உங்கள் கணினி உலவியில் முகப்பு பக்கம் எது? என்று கேட்டால் பெரும்பாலானவர்களின் பதில் கூகுள். சரி, தினமும் கூகுள் தளத்திற்கு செல்கிறோம். அதில் உள்ள “i’m feeling Lucky” பட்டன் எதற்கு என்று தெரியுமா? அதில் மறைந்திருக்கும் வசதிகள் பற்றி தெரியுமா?
நான் அதிர்ஷ்டஷாலியாக உணர்கிறேன் (i’m feeling Lucky):
நீங்கள் கூகுளில் தேடப்போகும் வார்த்தைகளைக் கொடுத்து “i’m feeling Lucky” என்ற பட்டனை க்ளிக் செய்தால், அந்த தேடல் வார்த்தைகளுக்கு கூகுளில் முதலில் வரும் தளத்திற்கு நேரடியாக கொண்டு செல்லும். உதாரணத்திற்கு கூகுளில் “ப்ளாக்கர் நண்பன்” என்று கொடுத்து “i’m feeling Lucky” என்பதை க்ளிக் செய்தால், நேரடியாக ப்ளாக்கர் நண்பன் தளத்திற்கு நீங்கள் செல்லலாம்.
இந்த வசதி முன்னரே அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது கூகுளில் நாம் டைப் செய்ய செய்ய “Instant Search” என்னும் வசதியால் உடனடியாக தேடல் முடிவுகளைக் காட்டுவதால் இது அவ்வளவாக இனி பயன்படாது.
ஆனால் இந்த “i’m feeling Lucky” பட்டனில் சில வசதிகள் மறைந்திருக்கின்றன. அது பற்றிய சிறிய வீடியோவை (கண்டிப்பாக ) பாருங்கள்.
கூகுளில் i’m feeling Lucky பட்டன் மேல் மவுஸை நகர்த்தினால் அது விதவிதமான செய்திகளைக் காட்டும். அந்த செய்திகளும், அதை க்ளிக் செய்தால் என்னவாகும்? என்பதையும் மேலுள்ள வீடியோவில் பார்க்கலாம்.
i’m feeling Wonderful – இதனை கிளிக் செய்தால் உலக அதிசயங்கள் பற்றிய கூகுள் World Wonders Project பக்கத்திற்கு செல்லும். Streetview முறையில் அவற்றைப் பார்க்கலாம்.
i’m feeling Trendy – இதனை கிளிக் செய்தால் Google Hot Trends பக்கத்திற்கு செல்லும். அங்கே கூகுளில் அதிகம் தேடக்கூடிய தலைப்புகளை பார்க்கலாம்.
i’m feeling Doodley – இதனை கிளிக் செய்தால் இதுவரை வந்துள்ள கூகுள் டூடுல்கள் அனைத்தும் உள்ள பக்கத்திற்கு செல்லும்.
i’m feeling Puzzle – இதனை க்ளிக் செய்தால் “A google a day” என்னும் புதிர் தளத்திற்கு செல்லும். அங்கே கூகுளைப் பயன்படுத்தி புதிர்களுக்கு பதில் தரலாம்.
i’m feeling Stellar – இதனை க்ளிக் செய்தால் இரண்டு பக்கத்திற்கு செல்லும். ஒன்று, நட்சத்திரங்கள் பற்றிய பட தேடல் (image search result) முடிவு பக்கம். இன்னொன்று, நட்சத்திரங்கள் பற்றிய Google Earth பக்கம்.
i’m feeling Artistic – இதனை க்ளிக் செய்தால் பிரபல ஓவியங்களை தொகுத்து வைத்திருக்கும் Google Art Project தளத்திற்கு செல்லும்.
i’m feeling Playful – இதனை க்ளிக் செய்தால் கூகுளில் முன்பு வந்த Animated Doodle பக்கத்திற்கு செல்லும்.
i’m feeling Hungry – இதனை க்ளிக் செய்தால் உணவகங்கள் பற்றிய தேடல் முடிவுகள் பக்கத்திற்கு செல்லும்.
பயன்படுத்தி பார்த்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.
அட இதுலயும் இவ்வளவு விஷயம் இருக்கா பாஸ்
New information for me . I will try sir
அருமையான தகவல் நண்பரே
நன்றி…
இது எதற்க்கென்றே தெரியாமல் இருந்தேன்.
தகவலுக்கு நன்றி
பயனுள்ள தகவல் நன்றி
Wow! நன்றி நல்ல தகவல்கள்
பயனுள்ள தகவல் நன்றிங்க…
பாத்துவோம்