நீங்கள் ப்ளாக்கரில் டொமைன் வைத்துள்ளீர்களா?

நீங்கள் ப்ளாக்கர் மூலம் கஸ்டம் டொமைன் வாங்கி பயன்படுத்துகிறீர்களா? ஆம் என்றால் கூகுள் சமீபத்தில் செய்த மாற்றத்தைப் பற்றி அவசியம் அறிந்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் உங்கள் டொமைனை நீங்கள் இழக்க நேரிடலாம்.

மாற்றம் 1:

ப்ளாக்கர் தளம் மூலமாகவே டொமைன் வாங்கும் வசதி முன்பு இருந்தது. இதுபற்றி பிளாக்கரில் டொமைன் வாங்குவது எப்படி? என்ற பதிவில் கூட பார்த்திருக்கிறோம். ஆனால் அந்த வசதியை ப்ளாக்கர் நீக்கிவிட்டது. இனி நீங்கள் டொமைன் வாங்கினால் தனியாகத் தான் வாங்க வேண்டும்.

நீங்கள் புதிதாக டொமைன் வாங்க எண்ணினால் BLUEHOST தளத்தில் வாங்கலாம்.

மாற்றம் 2:

முன்பு நீங்கள் டொமைன் வாங்கியபோது Google Apps தளத்தில் அதன் அமைவுகளை பயன்படுத்தியிருப்பீர்கள். தற்போது Google Admin என்ற பக்கத்தில் அந்த அமைவுகள் புதிய வடிவமைப்பில் இருக்கிறது.

மாற்றம் 3:

நீங்கள் ஏற்கனவே கூகுள் மூலம் டொமைன் வாங்கியிருந்தால் அதன் காலம் முடியும் போது புதுப்பிக்க (Renew) கட்டாயம் Automatic Renew வசதியை செயல்படுத்த வேண்டும். இல்லையென்றால் உங்கள் டொமைனை நீங்கள் இழக்க நேரிடும். மீண்டும் அதனை பெறுவது கடினம்.

இதனை செயல்படுத்துவது எப்படி? என்பதை பார்ப்போம்.

முதலில் பின்வரும் முகவரிக்கு செல்லுங்கள்.


https://www.google.com/a/cpanel/bloggernanban.com/

இதில் bloggernanban.com என்பதற்கு பதில் உங்கள் டொமைன் முகவரியை கொடுக்க வேண்டும்.

நீங்கள் தற்போதுள்ள ஐடியை காட்டும். அதற்கு கீழுள்ள Add account என்பதை க்ளிக் செய்யுங்கள்.

உங்கள் டொமைன் ஐடி மற்றும் கடவுச்சொல்லைக் கொடுத்து உள்நுழையுங்கள். தெரியவில்லை என்றால் Need Help என்பதை க்ளிக் செய்யுங்கள்.

பிறகு i don’t know my password என்பதை க்ளிக் செய்து bloggeradmin@yoururl.com (yoururl.com என்பதற்கு பதிலாக உங்கள் ப்ளாக் முகவரி) என்று கொடுத்து Continue என்பதை க்ளிக் செய்யுங்கள்.

நீங்கள் கடைசியாக அந்த கணக்கை பயன்படுத்திய கணினியிலிருந்து இதை செய்ய சொல்லும். Continue என்பதை க்ளிக் செய்யுங்கள்.

உங்கள் நினைவில் இருக்கும் பழைய கடவுச்சொல்லை கேட்கும். I don’t remember என்பதை க்ளிக் செய்யுங்கள்.

Recovery Option-ல் நீங்கள் மொபைல் எண்/ மின்னஞ்சல் முகவரியை கொடுத்திருந்தால் அதனை கொடுக்க சொல்லும். அதனை சரியாக கொடுத்து Continue என்பதை க்ளிக் செய்யுங்கள்.

பிறகு உங்கள் மின்னஞ்சலுக்கு பாஸ்வோர்டை மாற்றுவதற்கு லிங்க் ஒன்று வரும். அதன் மூலம் பாஸ்வோர்டை மாற்றுங்கள்.

பிறகு மீண்டும் bloggeradmin@yoururl.com, பாஸ்வோர்ட் கொடுத்து உள்நுழையுங்கள்.

முன்பு டொமைன் வாங்குவதற்கு Google Checkout இருந்தது. அதனை Google Wallet என்று மாற்றிவிட்டது. அதனால் Verify billing now என்பதை க்ளிக் செய்து உங்கள் முகவரி மற்றும் கிரெடிட்/டெபிட்கார்ட் விவரங்களை மீண்டும் கொடுக்க வேண்டும்.

பிறகு Continue என்பதை க்ளிக் செய்யுங்கள்.

இது தான் உங்கள் டொமைனுக்கான Google Admin பக்கம். இதில் Domains என்பதை க்ளிக் செய்யுங்கள்.

பிறகு Automatically Renew என்பதற்கு பக்கத்தில் உள்ள பெட்டியில் டிக் செய்து Save கொடுக்கவும்.

இதையும் படிங்க:  ப்ளாக்கரில் கூகுள் ப்ளஸ் கம்மென்ட் பாக்ஸ் வசதி

அவ்வளவு தான்! பிறகு உங்கள் டொமைன் வருடா வருடம் (உங்கள் கார்டில் பணம் இருந்தால்) தானாக புதுப்பிக்கப்படும்.

வேறு ஏதாவது சந்தேகம் இருந்தால் கருத்துப்பெட்டியில் கேட்கலாம்.

13 thoughts on “நீங்கள் ப்ளாக்கரில் டொமைன் வைத்துள்ளீர்களா?”

  1. தாங்கள் காட்டியுள்ள வழியில் நுழைவது கடினமாக உள்ளது. கூகுளே வாலட் மூலம் எளிதில் செய்யமுடியுமா? சற்று விளக்கவும்.

  2. This account was deleted and is no longer recoverable. [?]
    பாஸ் எனக்கு இப்படி செய்தி வருகிறது எப்படி இதை சரி செய்வது?

  3. அய்யா
    எப்படி வலைப்பதிவை இணையதளமாக மாற்றுவது? எவ்வளவு செலவாகும்? xxxxxx blogspot .in என்பது xxxxxxx .com என மாற்றிவிட முடியுமா /
    pse guide me — datashiva@gmail.com

  4. பயனுள்ள தகவல் இந்த தளத்தை எனக்கு அறிமுகம் செய்த கற்போம் பிரபு அவர்களுக்கும் உங்களுக்கும் அன்புவின் அன்பான நன்றி

  5. சாய் பிரசாத்November 13, 2013 at 1:23 PM
    This account was deleted and is no longer recoverable. [?]
    பாஸ் எனக்கு இப்படி செய்தி வருகிறது எப்படி இதை சரி செய்வது?

    /இதுக்கு என்னதான் தீர்வு பாஸ் கொஞ்சம் விளக்கம் தரவும் பிளீஸ்!