தேடல் முடிவுகளை நண்பர்களுடன் பகிரலாம்

பேஸ்புக் வந்ததிலிருந்து சமூக வலைத்தளங்களின் முக்கியத்துவத்தை கூகுள் நன்கு உணர்ந்துள்ளது. பேஸ்புக்கிற்கு போட்டியாக கொண்டு வந்துள்ள கூகுள் ப்ளஸ் தளத்தை கிட்டத்தட்ட தனது எல்லா தயாரிப்புகளிலும் கொண்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக கூகுள் தேடல் முடிவுகளை கூகுள் ப்ளஸ் நண்பர்களுடன் பகிரும் வசதியை தந்துள்ளது.

நீங்கள் கூகுள் கணக்கில் உள்நுழைந்திருக்கும் போது, கூகுள் தளத்தில் ஏதாவதை தேடினால் அது தொடர்பான முடிவுகள் வரும். அதன் அருகிலேயே Share என்று காட்டும்.

அதனை கிளிக் செய்து கூகுள் ப்ளஸ் தளத்தில் நண்பர்களுடன் பகிரலாம்.

இந்த வசதி எனக்கு நல்லதாக படவில்லை. தேடல் முடிவுகளில் காட்டும் தளத்தை உள்ளே சென்று பார்க்காமலேயே நண்பர்களுடன் பகிர்வது சரியானதல்ல. சில நேரங்களில் வேண்டுமானால் பயன்படலாம்.

இந்த வசதியையும் சோதனை முறையில் அறிமுகப்படுத்தியுள்ளதா? என்று தெரியவில்லை.


டிஸ்கி: பதிவு முடிந்தது.

இதையும் படிங்க:  Hunt For Hint 3 - புதிர் வேட்டை!

16 thoughts on “தேடல் முடிவுகளை நண்பர்களுடன் பகிரலாம்”

  1. இது ஒரு வகையில் பயனுள்ளதாகவே இருக்கும் என்று நினைக்கிறேன்! பகிர்வுக்கு நன்றி நண்பா!

  2. இரண்டு நாளுக்கு முன்பு தன் இந்த வசதியை பார்த்தேன் (கூகிள் தேடிட்டு இருக்கும் போது தெரியாமல் கை தவறி அந்த ஷேர் அழுதிட்டேன் ,அப்ப தன் பார்த்தேன் 🙂

  3. வணக்கம் நண்பர்களே,

    உங்களுக்கும் வெப்சைட் ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம உள்ளதா..? ஆனால் வெப்டிசைனிங் தெரியவில்லையா…..? கவலையை விடுங்க. ZHosting.in என்றொரு நிறுவனம் இலவசமாக வெப்டிசைனிங் செய்து தருகிறார்கள். அவர்கள் மூலம் நீங்கள் தொடங்கும் வெப்சைட்டுகளுக்கு இலவசமாகவே டிசைன் செய்து தருகிறார்கள். நீங்களும் வேண்டுமென்றால் முயற்சி செய்து பாருங்களேன்.