திரட்டிகளின் ஓட்டுப் பட்டைகளை இணைக்க

நம் தளத்திற்கு அதிகமான வாசகர்களை கொண்டுவர உதவி செய்வது திரட்டிகள் தான். திரட்டிகள் பற்றியும், அதன் ஓட்டுபட்டைகளை இணைப்பது பற்றியும் நமது ப்ளாக்கை பிரபலமாக்குவது எப்படி? என்ற தொடரின் முதல் இரண்டு பகுதிகளில் பார்த்தோம். தற்போது அதில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால் ஓட்டுப் பட்டைகள் இணைப்பது பற்றி மேலும் சில தகவல்களுடன் இங்கு மீள்பதிவு செய்கிறேன்.

முதலில் திரட்டிகளின் நிரல்களை பார்ப்போம்.

இன்ட்லி ஓட்டு பட்டைக்கான நிரல்:

<script type='text/javascript'> button="hori"; lang="ta"; submit_url ="<data:post.url/>" </script> <script src='http://ta.indli.com/tools/voteb.php' type='text/javascript'></script>

உலவு ஓட்டு பட்டைக்கான  நிரல்:

<script type='text/javascript'>submit_url = "<data:post.url/>"</script> <script src='http://ulavu.com/evb/button.php' type='text/javascript'/>

தமிழ் 10 ஓட்டு பட்டைக்கான  நிரல்

<script type="text/javascript"> submit_url ="<data:post.url/>" </script> <script type="text/javascript" src="http://tamil10.com/submit/evb/button.php"> </script> 

யுடான்ஸ் ஓட்டுபட்டைக்கான நிரல்:

<script expr:src=’ &quot;http://udanz.com/tools/services.php?url=&quot; + data:post.url + &quot;&amp;adncmtno=&quot; + data:post.numComments + &quot;&amp;adnblogurl=&quot; + data:blog.homepageUrl + &quot;&amp;photo=&quot; + data:photo.url ‘ language=’javascript’ type=’text/javascript’/>

இனி ப்ளாக்கில் எப்படி இதனை இணைப்பது? என்று பார்ப்போம்.

1. முதலில் Blogger Dashboard => Template பக்கத்திற்கு செல்லுங்கள்.

2. அங்கு வலது புறம் மேலே Backup/Restore என்னும் பட்டனை க்ளிக் செய்து உங்கள் டெம்ப்ளேட்டை பேக்கப் எடுத்துக் கொள்ளுங்கள்.

3. பிறகு அதே பக்கத்தில் Edit Html என்பதை க்ளிக் செய்து, Proceed என்னும் பட்டனை க்ளிக் செய்து, Expand Widget Templates என்பதை க்ளிக் செய்யவும்.

4. பிறகு பின்வரும் நிரலை கண்டுபிடிக்கவும்.

<data:post.body/>

இந்த நிரல் உங்கள் பதிவு உள்ளடக்கத்திற்கான (Content) நிரலாகும். தற்போதைய ப்ளாக்கர் மாற்றங்களினால் இந்த நிரல் நம்முடைய டெம்ப்ளேட்டை பொறுத்து ஒன்றுக்கு மேற்பட்டவைகள் இருக்கும். அதனால் ஓவ்வொரு நிரலுக்கும் பின்னால் மேலே உள்ள ஓட்டுபட்டைகளின் நிரல்களை Paste செய்து பார்க்கவும்.

கடைசியிலிருந்து முயற்சிக்கவும். அதிகமான டெம்ப்ளேட்களில் கடைசி நிரல் தான் சரியான நிரலாக இருக்கும்.

5. பிறகு Save Template என்பதை க்ளிக் செய்யவும்.

உதாரணத்திற்கு ப்ளாக்கர் நண்பன் தளத்தில் இணைத்துள்ள ஓட்டுபட்டைகளின் நிரல்கள் (ட்விட்டர், பேஸ்புக், கூகிள் ப்ளஸ் சேர்த்து):

<b:if cond=’data:blog.pageType == &quot;item&quot;’>
<a expr:share_url=’data:post.url’ name=’fb_share’ rel=’nofollow’ type=’box_count’/> <script src=’http://static.ak.fbcdn.net/connect.php/js/FB.Share’ type=’text/javascript’/> <a class=’twitter-share-button’ data-count=’vertical’ href=’http://twitter.com/share’>Tweet</a><script src=’http://platform.twitter.com/widgets.js’ type=’text/javascript’/> <g:plusone size=’tall’/> <script type=’text/javascript’> button=&quot;hori&quot;; lang=&quot;ta&quot;; submit_url =&quot;<data:post.url/>&quot; </script> <script src=’http://ta.indli.com/tools/voteb.php’ type=’text/javascript’/> <script src=’http://tamil10.com/submit/evb/button.php’ type=’text/javascript’> </script>  <script expr:src=’ &quot;http://udanz.com/tools/services.php?url=&quot; + data:post.url + &quot;&amp;adncmtno=&quot; + data:post.numComments + &quot;&amp;adnblogurl=&quot; + data:blog.homepageUrl + &quot;&amp;photo=&quot; + data:photo.url ‘ language=’javascript’ type=’text/javascript’/> </b:if>

*** ஓட்டுப் பட்டைகள் முகப்பு பக்கத்தில் தெரிய வேண்டாம் என நினைத்தால் மேலே உள்ள நிரலில் சிவப்பு நிறத்தில் உள்ள முதல் வரியையும், கடைசி வரியையும் சேர்க்கவும்.

இதையும் படிங்க:  ப்ளாக்கில் Read More Button-ஐ வைக்க..

 நிரலை சேர்க்கும் போது கவனமாக சேர்க்கவும். ஏதாவது ஒரு எழுத்து விடுபட்டாலும் பிழை என்று காட்டும்.

நீங்கள் முகப்பு பக்கத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பதிவுகளை ரீட்மோர் மூலம் வைத்திருந்தால், ஓட்டுபட்டைகளை முகப்பு பக்கத்தில் தெரியாதவாறு வைக்கவும். இல்லையெனில் உங்கள் தளம் லோட் ஆக அதிக நேரம் எடுக்கும்.

டிஸ்கி: இந்த நிரல்களுக்கு பதிலாக பிளாக்கர் பிரச்சனைக்கு முழுமையான தீர்வு என்ற பதிவில் உள்ள மாற்றி அமைக்கப்பட்ட நிரல்களை பயன்படுத்தவும்.

58 thoughts on “திரட்டிகளின் ஓட்டுப் பட்டைகளை இணைக்க”

  1. மாப்ள பதிவர்கள் அடிக்கடி தேடும் பதிவுய்யா…பகிர்வுக்கு நன்றி…அப்படியே இந்த டாட் காம் மாறுவது பற்றி போடப்பாருங்க…கிரடிட் காட் இல்லாம டெபிட் வச்சி எப்படி பண்றதுன்னு..ஹிஹி…எனக்கு ரொம்ப தேவைப்படுது..ஏன்னா நான் உங்கள போல தொழில்நுட்பம் தெரிஞ்ச பதிவர் இல்லைய்யா!

  2. தமிழ்மணத்தில் பதிவை எப்படி இணைப்பது இணைத்தால் பதிவின் தலைப்பு மட்டும்மே தெரிகிறது

  3. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
    அஸ்ஸலாமு அலைக்கும் சகோ

    பயனுள்ள தகவல்.பகிர்வுக்கு நன்றி.

    நம்ம சகோதரர் என் இரண்டு பிளாக்கும் யுடான்ஸ் ஓட்டு பட்டை இணைத்து கொடுத்தார்கள்.

    மீண்டும் அவருக்கு ஜசக்கல்லாஹ் ஹைரன்.

  4. //ஆமினா said… 2

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

    நல்லதொரு பகிர்வு சகோ
    //

    வ அலைக்கும் ஸலாம்

    நன்றி சகோ.!

  5. //மாய உலகம் said… 3

    பயனுள்ள பகிர்வு நண்பா… ஏனைய பேருக்கு உதவியாக இருக்கும்.. பகிர்வுக்கு நன்றி//

    நன்றி நண்பா!

  6. //M.R said… 6

    அருமை தகவல் நண்பரே ,பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நண்பரே//

    நன்றி நண்பரே!

  7. //விக்கியுலகம் said… 7

    மாப்ள பதிவர்கள் அடிக்கடி தேடும் பதிவுய்யா…பகிர்வுக்கு நன்றி…//

    நன்றி நண்பா!

    //அப்படியே இந்த டாட் காம் மாறுவது பற்றி போடப்பாருங்க…கிரடிட் காட் இல்லாம டெபிட் வச்சி எப்படி பண்றதுன்னு..ஹிஹி…எனக்கு ரொம்ப தேவைப்படுது..ஏன்னா நான் உங்கள போல தொழில்நுட்பம் தெரிஞ்ச பதிவர் இல்லைய்யா!//

    🙂 🙂 🙂

    எழுத முயற்ச்சிக்கிறேன் நண்பா! இது பற்றி படிக்க சகோ. பலே பிரபு அவர்களின் தளத்தை பார்க்கவும். அவர் இதை பற்றி எழுதியிருக்கிறார்.

    முகவரி: http://baleprabu.blogspot.com

  8. //முனைவர்.இரா.குணசீலன் said… 8

    தேவையான பகிர்வு..

    அடிக்கடி இது தேவைப்படுகிறது..
    //

    நன்றி நண்பரே!

  9. புதிய நண்பர்கள் மற்றும் டெம்ளேட்டை மாற்றும் நண்பர்களுக்கு ஓட்டுப்பட்டைகள் சேர்க்க மிகவும் உதவியாய் இருக்கும் பயனுள்ள பகிர்வுக்கு நன்றி நண்பா!

  10. //Anonymous said… 14

    தமிழ்மணத்தில் பதிவை எப்படி இணைப்பது இணைத்தால் பதிவின் தலைப்பு மட்டும்மே தெரிகிறது//

    உங்கள் தளமுகவரியை சொல்ல முடியுமா நண்பா? அது தெரிந்தால் தான் தமிழ்மணத்தில் பார்க்க முடியும்.

    மேலும், Blogger Dashboard => Settings => Others பகுதிக்கு சென்று, Site Feed என்ற இடத்தில், Allow Blog Feed என்பதில் என்ன இருக்கிறது என்று பார்க்கவும். அதில் None என்று இருந்தால், அதை Short என்று மாற்றவும்.

  11. //ஆயிஷா அபுல். said… 15

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
    அஸ்ஸலாமு அலைக்கும் சகோ

    பயனுள்ள தகவல்.பகிர்வுக்கு நன்றி.

    நம்ம சகோதரர் என் இரண்டு பிளாக்கும் யுடான்ஸ் ஓட்டு பட்டை இணைத்து கொடுத்தார்கள்.

    மீண்டும் அவருக்கு ஜசக்கல்லாஹ் ஹைரன்.
    //

    வ அலைக்கும் ஸலாம்.

    நன்றி சகோ.!

  12. //மாணவன் said… 20

    புதிய நண்பர்கள் மற்றும் டெம்ளேட்டை மாற்றும் நண்பர்களுக்கு ஓட்டுப்பட்டைகள் சேர்க்க மிகவும் உதவியாய் இருக்கும் பயனுள்ள பகிர்வுக்கு நன்றி நண்பா!//

    நன்றி நண்பா!

  13. மிகவும் பயனுள்ள பதிவு. நேற்றுதான் முயன்று கொண்டிருந்தேன், பணியை எளிமைப் படுத்தி விட்டீர்கள். நன்றி. புது இண்ட்லியில் ஓட்டு போட முடியவில்லை, மற்றவர்களுக்கு மட்டும் எப்படி வேலை செய்கிறது?

  14. //சம்பத்குமார் said… 36

    பயனுள்ள தகவல் நண்பரே..

    தொடரட்டும்

    நன்றியுடன்
    சம்பத்குமார்//

    நன்றி நண்பரே!

  15. //ந.ர.செ. ராஜ்குமார் said… 38

    மிகவும் பயனுள்ள பதிவு. நேற்றுதான் முயன்று கொண்டிருந்தேன், பணியை எளிமைப் படுத்தி விட்டீர்கள். நன்றி. புது இண்ட்லியில் ஓட்டு போட முடியவில்லை, மற்றவர்களுக்கு மட்டும் எப்படி வேலை செய்கிறது?//

    நன்றி நண்பா! ஓட்டு பட்டை மேல்பகுதியில் க்ளிக் செய்ய வேண்டும்.

  16. //தமிழ்கிழம் said… 39

    நண்பா என்னுடைய template-ல் என்ற code இல்லை , தயவு செய்து உதவவும்.//

    //வெற்றி..வெற்றி.. வெற்றி.. அனைத்து வோட்டுபட்டைகளையும் வெற்றிகரகமாக இணைத்துவிட்டேன்…
    //

    மிக்க மகிழ்ச்சி நண்பா!

  17. முதன்முறையாக என் முயற்சியில் நான் உங்களால் வெற்றி
    பெற்றுள்ளேன் .அதுவும் நீங்கள் முயற்சித்த பாதையில் இன்னும்
    ஒரு வலைத்தளத்தினைத் திறந்தே பயிற்சி எடுத்தேன் .துணிவும்
    வந்துவிட்டது .எனக்கு தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை இணைக்கும்
    வழிமுறையைத் தருவீர்களா ?……..மிக்க நன்றி சகோ உங்கள் சேவை
    எம் போன்றவற்றிற்கு என்றுமே தேவை .வாழ்த்துக்கள் .நன்றி சகோ
    இப் பகிர்வுக்கு ……..

  18. //அம்பாளடியாள் said… 47

    முதன்முறையாக என் முயற்சியில் நான் உங்களால் வெற்றி
    பெற்றுள்ளேன் .அதுவும் நீங்கள் முயற்சித்த பாதையில் இன்னும்
    ஒரு வலைத்தளத்தினைத் திறந்தே பயிற்சி எடுத்தேன் .துணிவும்
    வந்துவிட்டது .எனக்கு தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை இணைக்கும்
    வழிமுறையைத் தருவீர்களா ?……..மிக்க நன்றி சகோ உங்கள் சேவை
    எம் போன்றவற்றிற்கு என்றுமே தேவை .வாழ்த்துக்கள் .நன்றி சகோ
    இப் பகிர்வுக்கு ……..
    //

    தங்கள் பாராட்டிற்கு நன்றி சகோ.! தமிழ்மணம் ஓட்டுப்பட்டையினை என் ப்ளாக்கில் இருந்து நீக்கிவிட்டேன். அதற்கான காரணங்களை இறைவன் நாடினால் நாளை தெரிந்துக் கொள்வீர்கள்.

    நீங்கள் இணைக்க நாடினால்,
    http://www.tamilmanam.net/tamilmanam/toolbar/blogger.html
    என்ற முகவரிக்குச் சென்று முயற்சிக்கவும்.

  19. நல்ல தகவல். நான் யுடான்ஸ் ஓட்டுப் பட்டையை இணைக்க வழி தெரியாமல் இருந்த போது, இந்த இடுகையை படிக்க நேர்ந்தது. இணைத்து விட்டேன். நன்றி.

    ஆனால், ஒரு படி கீழே தான் வருகிறது. ஒரே வரியில் வர மறுக்கிறதே! சரி செய்ய முடியுமா?

  20. அஸ்ஸலாமு அலைக்கும். தொடர்ந்தும் பிளாக்கர் தொடர்பான நல்ல பதிவுகள் பலவற்றைத் தருகிறீர்கள் நன்றி.
    தொடர்ந்தும் எழுதுங்கள்

  21. என்னுடைய புது வலைத்தளம் ஆரம்பித்து இவ்வளவு நாள் கஷ்டப்பட்டேன்…இன்றைக்கு தான் தீர்வு கிடைத்தது..உன் தளத்தை அலசி ஆராய்ந்ததில்…மிக மிக நன்றி தோழா…
    பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா?