தமிழ்

தமிழ் மொழி இணையம் மற்றும் தொழில்நுட்பங்களில் அதிக பங்குபெற்று வருகிறது. கணினியில் தமிழ், இணையத்தில் தமிழ், கைப்பேசிகளில் தமிழ், மென்பொருள்களில் தமிழ் என்று எங்கும் தமிழ் பரவி வருகிறது. அப்படிப்பட்ட நிலையில் சில சங்கடங்களும் ஏற்படத் தான் செய்கிறது. அது பற்றி இறுதியில் பார்ப்போம்.


தமிழில் தட்டச்சு செய்ய:
நமது கணினிகளில் தமிழில் தட்டச்சு செய்ய பல்வேறு மென்பொருள்கள் உள்ளன. அவற்றில் நான் பயன்படுத்துவது கூகுள் வழங்கும் Google Transliteration. இணையத்தில் நேரடியாகவும் தட்டச்சு செய்யலாம் அல்லது மென்பொருளை பதிவிறக்கம் செய்து இணையம் இல்லாமல் கணினியில் எங்கும் தமிழில் எழுதலாம்.

இணையத்தில் நேரடியாக தட்டச்சு செய்ய http://www.google.com/transliterate என்ற முகவரிக்கு சென்று தட்டச்சு செய்யலாம். அங்கு மொழியை தமிழ் என்று தேர்ந்தெடுத்து “Amma” என்று டைப் செய்தால்  “அம்மா” என்று மாறிவிடும்.

தமிழ் மென்பொருளை டவுன்லோட் செய்ய http://www.google.com/ime/transliteration/ என்ற முகவரிக்கு சென்று மொழியை தேர்ந்தெடுத்து, உங்கள் கணினி அமைப்பை தேர்வு செய்து டவுன்லோட் செய்துக் கொள்ளுங்கள். கணினியில் புதியவர்கள் என்றால் அதே பக்கத்தில் Installation Instructions என்பதை க்ளிக் செய்து நிறுவும் முறையை தெரிந்துக் கொள்ளுங்கள்.


மொபைலில் தமிழ் தளங்களைப் பார்க்க:

பெரும்பாலான மொபைல்களில் தமிழ் தளங்களைப் பார்க்க முடியாது. அப்படியிருக்கும் போது தமிழ் தளங்களை மொபைல்களில் பார்க்க Opera Mini உலவி பயன்படுகிறது. உங்கள் மொபைல்களில் m.operamini.com என்ற முகவரிக்கு சென்றால் தானாக உங்கள் மொபைல் மாடலை கணித்து டவுன்லோட் சுட்டியைக் காட்டும். மொபைல்களுக்கு Opera Mini, Opera Mobile என்று இரண்டு உலவிகள் இருக்கும். Opera Mini-யில் மட்டுமே தமிழ் தெரியும்.

Opera Mini உலவிக்கு சென்று about:config என்று டைப் செய்து Go என்பதை க்ளிக் செய்யுங்கள்.

அங்கு Use bitmap fonts for complex scripts என்ற இடத்தில் Yes என்பதை தேர்வு செய்து Save என்ற பட்டனை க்ளிக் செய்யுங்கள்.

பிறகு தமிழ் தளங்களை உங்கள் மொபைல்களில் பார்க்கலாம்.

ஆன்ட்ராய்டில் தமிழ்:

ஆன்ட்ராய்ட் மொபைல் 2.3.6 பதிப்பிலிருந்து உலவியில் தமிழ் மொழி தெரிகிறது.

தமிழ் என்றால் ஆபாசமா?

இந்த  பதிவு எழுதுவதற்கும், “தமிழ்” என்று தலைப்பு வைத்ததற்கும் காரணம் இது தான். கூகிள் தேடலில் தமிழ் என்று தேடினால் முதல் பக்கத்திலேயே ஆபாச தளங்களின் முடிவுகள் வருகிறது. இதனைப் பற்றி நண்பர் ஒருவர் பதிவிலும் (யாரென்று மறந்துவிட்டது, தெரிந்ததும் சொல்கிறேன்), மோகன் என்ற நண்பர் பின்னூட்டத்திலும் தெரிவித்திருந்தனர். உண்மையில் இது கவலைக்குரிய விசயமாகும்.

இதையும் படிங்க:  பூமி தினம் கொண்டாடும் கூகுள்

கூகிள் தேடலில் ஆபாச தளங்களின் முடிவுகளை நீக்கும்படி கோரிக்கை வைக்க முடியாது. ஏனெனில் ஆபாச தள முடிவுகள் இன்றி பார்ப்பதற்கு தான் Safe Search என்ற வசதியை தந்துள்ளது. அதனால் ஆபாச தளங்களின் முடிவுகளை முதல் பக்கத்திலிருந்து நீக்க வேண்டுமானால் மற்ற நல்ல தளங்களின் முடிவுகள் முதல் பக்கத்தில் வர வேண்டும். அதற்கான முதல்படியாக இந்த பதிவிற்கு “தமிழ்” என்று மட்டும் வைத்துள்ளேன். அதனால் “தமிழ்” என்று தொடங்கும் விதமாக அதிகமான பதிவுகள் வந்தால் அவைகள் முதல் பக்கத்தில் வர வாய்ப்புகள் அதிகம். பதிவர்களுக்கு விருப்பமிருந்தால் அது போன்ற தலைப்புகளில் பதிவுகள் எழுதுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

21 thoughts on “தமிழ்”

  1. "தமிழ்" என்று தொடங்கும் விதமாக அதிகமான பதிவுகள் வந்தால் அவைகள் முதல் பக்கத்தில் வர வாய்ப்புகள் அதிகம். பதிவர்களுக்கு விருப்பமிருந்தால்

    (தாய் மொழியாம் தமிழ் மொழியின் மீது அக்கறையும் பற்றும் இருந்தால்)

    "தமிழ்" என்று தொடங்கும் விதமாக தலைப்புகளில் பதிவுகள் எழுதுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    தங்களின் சமூக அக்கறை பதிவர்கள் எல்லோருக்கும் போய் சேர வேண்டும்.

  2. பயனுள்ள தகவல்கள்.

    opera mini தவிர ஆன்ரோயிட் மார்கெட்டில் SETT sinhala/tamil web browser நிறுவி எந்த வித மாற்றமும் செய்யாமல் தமிழில் படிக்கலாம்.

    பகிர்வுக்கு நன்றி.

  3. தமிழ் மொழியின் மீதான தங்களின் ஆர்வம் மிகவும் பாராட்டுக்குரியது. தங்கள் பணி தொடரட்டும்.

  4. நானும் இது குறித்து சிந்தித்திருக்கிறேன்.

    நீங்கள் சொல்லி இருக்கும் வழி சிறந்த வழி..

    இனி முடிந்தளவு தமிழ் என்கிற பெயர் வருமாறு சில இடுகைகள் இடுகிறேன்.
    நன்றி!

  5. ஆம் நண்பா! தங்களின் இந்த பின்னூட்டத்தை அந்த உலவியில் தான் பார்த்தேன்.