திருடனைக் காட்டிக் கொடுத்த பேஸ்புக்

பேஸ்புக் தளத்தால் ஆபத்து அதிகம் இருந்தாலும் நன்மைகளும் இருக்கத் தான் செய்கின்றன. இன்டர்நெட் சென்டரில் திருடியவர்களை சமீபத்தில் காட்டிக் கொடுத்துள்ளது பேஸ்புக். அது பற்றிய செய்தியினை இங்கே பார்ப்போம்.

கொலம்பியாவில் உள்ள களி (Cali) என்னும் நகரில் இன்டர்நெட் சென்டருக்கு சென்ற இரண்டு நபர்கள் இணையத்தைப் பயன்படுத்தியுள்ளார்கள். சிறிது நேரம் கழித்து தாங்கள் வைத்திருந்த ஆயுதங்களை காட்டி மிரட்டி கடை உரிமையாளரிடமிருந்து பணத்தை திருடிக் கொண்டு சென்றுவிட்டனர்.

இன்டர்நெட் சென்டரின் நிர்வாகி திருடர்கள் பயன்படுத்திய கணினியை சோதித்த போது, அவர்கள் பேஸ்புக் தளத்தை பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது. மேலும் அவர்கள் Logout செய்ய மறந்துவிட்டதையும் கண்டுபிடித்தார். போலீஸ் வந்ததும் பேஸ்புக் பக்கத்தில் உள்ள தகவல்களைக் கொண்டு அவர்களை கைது செய்தது.

திருடனை பேஸ்புக் காட்டிக் கொடுத்தது இது முதல் முறை அல்ல. 2009-ஆம் ஆண்டு மேற்கு விர்ஜினியா நகரில் ஜொனாதன் பார்கர் என்னும் இளைஞன் ஒரு வீட்டில் சென்று இரண்டு வைர மோதிரங்களை திருடியுள்ளான். திருடச் சென்றவன் அங்குள்ள லேப்டாப்பில் பேஸ்புக் தளத்தை பயன்படுத்தியுள்ளான். ஆனால் Logout செய்யாமல் சென்றுவிட்டான். இதன் மூலம் அவனை கைது செய்தது போலிஸ்.

Moral of the Stories: பேஸ்புக் பயன்படுத்திய பிறகு Log-out செய்ய மறவாதீர்கள்!!! 😀 😀 😀

நன்றி: Cnet News

உங்கள் மொபைல் எண்ணின் பெயர் என்ன?

நாம் வைத்திருக்கும் ஒவ்வொரு மொபைல் எண்ணிற்கும் ஒரு பெயர் இருக்கிறது. அதை கண்டுபிடிக்க பேஸ்புக் நமக்கு உதவுகிறது.

அதை கண்டுபிடிக்க பேஸ்புக் Status Message, அல்லது Comment Box-இல் @[xxx:0] என்று டைப் செய்து Post செய்யுங்கள்.

இதில் xxx என்பதற்கு பதிலாக உங்கள் மொபைல் எண்ணின் கடைசி மூன்று எண்களைக் கொடுங்கள்.

உதாரணத்திற்கு என்னுடைய எண் 143 என்பதால் @[143:0] என்று கொடுக்க வேண்டும்.

மேலே உள்ளது போல கொடுத்தால் உங்கள் மொபைல் எண்ணின் பெயர் என்னவென்று சொல்லிவிடும்.

என் மொபைல் எண்ணின் பெயர் Hana Lee. அப்ப உங்களோட மொபைல் எண்ணின் பெயர்????

விளக்கம்:

 இது விளையாட்டுக்கு தான். உண்மையில் இது பேஸ்புக்கில் உள்ள மற்றவர்களின் ப்ரொஃபைல் அல்லது பக்கத்தின் ID எண்ணை வைத்து பெயராக மாற்றம் செய்கிறது.

உதாரணத்திற்கு ப்ளாக்கர்  நண்பன் பேஸ்புக் பக்கத்தின் ஐடி எண் 120314124710521. இதனை @[120314124710521:0] என்று கொடுத்தால் “ப்ளாக்கர் நண்பன்” என்று பெயராக மாற்றும்.

டிஸ்கி: எங்கு பார்த்தாலும் பேஸ்புக் ஆக்ரமித்துக் கொண்டுள்ளது. பாருங்கள், ப்ளாக்கர் நண்பன் தளத்தில் பேஸ்புக் பற்றி தொடர்ச்சியாக வரும் நான்காவது பதிவு இது!!!

14 thoughts on “திருடனைக் காட்டிக் கொடுத்த பேஸ்புக்”

  1. தற்போது சில மாதம்மாய் பேஸ்புக் யுஸ் செய்வதே இல்லை ட்விட்டர் அதிகம் பயன்படுதுறேன்

  2. Moral of the Stories 1: அவனவன் வேலை என்னவோ அதை மட்டும் தான் பார்க்கணும் (வந்த வேலை என்னவோ அதை மட்டும் பார்த்திட்டு ஒழுக்கமா போயிருந்தா இப்பிடி நடக்குமா.? ஹி ஹி ஹி)

  3. ஸலாம் சகோ.அப்துல் பாசித்,
    வெட்டித்தனமான பதிவு.

    லாக்கை உடைத்த்து திருடப்போறவன்… அதை விட்டுவிட்டு அங்கே உள்ள கணினியில் முகநூல் உபயோகிப்பானாம்… லாக் அவுட் ஆக மாட்டானாம்..! பிஸ்கோத்து கதை..! இதை சொல்லி இதுக்கு ஒரு நீதி சொல்றேன் பேர்வழி என்று திருடனுக்கு டிப்ஸ் குடுக்கறதும் சகிக்கலை..!

    அப்புறம்…மூன்று நம்பராம்… கமேண்டாம்… சிம் கார்டு பேரு தெரியுமாம்..! அந்த திருட்டுபயளுக்கு 786 என்று ஜெயிலில் ஒரு நம்பர் கொடுத்து இருப்பாங்கல்ல…? அதை போட்டாலும் அவன் பேரை சொல்லாது..! அத்தனையாவது முகநூல் உறுப்பினரைதான் சொல்லும்..!

    நான்கு நம்பர் உள்ள கார்… பைக்… நம்பர் கூட போடலாம்..! அந்த கார்… பைக்… பேரை சொல்லாது..! அத்தனையாவது முகநூல் உறுப்பினரைதான் சொல்லும்..!

    இனிமேலாவது… உருப்படியான நல்ல போஸ்டுகளை போடவும்..!

    செவ்வாய் கிரகம்… முகநூல் அப்டேட்…திருடன்… நீதி… ச்சே…! ஏன் இப்படி "மொக்கை நண்பன்" ஆயிட்டீங்க சகோ..?

  4. தொடர் பதிவு போல் பேஸ்புக் பற்றி வந்து கொண்டே உள்ளது ..

    பகிர்வுக்கு நன்றி சகோ

  5. ~முஹம்மத் ஆஷிக் citizen of world~May 16, 2012 12:33 PM

    ஸலாம் சகோ.அப்துல் பாசித்,
    வெட்டித்தனமான பதிவு.

    லாக்கை உடைத்த்து திருடப்போறவன்… அதை விட்டுவிட்டு அங்கே உள்ள கணினியில் முகநூல் உபயோகிப்பானாம்… லாக் அவுட் ஆக மாட்டானாம்..! பிஸ்கோத்து கதை..! இதை சொல்லி இதுக்கு ஒரு நீதி சொல்றேன் பேர்வழி என்று திருடனுக்கு டிப்ஸ் குடுக்கறதும் சகிக்கலை..!

    My comment also same.

    Thanks Mr. Ashique

  6. ~முஹம்மத் ஆஷிக் citizen of world~May 16, 2012 12:33 PM

    ஸலாம் சகோ.அப்துல் பாசித்,
    வெட்டித்தனமான பதிவு.

    லாக்கை உடைத்த்து திருடப்போறவன்… அதை விட்டுவிட்டு அங்கே உள்ள கணினியில் முகநூல் உபயோகிப்பானாம்… லாக் அவுட் ஆக மாட்டானாம்..! பிஸ்கோத்து கதை..! இதை சொல்லி இதுக்கு ஒரு நீதி சொல்றேன் பேர்வழி என்று திருடனுக்கு டிப்ஸ் குடுக்கறதும் சகிக்கலை..!

    My comment also same.

  7. முன்னாடி எல்லாம் திருடப் போன எடத்துல சாப்பிடுவானுங்க இப்போ ஹும் எல்லாம் பேஸ்புக் மயம்.