புதிய தொழில்நுட்ப செய்திகளை பகிர்வதற்காக உருவாக்கப்பட்டுள்ளது தமிழ் நுட்பம் இணையதளம். இந்த தளத்தில் கூகுள், பேஸ்புக், ட்விட்டர், ஆண்ட்ராய்ட், ஆப்பிள், ஐஒஎஸ், புதிய மொபைல், டேப்லட் என்று அனைத்துவிதமான தொழில்நுட்ப செய்திகளையும் தெரிந்துக் கொள்ளலாம்.
இதை உருவாக்கியது வேறுயாருமில்லை, உங்கள் ப்ளாக்கர் நண்பன் (அட! அது நான் தாங்க!). ப்ளாக்கர் நண்பன் தளத்தில் வந்த பிட் பைட் மெகாபைட் பகுதியின் விரிவாக்கம் தான் தமிழ் நுட்பம் தளம்.
இனைய இணைப்பு வசதி கிடைப்பதில் பிரச்சனை உள்ளதால் காலை நேரத்தில் பதிவிட முடியாது, அதனால் கொஞ்சம் லேட்டாக தான் செய்திகள் வரும். பல யோசனைகள் இருக்கிறது, இறைவன் நாடினால் ஒவ்வொன்றாக அந்த தளத்தில் செயல்படுத்த வேண்டும்.
ப்ளாக் தொடர்பான செய்திகளை மட்டும் அவ்வப்போது ப்ளாக்கர் நண்பன் தளத்தில் பதிவிடுகிறேன். ப்ளாக் தொடர்பான சந்தேகங்கள் இருந்தால் முன்பு போலவே தயங்காமல் கேட்கலாம்.
ப்ளாக்கர் நண்பன் தளத்திற்கு கொடுத்து வரும் அதே ஆதரவை தமிழ்நுட்பம் தளத்திற்கும் கொடுப்பீர்கள் என நம்புகிறேன்.
இணையதள முகவரி: www.tamiltechnews.com
பேஸ்புக் பக்கம்: http://www.facebook.com/tamiltechnology
கூகுள்+ பக்கம்: http://plus.google.com/+Tamiltechnewss/
ட்விட்டர் பக்கம்: http://twitter.com/tamilnutpamsite
ஆதரவு என்றும் உண்டு… பாராட்டுக்கள்… வாழ்த்துக்கள்…
புதிய தளத்திற்கு Comment Box கிடையாதோ…?
நண்பா நான் உங்கள் ப்ளாக்கர் நண்பன் தளத்தை நேசிக்கின்றேன் அதுதான் எனது வழிகாட்டி,உங்கள் பதிவுகளை எனது http://www.nimsath.blogspot.com தளத்தில் ”ப்ளாக்கர் நண்பன்” பெயருடன் ப்திவுயிட்டுள்ளேன். http://www.tamiltechnews.com நிச்சயம் எனது ஆதரவு உண்டு ,எனது வாழ்துக்ள்.
வாழ்த்துகள்! சிறப்பான சேவையை தொடருங்கள்
congrats
continue best service
வாழ்த்துகள்!!! bro
வாழ்த்துக்கள்
வாழ்த்துகள் 🙂
இத..இத தான் எதிர்பார்த்தேன். ..! வாழ்த்துகள் நண்பா
ஆதரவு என்றும் உண்டு… பாராட்டுக்கள்…
பிந்திட்டீங்களே தலைவா
//ப்ளாக் தொடர்பான சந்தேகங்கள் இருந்தால் முன்பு போலவே தயங்காமல் கேட்கலாம்// – ஏற்கெனவே மிக முதன்மையாக ஒன்று கேட்டிருந்தேன், தொடர்புப் படிவத்தின் வழியாக. ஆனால், வழக்கமாக எப்படிப்பட்ட கேள்விக்கும் உடனுக்குடன் பதிலளித்துவிடும் நீங்கள் அதற்கு இன்னும் பதிலளிக்கவேயில்லை. ஒருவேளை, மின்னஞ்சல் தவறியிருக்கலாம் என்கிற நினைப்பில் இதோ, இந்த வழியில் மீண்டும் கேட்கிறேன். பதிலளிப்பீர்களா?
பெரிய சிக்கல்! அண்மையில், பிளாகரின் Follower செயலிக்குப் பதிலாக அதன் Members செயலியைப் பயன்படுத்தினால் பின்தொடர்பவர்கள் செயலி தமிழிலும் தெரியும் என நான் எழுதியிருந்த கட்டுரையை நீங்கள் வெளியிட்டிருந்தீர்கள் இல்லையா? அஃது இப்பொழுது சிக்கலாகி விட்டது. ஏறத்தாழ, கடந்த ஒரு மாதமாக அந்தச் செயலி வேலை செய்யவில்லை. அதாவது, அந்தச் செயலி மூலம் தளத்தில் புதிதாக இணைய முனைந்தாலோ, ஏற்கெனவே இணைந்தவர்கள் உள்நுழைய முனைந்தாலோ முடியவில்லை. அதற்கான பொத்தான்களை அழுத்தினால், 'மன்னிக்கவும்… உங்கள் கோரிக்கையை எங்களால் கையாள முடியவில்லை. மீண்டும் முயற்சி செய்க அல்லது சிறிதுநேரம் கழித்து திரும்பி வருக' என்று பிழைச் செய்தி காட்டுகிறது. ஆனால், அதே நேரம், செயலியின் வல மேல் மூலையிலுள்ள உருபெருக்கிப் பொத்தானை அழுத்தி, அதிலுள்ள பின்தொடர் பொத்தானை அழுத்தினால் உள்நுழையவும், புதிதாக இணையவும் முடிகிறது. எனக்கு மட்டுமில்லை, நான் எழுதிய வழிமுறைப்படி இணைத்த திண்டுக்கல் தனபாலன், தோழர் வலிப்போக்கன், ஜி.எஸ்.ஆர் அனைவருக்கும் இதே நிலைதான்.
இன்னொரு பக்கம் பார்த்தால், எனக்கு முன்பு, நான் எழுதியதைப் படிக்காமல் இந்தச் செயலியைத் தமிழில் இணைத்திருக்கும் தளங்களில் இந்தச் சிக்கல் இல்லை. எ.டு: http://www.masusila.com, http://verhal.blogspot.in போன்றவை.
இஃது எனக்கு மிகவும் குழப்பத்தைத் தருகிறது. ஒரே செயலி வெவ்வேறு தளங்களில் எப்படி வெவ்வேறு வகையில் இயங்க முடியும்? மேலும், செயலியை இணைத்து இதுவரை நீங்கள் உட்பட ஐந்து பேர் இதன் வழியே என் தளத்தில் இணைந்திருக்கிறார்கள். இப்பொழுது மட்டும் இப்படிச் சிக்கல் நேர்வது ஏன்?
இது பற்றிப் பிளாகருக்கும் முறையீடு அனுப்பினேன். பதில் எதுவும் இல்லை. கனிவு கூர்ந்து நீங்கள்தாம் உதவ வேண்டும்!
நான் இதைச் சில வாரங்கள் முன்பே பார்த்தேன். வடிவமைப்பு அட்டகாசமாக இருந்தது. இப்பொழுதுதான் தெரிகிறது உங்களுடையது என. வியந்ததில் பொருளில்லை! வாத்தியார் என்றும் வாத்தியார்தான்!
சொல்லவே இல்ல…
(முன்னாடியே)
கலர்புல்லாகீதுபா…
வாழ்த்துகள்
வாழ்த்துக்கள்
பகிர்வுக்கு நன்றி நண்பரே..
http://parathan20.blogspot.com/ இது என் தளம் ஒரு எட்டு பார்க்கலாமே….