தமிழ் தளங்கள் பணம் சம்பாதிக்க வந்துவிட்டது ஆட்சென்ஸ்

நமது வலைத்தளங்களில் விளம்பரம் வைத்து பணம் சம்பாதிக்க கூகுள் நிறுவனம் ஆட்சென்ஸ் (Adsense) சேவையை வழங்குகிறது. பல மொழிகளுக்கு கொண்டுவரப்பட்ட இந்த வசதி தமிழ் மொழிக்கு நெடுங்காலமாக தரப்படவில்லை. ஒரு வழியாக தமிழ் மொழிக்கும் ஆட்சென்ஸ் வந்துவிட்டது. இனி தமிழ் தளங்களில் நாம் பணம் சம்பாதிக்கலாம்.

ப்ளாக்கர் நண்பன் (புதிய) பேஸ்புக் பக்கத்தை மறக்காமல் லைக் செய்யுங்கள். https://www.facebook.com/ப்ளாக்கர்-நண்பன்-159870241462001/

ஆட்சென்ஸ் கணக்கு – தகுதிகள்:

1. உங்கள் தளத்தின் முகவரி .com, .net போன்று கஸ்டம் டொமைனாக இருக்க வேண்டும். .blogspot.com போன்ற Sub-Domain முகவரிக்கு விண்ணப்பிக்க முடியாது. Update: தமிழ் ப்ளாக்ஸ்பாட் தளங்களுக்கு ஆட்சென்ஸ்

2. உங்கள் தளத்தில் போதுமான பதிவுகள் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 20 பதிவுகளாவது இருக்க வேண்டும்.

3. உங்கள் பதிவுகள் வேறு தளங்களில் வெளிவராததாக இருக்க வேண்டும். காப்பி பேஸ்ட் பதிவுகள் ஏற்றுக்கொள்ளப்படாது.

 ஆட்சென்ஸ் கணக்கு – கவனிக்க வேண்டியவை:

1. உங்கள் தளத்தில் உள்ள விளம்பரங்களை நீங்களே க்ளிக் செய்யக் கூடாது.

2. உங்கள் நண்பர்களையோ, வாசகர்களையோ விளம்பரத்தை க்ளிக் செய்ய சொல்லக்கூடாது.

3. உங்கள் தளத்தின் வருகையாளர்கள் விளம்பரத்தை க்ளிக் செய்வதற்கு எவ்விதமான தவறான வழிகளையும் பின்பற்றக் கூடாது.

இவை அடிப்படை தகவல்கள் மட்டுமே. முழு விவரங்களுக்கு: https://support.google.com/adsense/answer/48182

தமிழ் தளங்களுக்கு ஆட்சென்ஸ் வாங்க:

1. முதலில் www.adsense.com முகவரிக்கு சென்று Signup now என்பதை க்ளிக் செய்யுங்கள்.

2. உங்கள் ப்ளாக் முகவரி, இமெயில் முகவரியைக் கொடுத்து “Save and Continue” என்பதை க்ளிக் செய்யுங்கள்.

3. “Select your Country” என்ற இடத்தில் நீங்கள் இருக்கும் நாட்டை தேர்வு செய்து, “Yes, I have read and accept the agreement” என்ற இடத்தில் டிக் செய்து Create Account என்பதை க்ளிக் செய்யவும்.

4. Payment address details என்ற இடத்தில் உங்கள் இல்ல முகவரியையும், மொபைல் எண்ணையும் சரியாக கொடுக்கவும்.

5. Verify Your Phone Number என்ற இடத்தில் Text message அல்லது Voice Call என்பதை தேர்வு செய்து Get Verification Code என்பதை க்ளிக் செய்யவும்.

6. Enter Verification Code என்ற இடத்தில் உங்கள் மொபைலுக்கு வந்த வெரிஃபிகேஷன் எண்களை கொடுத்து Submit என்பதை க்ளிக் செய்யவும்.

7. உங்களுக்கு ஒரு Code கிடைக்கும். அதனை Step 8-ல் உள்ளவாறு உங்கள் தளத்தில் இணைத்து, கீழுள்ள இரண்டு கட்டங்களிலும் டிக் செய்து Done என்பதை க்ளிக் செய்யவும்.

8. உங்கள் ப்ளாக்கில் Theme பகுதிக்கு சென்று, Edit Html க்ளிக் செய்து, </head> என்ற Code-கு மேலே உங்கள் Adsense Code-ஐ Paste செய்து, Save Theme என்பதை க்ளிக் செய்யுங்கள்.

9. Step 8,7-ஐ செய்த பிறகு Adsense தளத்தில் பின்வருமாறு காட்டும்.

உங்கள் ஆட்சென்ஸ் கணக்கு அப்ரூவ் ஆக சில தினங்கள் (அதிகபட்சமாக 15 நாட்கள்)
ஆகலாம். அதுவரை நீங்கள் காத்திருக்க வேண்டும். ஒருவேளை உங்கள் கணக்கு
நிராகரிக்கப்பட்டால், அதற்கான காரணத்தை சரி செய்து மீண்டும்
விண்ணப்பிக்கலாம்.

தமிழுக்கு ஆட்சென்ஸ் வந்துவிட்டது, இனி நாம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்று நீங்கள் கனவு காணும் முன், இறைவன் நாடினால் விரைவில் வரவிருக்கும்  பதிவை மறக்காமல் படிக்கவும்.

6 thoughts on “தமிழ் தளங்கள் பணம் சம்பாதிக்க வந்துவிட்டது ஆட்சென்ஸ்”

  1. தமிழ்-இந்துவில் வந்த தங்களின் கட்டுரை மற்றும் இத்தகவல் தளத்தின் முகவரியை நன்றியுடன் எனது வலைப்பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    https://valarumkavithai.blogspot.in/2018/02/blog-post.html மிக்க நன்றி அய்யா

  2. அன்பரே! தாங்கள் தங்களின் வலைப்புவை ப்ளாகரில் நிருவியுள்ளீர்கள் அல்லவா? எந்த டேம்பளைட்டை பயன்படுத்துகிறீர்கள்? டேம்பளைட்டியில் customized HTML/ CSS ஏதேனும் சேர்ததுள்ளீர்களா?