தமிழ்10 நூலகத்தில் என் பதிவுகள்

திரட்டிகளில் முன்னணியில் இருக்கும் தமிழ்10 திரட்டி தற்போது தமிழ்10 நூலகம் என்னும் தளத்தை உருவாக்கியுள்ளனர். அதில் பதிவர்களின் பதிவுகளை அவர்கள் அனுமதியுடன் மின்னூலாக (PDF ஃபைலாக) மாற்றி, இலவசமாக வாசகர்கள் பதிவிறக்கும் வசதியை தருகின்றனர்.

இதில் முதலாவதாக ப்ளாக்கர் நண்பன் தளத்தில் வெளிவந்த “ப்ளாக் தொடங்குவது எப்படி?” என்ற தொடர்பதிவுகள் மின்னூல் வடிவில் வெளிவந்துள்ளது. அவர்கள் என்னிடம் அனுமதி கேட்டிருந்த போது அந்த தொடர் பாதி தான் எழுதியிருந்தேன். அதனால் தற்போது அந்த தொடரின் முதல் பத்து பகுதிகள் மட்டும் வெளிவந்துள்ளது. மற்றவை விரைவில் வரும் என நினைக்கிறேன்.

திரட்டி  நிர்வாகத்தினர் அனுமதி கேட்ட போது, மின்னூலின் அட்டை படம் ஒன்றையும் கேட்டிருந்தார்கள். எனக்கு டிசைனிங் தெரியாது என்பதால் சகோ. பிரபு கிருஷ்ணா அவர்கள் தான் மேலே உள்ள படத்தை இலவசமாக உருவாக்கி தந்தார். அவருக்கு என் மனமார்ந்த நன்றி!

புதிய தளத்தில் என்னுடைய பதிவுகள் முதலில் வந்ததில் மிகுந்த மகிழ்ச்சி. தமிழ்10 தள நிர்வாகிகளுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்10 நூலகம் முகவரி: http://tamil10.com/library/

நீங்கள் விரும்பினால் உங்கள் பதிவுகளையும் இதில் இணைக்கலாம். இது பற்றி தமிழ்10 தளத்தின் அறிவிப்பு:

தமிழ்10 நூலகத்தில் உங்கள் படைப்புகளை இணைக்கும் ஓர் புதிய முயற்சி

இதையும் படிங்க:  ஒபாமா இறந்துவிட்டதாக ட்விட்டரில் வதந்தி

48 thoughts on “தமிழ்10 நூலகத்தில் என் பதிவுகள்”

  1. நான் ஏற்கனவே வலைச்சரத்தில் சொல்லியது போல ப்ளாக் பற்றிய அடிப்படை விஷயத்தை தெரிந்துகொள்ள இந்த தொடர் பதிவு நிச்சயம் எல்லோருக்கும் பயனளிக்கும்! ப்ளாக் பற்றி ஒன்றுமே தெரியாதவர்கள் கூட இந்த தொடர் பதிவை வாசித்தால் நிச்சயம் நிறைய விஷயங்களை தெரிந்துகொள்ள முடியும்! இந்த அங்கீகாரத்திற்கு இந்த பதிவு ஏற்றதே!

    என்னைக்கேட்டால் உங்களது மற்றொரு பதிவான ப்ளாக்கை பிரபலமாக்குவது எப்படி என்ற தொடர் பதிவும் கூட இந்த அங்கீகாரத்திற்கு ஏற்றதுதான்! வாழ்த்துக்கள் நண்பா மேலும் பல ஏணிப்படிகளில் ஏறி சிகரத்தை எட்ட!

  2. நேற்றே இதை படித்தேன். வாழ்த்துகள் சகோ.

    என் டிசைன் முகப்பாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

  3. அன்பு நண்பா…. இந்த மகிழ்வான விஷயத்திற்கும் இன்னும் பல சிகரங்களை நீங்கள் எட்டவும் என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.

  4. ஸலாம்

    //மென்மேலும் உயர்வீர்கள்…//

    பாசித் பாய் இருக்க வுயரம் பத்தாத … இன்னமும் வுயரச் சொல்கிறீர்களே !!!!!

  5. வாழ்த்துகள் நண்பரே..!

    நேற்றுதான் தமிழ்10-ன் புதிய நூலக தளத்தைப் பார்வையிட்டேன்.

    தங்கள் தளத்தில் உள்ள ஒவ்வொரு பதிவுமே இவ்வாறு மின்னூலாக்கப்பட்டு சேமிக்கப்பட வேண்டும். அனைத்தும் பயனுள்ள தகவல்கள்.

    மீண்டு என்னுடைய வாழ்த்துகள்..

  6. அருமையான முயற்சி! இதற்கு tamil10 உங்கள் பதிவுகளை தேர்ந்தெடுத்தது மிக நல்ல தேர்வு! வாழ்த்துக்கள் நண்பரே! 🙂

  7. முதலாவதாக வந்த நீங்கள் முக்கியமானவராகவும் திகழவும் மென்மேலும் தங்கள் படைப்பு தமிழ் 10 நூலகத்தில் வெளிவரவும், அந்த படைப்புகள் அனைத்தும் தமிழ்ர்களுக்கு தன்னிகரில்லா பொக்கிஷமாக வாழ்த்துகள்.

  8. வாழ்த்துகள் நண்பா …வெகு விரைவில் என் கவிதைகள் "சிதறல்கள்" என்ற தலைப்பில் தமிழ்10 இணையதளத்தில் மின்னூலாக வெளிவர உள்ளது
    என்ற செய்தியை தங்களுடன் மகிழ்ச்சியோடு பகிர்ந்துகொள்கிறேன்

  9. நல்ல விசயம்… வாழ்த்துகள்!!!

    பிற்காலத்தில் எனக்குப் பயன்படலாம்!! பார்ப்போம்!

  10. நல்ல படைப்புக்கு கிடைத்த வெற்றி ..வாழ்த்துக்கள் நண்பா…உங்கள் பணி தொடரட்டும்…நண்பா