தளத்திற்கான தனது ஆதரவை இன்றுடன் நிறுத்திக்கொள்கிறது. இனி விண்டோஸ் 7 இயக்கு தளத்திற்கு புதிய இலவச பாதுகாப்பு அப்டேட் கிடைக்காது.
பாதுகாப்பு அப்டேட் ஏன்?
பொதுவாக ஹேக்கர்கள் ஒவ்வொரு நாளும் கணினிகளில் புதியப்புதிய பாதுகாப்பு ஓட்டைகளை கண்டறிந்து அதன் மூலம் நமது கணினிகளை ஹேக் செய்வார்கள். இப்படி கண்டுபிடிக்கப்படும் பாதுகாப்பு ஓட்டைகளை கணினி நிறுவனங்கள் புதிய பாதுகாப்பு அப்டேட் மூலம் சரி செய்வார்கள். இந்த பாதுகாப்பு அப்டேட்களை நாம் நிறுவுவது அவசியமாகும்.
அப்டேட் செய்யவில்லை என்றால் என்னவாகும்?
விண்டோஸ் 7 இயக்கு தளத்திற்கு தனது ஆதரவை மைக்ரோசாப்ட் நிறுத்திக்கொள்வதால் அந்த இயக்கு தளத்தில் இனிவரும் பாதுகாப்பு ஓட்டைகளை மைக்ரோசாப்ட் சரிசெய்யாது. இதனால் உங்கள் விண்டோஸ் 7 கணினிகள் பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்படும். உங்கள் கணினிகளை பாதுகாக்க விண்டோஸ் 10 இயக்கு தளத்திற்கு மாறுவது அவசியமாகும்.
தற்போது இலவச அப்டேட்களை மட்டும் தான் நிறுத்திக் கொள்கிறது. ஆனால் விண்டோஸ் 7 கணினிகளை பயன்படுத்தும் நிறுவனங்கள் இன்னும் மூன்று வருடங்களுக்கு பணம் கட்டி அப்டேட் செய்துக் கொள்ளலாம். இதன் கட்டணம் ஒவ்வொரு ஆண்டும் உயரும்.
என் கணினி விண்டோஸ் 10 இயக்கு தளத்தை தாங்குமா?
விண்டோஸ் 10 இயக்கு தளத்தை நிறுவுவதற்கு உங்கள் கணினியில் கீழ்வரும் தேவைகள் இருக்க வேண்டும்.
Processor: |
1 gigahertz (GHz) or faster
|
RAM: | 1 gigabyte (GB) for 32-bit or 2 GB for 64-bit |
Hard drive size:
|
32GB or larger hard disk
|
Graphics card: |
Compatible with DirectX 9 or later with WDDM 1.0 driver
|
Display: | 800×600 |
பழைய கணினிகளில் விண்டோஸ் 10 அப்டேட் செய்வதைவிட புதிய விண்டோஸ் 10 கணினிகளை வாங்குவதே சிறந்தது.
விண்டோஸ் 10-க்கு மாறுவது எப்படி?
உங்கள் விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் 8 கணினிகளில் Product Key இருந்தால் இலவசமாக விண்டோஸ் 10 இயக்கு தளத்திற்கு மாறலாம். இல்லையென்றால் பணம் கொடுத்து வாங்க வேண்டும்.
விண்டோஸ் 10 OS வாங்க இங்கே க்ளிக் செய்யவும்.
விண்டோஸ் 7,8 கணினிகளில் விண்டோஸ் 8 நிறுவும் முறையை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.
குறிப்பு 1: உங்கள் விண்டோஸ் 7 கணினியில் இணையத்தை பயன்படுத்தவில்லை என்றால் எந்த பாதிப்பும் இல்லை. விண்டோஸ் 7 இயக்கு தளத்தையே பயன்படுத்தலாம்.
குறிப்பு 2: விண்டோஸ் 10 பயன்படுத்துவதால் மட்டுமே உங்கள் கணினி பாதுகாப்பு பெறாது. இணையத்தில் இருக்கும் பல்வேறு மோசடிகளில் இருந்து கவனமாக இருப்பது அவசியமாகும்.
You must log in to post a comment.