உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்கும் இந்தியாவின் தாஜ்மஹால் விரைவில் கூகுள் தெருப்பார்வைக்கு வருகிறது. இனி வீட்டிலிருந்தே எந்த செலவும் இல்லாமல் தாஜ்மஹாலை சுற்றிப் பார்க்கலாம்.
கூகுள் மேப்பில் உள்ள தெருப்பார்வை (Street View) வசதியைப் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். உலகத்தில் உள்ள பிரபல கட்டிடங்கள், பாரம்பரிய சின்னங்கள் மற்றும் சாலைகளை 360 டிகிரி படங்களாக நேரில் பார்ப்பது போன்ற வசதி.
தற்போது தாஜ்மஹால் உள்பட இந்தியாவில் உள்ள நூறு பாரம்பரிய புராதான சின்னங்களை தெருப்பார்வைக்கு கொண்டு வரப்போகிறது கூகுள். இதற்காக இந்தியத் தொல்லியல் ஆய்வகத்துடன் (Archaeological Survey of India (ASI) ) இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
தாஜ்மஹாலை சுத்தி பார்க்க தயாரா?
நாங்க ரெடி
SALAM,
நல்ல வசதி தான்..I am waiting
நல்ல வசதி
நல்ல தகவல்! நன்றி!
தகவலுக்கு நன்றி! இப்படியே போனால் இனி தனிமைக்கு இடமில்லை. யாரோ நோக்குவது என்ற உணர்வுதான் மிஞ்சும்.
aha…
nice post