நீங்கள் இந்தியா, ஆஸ்திரேலியா தவிர்த்து பிற நாடுகளில் இருந்தால், சில ப்ளாக்கர் வலைத்தளங்கள் துள்ளிக் குதிப்பதைப் பார்க்கலாம். அதாவது சில வலைப்பூக்கள் தொடர்ந்து Refresh ஆகிக் கொண்டிருக்கும். இதனால் வாசகர்கள் அந்த தளத்தை சரியாக படிக்க முடியாது, பின்னூட்டம் இட முடியாது. இதற்கு காரணம் என்ன? தீர்வு என்ன?
காரணம் என்ன?
இந்த பிரச்சனை பற்றி தெரிந்துக் கொள்ள கொஞ்சம் ப்ளாஸ்பேக். அதை தணிக்கைக்கு தயாரானது ப்ளாக்கர் பதிவில் சென்று படியுங்கள்.
ப்ளாக்கர் தளம் இதுவரை உலகம் முழுவதும் இலவச ப்ளாக்கர் தளங்களில் .com என்ற டொமைனை பயன்படுத்திவந்ததை மாற்றி இனி அந்தந்த நாடுகளுக்கான டொமைன்களை பயன்படுத்தும். இது Country-code top level domain எனப்படும். உதாரணத்திற்கு ஒருவர் உங்கள் ப்ளாக்கை இந்தியாவிலிருந்து பார்க்கும்போது .blogspot.in என்ற முகவரிக்கும், ஆஸ்திரேலியாவிலிருந்து பார்த்தால் .blogspot.com.au என்ற முகவரிக்கும் மாறிவிடும்.
இது போல முகவரி மாறுவதால் திரட்டியில் சேர்ப்பது மற்றும் அலெக்சா மதிப்பு (Alexa Rank) ஆகியவற்றில் பிரச்சனை ஏற்படும். அதனை சரி செய்வதற்காக கடந்த வருடம் இரண்டு விதமான ஜாவா ஸ்க்ரிப்ட் (Java Script) நிரல்கள் இணையத்தில் வெளியானது. இதனை தமிழ் பதிவர்கள் உள்பட பல பதிவர்கள் பயன்படுத்துகிறார்கள். அவற்றில் ஒன்று,
<script>
if ((window.location.href.toString().indexOf(‘.com/’))==’-1′) {
window.location.href =window.location.href.toString().replace(‘.blogspot.in/’,’.blogspot.com/ncr/’).replace(‘.blogspot.com.au/’,’.blogspot.com/ncr/’);
}
</script>
மேலேயுள்ள நிரலை பயன்படுத்தும் தளங்களில் தான் Refresh ஆகும் பிரச்சனை உள்ளது. காரணம் இந்த நிரலில் .in, .com.au ஆகிய முகவரிகளை மட்டும் .com முகவரிக்கு திருப்பிவிடும்படி அமைக்கப்பட்டுள்ளது.
மற்ற நாடுகளின் முகவரியில் இருந்து பார்த்தால் தொடர்ந்து Refresh ஆகும்.
தீர்வு என்ன?
மேலே உள்ள நிரலை சேர்த்திருப்பவர்கள் Gadget-ல் தான் சேர்த்திருப்பார்கள். அதனை முதலில் நீக்கிவிடுங்கள். Refresh பிரச்சனை தீர்ந்துவிடும்.
நாடுகளுக்கு ஏற்ப நம் முகவரி மாறுவதை தடுக்க,
Blogger Dashboard => Template பகுதிக்கு சென்று, Edit HTML என்பதை க்ளிக் செய்து,
<b:include data=’blog’ name=’all-head-content’/>
என்ற நிரலுக்கு கீழே கீழுள்ள நிரலை சேர்க்கவும்.
<script type=”text/javascript”>
var blog = document.location.hostname;
var slug = document.location.pathname;
var ctld = blog.substr(blog.lastIndexOf(“.”));
if (ctld != “.com”) {
var ncr = “http://” + blog.substr(0, blog.indexOf(“.”));
ncr += “.blogspot.com/ncr” + slug;
window.location.replace(ncr);
}
</script>
பிறகு Save கொடுக்கவும். அவ்வளவு தான்!
ஒருவேளை பதிவர் இதை செய்யவில்லை என்றால் வாசகர்கள் நாம் எப்படி படிக்க வேண்டும்?
மிக எளிது! வலைப்பூ முகவரியில் இறுதியாக .com/ncr என்று கொடுத்தால் அந்த வலைப்பூ .com முகவரியிலே இருக்கும், Redirect ஆகாது.
உதாரணத்திற்கு http://malaithural.blogspot.com/ncr
NCR என்பதன் அர்த்தம் No Country Redirect ஆகும். இதை தான் மேலே உள்ள ஜாவா நிரலில் செய்திருக்கிறார்கள்.
நன்றி பதிவுக்கு
இப்படி ஒன்னு இருக்கா
Thanks Basith… couple of blogs were refreshing all the time for the past few weeks… I could not contact them as well…
Thanks for the information… I will pass this blog url to them…
//ஒருவேளை பதிவர் இதை செய்யவில்லை என்றால் வாசகர்கள் நாம் எப்படி படிக்க வேண்டும்?//
இதைதான் தேடிட்டிருந்தேன் சகோ பாஸித். நன்றி, ஜஸாகல்லாஹ் ஹைரா 🙂
சிறிது காலத்துக்கு முன்னர் இரண்டு சகோஸ் எனது வலைப்பூ இப்படி ரீ லோட் ஆகிக்கொண்டே துடிப்பதாக சொன்னார். இதை சரி செய்ய தீர்வுக்கு கூகுளில் தேடிபோது, ஒரு தளத்தில் சொல்லப்பட்டது போல சரி செய்தேன். அவர்களுக்கு உடனே என் தளம் ஓகே ஆகி விட்டது.
அருமையான தகவல் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ !
//No Country Redirect// அருமையான பதிவு சூப்பர்
//துள்ளிக் குதிக்கும் ப்ளாக்-தீர்வு என்ன? // மண்டைல கட்டை எடுத்து 2 போடு போட்டீங்கன்னா உக்காந்துடும் 🙂
நல்ல பகிர்வு..நன்றி
மிக்க நன்றி…நன்றி…நன்றி.
அருமையான செய்தி!, மிக்க நன்றி
உடனே சென்னைப் பித்தன் பதிவை சோதனை செய்தேன்.
சரியானது .மீண்டும் நன்றி
மிக்க நன்றிங்க ..நடனசாபாபதி ஐயா அவர்கள் உங்க லிங்க் தந்தார் ..இப்ப என்னால் ப்லாகுக்குள் சென்று பின்னூட்டமிட முடிந்தது பகிர்வுக்கு மிக்க நன்றி
நல்ல பகிர்வு. பலருக்கு உதவும்.
தகவலுக்கு நன்றிங்க
Nalla padhivu. Namma thalaththukkum konjam varalame?
நன்றி பாஸ்
நல்ல பதிவு. மிகவும் உபயோகமாக இருந்தது.
can i use this link to comment some bloggers who experience this problem?
many thanks.
தாராளமாக!
அஸ்ஸலாமு அலைக்கும் …. நண்பா எனது வலைப்பூவில் A username and possword being request byhttps://gj37765.googlecode.com. The site says: "Google Code Subversion Repository" இவ்வாறு வருகிறது அதை எப்படி சரிசெய்வது என்பதை அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி..
வ அழைக்கும் ஸலாம்
pop-up facebook box வைத்துள்ளீர்கள், அதில் தான் பிரச்சனை. அந்த நிரலை நீக்கிவிடுங்கள்.
வணக்கம் சகோதரரே! உங்கள் தன்னலமற்ற இவ் அரிய பணி மிகச்சிறப்பு.
என்போன்ற ஏராளமான பலருக்கு தெரியாத பலவிடயங்களை தாய்மொழியாம் தமிழ்மொழியில் மிகமிக துல்லியமாகச் சிறப்பாக இங்கு தந்துதவும் உங்கள் சேவை மனப்பான்மையை போற்றுகிறேன்.
மிக்க நன்றி! தொடர்ந்தும் பல விஷயங்களை தாருங்கள்.
அறிய ஆவலுடன் உள்ளேன்.
வாழ்த்துக்கள்!
நன்றி பகிர்வுக்கு சகோ.