தலைப்பை முதலில் எழுதுங்கள்…!

பதிவிற்கு இடைவெளி விட்டு இரண்டு நாள் கழிந்த நிலையில் ப்ளாக்கரில் தற்போது ஏற்பட்ட மாற்றம் பற்றி ஒரு குட்டி அப்டேட்! இந்த மாற்றத்தை நீங்கள் பிரச்சனை என்று நினைத்துவிடக் கூடாது என்பதற்காக!

நீங்கள் பதிவு எழுதும் போது முதலில் தலைப்பை எழுதுவீர்கள். சிலர் தலைப்பை முதலில் எழுதாமல் உள்ளடக்கத்தை முதலில் எழுதுவீர்கள். இனி தலைப்பை எழுதாமல் உள்ளடக்கத்தை எழுதத் தொடங்கினால் Required field must not be blank என்று பிழைச் செய்தி காட்டும்.

எழுதும் போது Ignore Warning என்பதை க்ளிக் செய்தால் அந்த செய்தி போய்விடும். ஆனால் தலைப்பில்லாமல் அந்த பதிவை உங்களால் சேமிக்கவோ, பிரசுரிக்கவோ முடியாது. அதனால், தலைப்பை முதலில் எழுதுங்கள்…!

“ஆடிய காலும், பாடிய வாயும்….” அப்படீன்னு கம்மென்ட் பண்ணக்கூடாது சொல்லிட்டேன்….!

இதையும் படிங்க:  உடான்ஸ் திரட்டியில் மால்வேர்

18 thoughts on “தலைப்பை முதலில் எழுதுங்கள்…!”

  1. ஆமாங்க… நானும் கவனித்தேன்..வேற வழியில்லாம தலைப்பை யோசித்து போட்டு விட்டு மீண்டும் டைப் செய்ய ஆரம்பித்தேன்…

  2. //"ஆடிய காலும், பாடிய வாயும்…." அப்படீன்னு கம்மென்ட் பண்ணக்கூடாது //
    பின்ன எப்படி கம்மென்ட் பண்ணணும்?

  3. எனக்கும் அடிக்கடி இப்படி எர்ரர் வரும். இதான் காரணமா?! தெரிந்துக் கொண்டேன். பகிர்வுக்கு நன்றி சகோ

  4. பாஆஆஆஆசித் எனக்கொரு டவுட்டு…

    இதுக்கு முன்னாடி நான் தலைப்பு இல்லாம சேர்த்து வச்சிருந்த பதிவு என்னாகும்…

    சொல்லுங்க பாஆஆஆஆசித் சொல்லுங்க
    சொல்லுங்க பாஆஆஆஆசித் சொல்லுங்க

    டமார் டுமீர் டாம் டீம்…

  5. ஆமா நண்பா, இந்த மாற்றத்தை நேற்று நானும் கண்டேன், இதற்க்கு முன் இப்படி இருந்ததில்லை..

    பதிவுலகமே ஸ்தம்பித்துப் போகும் நிலையில் இருந்த போது ஆபத்பாந்தவனாய் வந்த பதிவு ஆ ஹா ஹா இருந்தும் நல்ல பதிவு என்ற டெம்ப்லேட்டையும் சேர்த்துக் கொள்கிறேன்

  6. நண்பரே! அண்மைக்காலமாக உங்கள் பதிவுகளிலும், பிரபு கிருஷ்ணா போன்ற முன்னணிப் பதிவர்களின் பதிவுகளிலும் முகநூல் 'விருப்பம்' பொத்தானை அழுத்தினால் அது அப்படியே பகிர்வும் ஆகும்படியாகச் செய்திருக்கிறீர்களே, இது எப்படி? ஓய்வுக்குப் பின் வரும்பொழுது கற்றுத் தருகிறீர்களா?

  7. நான் வேர்டில் டைப் செய்து காப்பி பேஸ்ட் பண்ணுவதால் பெரிய பிரச்சனை இல்லை! நேற்றுதான் இந்த எர்ரர் மெஸேஜைப் பார்த்தேன்! இன்று முதலில் தலைப்பை எழுதிவிட்டு பேஸ்ட் செய்து விட்டேன்! தகவலுக்கு மிக்க நன்றி!

  8. நீங்கள் லைக் செய்யும் போது பேஸ்புக்கில் "இ.பு. ஞானப்பிரகாசன் Like This Link" என்று ஒரு Activity ஆக வரும். உங்கள் நண்பர்கள் அதை லைக் செய்யும் பட்சத்தில் அது ஒரு Status போல நமக்கு தோன்றும்.

  9. @இ.பு. ஞானப்பிரகாசன்

    நாங்கள் எதுவும் மாற்றம் செய்யவில்லை. அதே நிரல் தான்… பேஸ்புக் அமைவுகள் மாறியுள்ளது. 🙂

  10. வணக்கம்

    தொழில்நுட்பச் செய்திகளின் தொட்டிலாய் உன்வலை
    எழில்நுட்பம் ஊட்டும் இனித்து !

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு