நீங்கள் ஆங்கில தளம் வைத்துள்ளீர்களா?

கடந்த பகுதியில் தமிழ் தளங்களை பிரபலப்படுத்துவது பற்றி பார்த்தோம் அல்லவா? இந்த பகுதியில் ஆங்கில தளங்களை பிரபலப்படுத்துவது பற்றி பார்ப்போம். ஆங்கில தளங்கள் வைத்திருப்பதால் வரும் பலன்களில் ஒன்று, கூகிள் ஆட்சென்ஸ் உள்ளிட்ட விளம்பரங்களை பெற்று, அதன் மூலம் கணிசமாக சம்பாதிக்கலாம்.

இது ப்ளாக் தொடங்குவது எப்படி? என்ற தொடரின் இறுதி மற்றும் 25-ஆம் பகுதி ஆகும்.

ஆங்கில தளம் என்றால் அதற்கான வாசகர் வட்டம் மிகப்பெரியது. பல்வேறு நாடுகளில் உள்ள ஆங்கிலம் தெரிந்த வாசகர்களை நமது பதிவுகள் சென்றடையும். மேலும் தேடுபொறிகளில் இருந்தும் அதிக வாசகர்கள் கிடைப்பார்கள். ஆங்கில தளங்களை பிரபலப்படுத்த கடந்த பதிவில் சொன்ன (திரட்டிகளைத் தவிர) அனைத்து முறைகளும் பயன்படும். மேலும் சில முறைகளை பார்ப்போம்.

Social Bookmarking Sites:

தமிழில் உள்ள திரட்டிகள் போன்று ஆங்கிலத்திலும் பல தளங்கள் உள்ளன. அவைகள் Social Bookmarking Sites எனப்படும். அந்த தளங்களில் உங்கள் பதிவுகளை பகிர்ந்துக் கொண்டால் அதிக வாசகர்கள் உங்கள் தளத்திற்கு வருவார்கள். பல்வேறு தளங்கள் இருந்தாலும் அவற்றில் முக்கியமான சிலவற்றை மட்டும் இங்கு பட்டியலிடுகிறேன்.

 1. www.stumbleupon.com/
 2. www.digg.com/
 3. www.reddit.com/
 4. www.delicious.com/
Social Networking Sites:
கடந்த பகுதியில் சொன்னது போல, சமூக வலைத்தளங்கள் நமது பிளாக்கை பிரபலப்படுத்த பெரிதும் உதவுகின்றன. அவற்றில் முக்கியமான சிலவற்றை இங்கு பகிர்கிறேன்.

 1. Facebook
 2. Twitter 
 3. Google Plus+ 
 4. LinkedIn 
 5. MySpace 
 6. Bloggers (தகவல்: சகோ. சம்பத் குமார்)
 7. IndiBlogger 

Social Bookmarking தளங்களில் நாம் பதிவுகளை பகிர்ந்தால் போதும். ஆனால் Social Networking தளங்களில் நாம் அதிக நண்பர்களை பெற்றிருக்க வேண்டும். அப்போது தான் அதிக வாசகர்கள் நமது தளத்திற்கு வருவார்கள்.


Online Forums:

Forums எனப்படும் தளங்கள் இணையத்தில் அதிகம் உள்ளன. அங்கு பயனாளர்கள் தங்களுடைய சந்தேகங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். பதில் தெரிந்தவர்கள் பதில் அளிப்பார்கள்.மேலும் தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்துக் கொள்வார்கள். நீங்கள் எதை பற்றி எழுதுகிறீர்களோ அது தொடர்பான Forum தளங்களை இணையத்தில் தேடி அதில் இணைந்துக் கொள்ளலாம். அங்கு உங்கள் தள முகவரியை பகிர்வதால் அங்கிருந்தும் சில வாசகர்கள் வருவார்கள்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

கூகிள் ஆட்சென்ஸ் பற்றி இறைவன் நாடினால் தனி பதிவாக பிறகு பதிவிடுகிறேன்.

ப்ளாக் பற்றிய சில அடிப்படைத் தகவல்களை ஓரளவு பகிர்ந்துவிட்டேன் என நம்புகிறேன். இதுவரை பொறுமையுடன் தொடர்ந்து படித்து வந்த அனைவருக்கும் நன்றி!

தொடர் முற்றும். மற்றவை தொடரும்…..

23 thoughts on “நீங்கள் ஆங்கில தளம் வைத்துள்ளீர்களா?”

 1. Basith, என் ப்ளாக்கில் பாலோவர்ஸ் கேட்ஜட் display ஆகவில்லை… என்ன தவறாக இருக்கும்?

  குட் ப்ளாக்கில் வந்ததற்கு வாழ்த்துக்கள்.

 2. தொழில் நுட்பமறியா எங்களைப் போன்றோருக்கு பயனுள்ள தகவல்கள் கொடுத்தமைக்கு மிக்க நன்றித் தோழரே!

 3. நல்ல பயனுள்ள தகவல்களைப் பகிர்ந்திருக்கிறீர்கள். தொடரை வெற்றிகரமாக முடித்தமைக்கு என்னுடைய வாழ்த்துகள்.. !! கூகுள் ஆட்சென்ஸ் பற்றிய பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

 4. மிக அருமையான தொடர் இது. நிறைய புதியவர்களுக்கு பயனளிக்கும் வண்ணம் இருந்தது/ இருக்க போகிறது. நன்றி சகோ.

 5. தகவலுக்கு நன்றி நண்பா ..!, Google Adsense பற்றியும் எழுதுங்கள் நண்பரே. தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறேன்..!

 6. தங்களுடைய கட்டுரைகள் அனைத்தையும் படித்துவிட்டேன். அருமையான கட்டுரைகள். ஆனால் என்னால்தான் புதிதாக பிளாக் தொடங்க முடியவில்லை. மீண்டும் மீண்டும் படித்துத்தான் புரிந்து கொண்டு தொடங்கவேண்டும்.நன்றி!

 7. எளிமையாக புரியும் விதமாக பதிவை இது வரை வெளியிட்டதிற்கு வாழ்த்துகள் நன்பரே

 8. தஞ்சை தமிழன்
  என்ற புதிய இனையதளத்தை உங்கள் உதவியினால் நிறுவியுள்ளேன்.மிக்கநன்றி…