தமிழ்மணத்தில் பிரச்சனை?

பல பதிவர்களுக்கு தமிழ்மணத்தில் பிரச்சனை இருக்கலாம். சில பதிவர்கள் இதை பற்றி என்னிடம் கேட்டதால், அதை சரி செய்வதற்கான வழியை இங்கு பதிவிடுகிறேன்.

முஸ்கி(???): இந்த பதிவின் தலைப்பு  “தமிழ்மண ஓட்டுப் பட்டையில்  பிரச்சனை?”  என்று இருக்க வேண்டும். ஆனால் அப்படி கொடுக்காமல் “தமிழ்மணத்தில் பிரச்சனை?” என்று போட்டிருப்பதற்கு காரணம் இருக்கிறது. அதை தெரிந்துக் கொள்ள “நமது ப்ளாக்கை பிரபலமாக்குவது எப்படி?” தொடரின் (இறைவன் நாடினால், இனி வரவிருக்கும்) மூன்றாம் பகுதியை படியுங்கள்.

தமிழ்மணம் ஓட்டு பட்டை வைத்திருக்கும் சிலருக்கு தங்களுடைய பதிவுகளை ஓட்டுபட்டை மூலம் சமர்ப்பிக்க இயலாமல் போகும். மற்றவர்களும் ஓட்டு போட முடியாது. நீங்கள் feedburner-ஐ பயன்படுத்தினால் இந்த பிரச்சனை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதனை சரி செய்ய பின்வருமாறு செய்யவும்.

1. Feedburner தளத்திற்கு சென்று உங்கள் கணக்கின் மூலம் உள்நுழையுங்கள்.

2. உங்கள் ப்ளாக்கின் பெயர் அங்கு இருக்கும். அதை க்ளிக் செய்யுங்கள்.
3. இடதுபுறத்தில் கீழே Configure Status என்பதை க்ளிக் செய்யுங்கள்.
(படத்தை பெரிதாக காண அதன் மேல் க்ளிக் செய்யுங்கள்)


4. அங்கு Item views, Item link clicks, Item enclosure downloads என்று இருக்கும். அவைகள் Select ஆகியிருக்கும். அப்படியிருந்தால் அவைகளை Unselect செய்யுங்கள்.
5. பிறகு save என்பதை க்ளிக் செய்யுங்கள்.

இனி தமிழ்மணம் ஓட்டுபட்டையில் பிரச்சனை இருக்காது.

நன்றி: http://tvs50.blogspot.com

தகவல்: சகோதரி ஆமினா

என்ன  கொடுமை சார் இது?


feedburner-ல் இது போன்ற பிரச்சனைகள் வருமென்று கருதிதான் நான் அதை பயன்படுத்தவில்லை. இதை பற்றி பதிவிடுவதற்காக Feedburner-ல் இந்த ப்ளாக்கை சேர்த்தேன். இப்போது பதிவில் சொன்ன பிரச்சனை இந்த தளத்தில்.. அதை சரி செய்த பின் மீண்டும் Update செய்கிறேன்.

தற்போது தமிழ்மணம் ஓட்டு பட்டை வேலை செய்கிறது.
                     “Sometimes, Mistakes Makes a Man Perfect”

இதையும் படிங்க:  எளிதாக ப்ளாக்கர் Favicon-ஐ மாற்ற..

50 thoughts on “தமிழ்மணத்தில் பிரச்சனை?”

 1. ஆம்… நிறைய பேருக்கு இந்த பிரச்சனை இருப்பதாக அறிகிறேன்… ஆனால் இதற்கும் feedburnerக்கும் சம்பந்தம் இல்லையென்றே கருதுகிறேன்…

 2. //நன்றி: http://tvs50.blogspot.com//

  நீங்கள் நன்றி கூறிய tvs50 நண்பர் அவர்கள் ஒரு நேரத்தில் தொழில்நுடப பதிவிடுவிடுவதில் கிங்காக இருந்தார் அது மட்டுமல்லாமால் உங்களைப்போன்றே நாம் கேட்கும் தொழிநுடப சந்தேகங்களையும் எளிதாக புரிந்துகொள்ளுவதில் விளக்குவதில் வல்லவர் இதை புகழ்ச்சிக்காக சொல்லவில்லை நண்பர்கள் அவரின் தளம் சென்று பார்த்தாலே தெரிந்துகொள்வார்கள்…. என்ன காரணத்தினாலோ இப்போது பதிவிடுவதை நிறுத்திவிட்டார் ஆயினும் அவர் பதிவிட்ட அனைத்து தகவக்ல்களுமே மிகவும் பயனுள்ளதாக இருக்கும்…

  நன்றி நண்பரே உங்கள் பணிகள் சிறப்பாக தொடரட்டும்…..

 3. பயனுள்ள அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்களை சிறப்பாக பகிர்ந்துள்ளீர்கள் அருமை நண்பரே,

  தொடரட்டும் உங்கள் பணி

  நான் மின்னஞ்சலில் கேட்ட பிளாக்கர் டிப்ஸ் சந்தேகங்களை தீர்த்து வைத்ததற்கு உங்களுக்கு சிறப்பு நன்றிகள்….

 4. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்….

  நான் கூட தமிழ்மணத்தோட யாராவது சண்டை போடுறாங்களோன்னு நெனச்சேன் :))

  ரொம்ப தெளிவா விளக்கமா சொல்லிட்டீங்க சகோ!!

  வாழ்த்துக்கள்…….

 5. சகோ Abdul Basith அவர்களுக்கு
  இப்போதுதான் தமிழ்மணம் ஒட்டுப்போட்டியை இனைத்தேன்
  உங்களுடைய தளத்தில் இருந்துதான் நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன்
  நன்றி சகோ
  சந்தேகம் இருந்தால் ஒங்களுக்கு மெயில் பன்னலாமா?

  சகோதரன்
  ஹைதர் அலி

 6. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்….

  சகோதரர் அப்துல் பாஸித்,

  பல நல்ல தகவல்களை அவ்வப்போது தவறாமல் தந்து கொண்டு உள்ளீர்கள்.

  இப்பதிவின் அடிப்படையில் சென்று கட்ட கடைசியில்… எனக்கு கிடைத்தது என்னவென்றால்…

  /////Your feed is so new, we’re still playing with the bubble wrap.

  Check back soon for a full dose of stats./////

  இதுதான்…!

  சரி போகட்டும்.

  இப்போது தமிழ்மண ஓட்டுப்பட்டையில் திடீரென்று ஓட்டுக்கள் மட்டும், எனக்கு மட்டும், சிகப்புக்கலரில் இருந்து பச்சைக்கு மாறிவிட்டதே? அது ஏன்?

 7. //ஹைதர் அலி said…

  சகோ Abdul Basith அவர்களுக்கு
  இப்போதுதான் தமிழ்மணம் ஒட்டுப்போட்டியை இனைத்தேன்
  உங்களுடைய தளத்தில் இருந்துதான் நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன்
  நன்றி சகோ
  சந்தேகம் இருந்தால் ஒங்களுக்கு மெயில் பன்னலாமா?

  சகோதரன்
  ஹைதர் அலி
  //

  தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி சகோ!

  தாராளமாக மெயில் அனுப்பலாம். ப்ளாக்கின் மேலே "என்னை தொடர்பு கொள்ள!" என்று இருக்கிறதல்லவா? அதை பயன்படுத்தி மெயில் அனுப்பலாம்.

 8. //Anonymous said…

  "Sometimes, Mistakes Makes a Man Perfect"
  This time Make this statement Perfect
  //

  நண்பா!
  நான் தவறாக எழுதவில்லை. அதன் உண்மையான பழமொழி எனக்கு தெரியும்.

  "Practise Makes A Man Perfect"

  என்னை கருத்தில் கொண்டு அவ்வாறு எழுதியுருந்தேன். நான் ஒவ்வொருமுறை தவறு செய்யும் போதும் நிறைய கற்றுக் கொள்கிறேன்.

  Sometimes என்று சேர்த்திருப்பதையும் கவனியுங்கள்..

  தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி, நண்பா!

 9. //ஆமினா said…

  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்….
  //
  வ அலைக்கும் ஸலாம் (வரஹ்)

  //
  நான் கூட தமிழ்மணத்தோட யாராவது சண்டை போடுறாங்களோன்னு நெனச்சேன் :))
  //

  பதிவில் சொன்னபடி அதற்கான காரணத்தை பிறகு சொல்கிறேன்.

  //ரொம்ப தெளிவா விளக்கமா சொல்லிட்டீங்க சகோ!!

  வாழ்த்துக்கள்…….
  //

  தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி, சகோதரி!

 10. /மாணவன் said…

  பயனுள்ள அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்களை சிறப்பாக பகிர்ந்துள்ளீர்கள் அருமை நண்பரே,

  தொடரட்டும் உங்கள் பணி

  நான் மின்னஞ்சலில் கேட்ட பிளாக்கர் டிப்ஸ் சந்தேகங்களை தீர்த்து வைத்ததற்கு உங்களுக்கு சிறப்பு நன்றிகள்….
  //

  தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி, நண்பா!

 11. //மாணவன் said…

  //நன்றி: http://tvs50.blogspot.com//

  நீங்கள் நன்றி கூறிய tvs50 நண்பர் அவர்கள் ஒரு நேரத்தில் தொழில்நுடப பதிவிடுவிடுவதில் கிங்காக இருந்தார் அது மட்டுமல்லாமால் உங்களைப்போன்றே நாம் கேட்கும் தொழிநுடப சந்தேகங்களையும் எளிதாக புரிந்துகொள்ளுவதில் விளக்குவதில் வல்லவர் இதை புகழ்ச்சிக்காக சொல்லவில்லை நண்பர்கள் அவரின் தளம் சென்று பார்த்தாலே தெரிந்துகொள்வார்கள்…. என்ன காரணத்தினாலோ இப்போது பதிவிடுவதை நிறுத்திவிட்டார் ஆயினும் அவர் பதிவிட்ட அனைத்து தகவக்ல்களுமே மிகவும் பயனுள்ளதாக இருக்கும்…

  நன்றி நண்பரே உங்கள் பணிகள் சிறப்பாக தொடரட்டும்…..

  //

  ஆம் நண்பா.. நல்ல பயனுள்ள தகவல்கள் உள்ளன. அந்த தளத்தை புக்மார்க் பண்ணியுள்ளேன்.

  தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி, நண்பா!

 12. //philosophy prabhakaran said…

  ஆம்… நிறைய பேருக்கு இந்த பிரச்சனை இருப்பதாக அறிகிறேன்… ஆனால் இதற்கும் feedburnerக்கும் சம்பந்தம் இல்லையென்றே கருதுகிறேன்…
  //

  இல்லை நண்பா.. feedburner உபயோகிக்கும் எல்லோருக்கும் வருவதில்லை. Item views, Item link clicks, Item enclosure downloads ஆகியவை select ஆகியிருந்தால் மட்டுமே இந்த பிரச்சனை வருகிறது.

  தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி, நண்பா!

 13. //முஹம்மத் ஆஷிக் said…

  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்….

  சகோதரர் அப்துல் பாஸித்,

  பல நல்ல தகவல்களை அவ்வப்போது தவறாமல் தந்து கொண்டு உள்ளீர்கள்.
  //

  வ அலைக்கும் ஸலாம் வரஹ்..

  தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி சகோ!

  //
  இப்பதிவின் அடிப்படையில் சென்று கட்ட கடைசியில்… எனக்கு கிடைத்தது என்னவென்றால்…

  /////Your feed is so new, we’re still playing with the bubble wrap.

  Check back soon for a full dose of stats./////

  இதுதான்…!
  //

  நீங்கள் feedburner-ல் புத்தாக இணைத்திருந்தால் அவ்வாறு வரும். சில நாட்களுக்கு பிறகு உங்கள் feed-ன் status வரும்.

  //சரி போகட்டும்.

  இப்போது தமிழ்மண ஓட்டுப்பட்டையில் திடீரென்று ஓட்டுக்கள் மட்டும், எனக்கு மட்டும், சிகப்புக்கலரில் இருந்து பச்சைக்கு மாறிவிட்டதே? அது ஏன்?
  //

  தெரியவில்லை சகோ! எனக்கு சரியாக வருகிறது. வேறு Browser-ஐ பயன்படுத்தி பாருங்களேன்!

 14. //நீங்கள் feedburner-ல் புத்தாக இணைத்திருந்தால் ..//

  மன்னிக்கவும், புதிதாக இணைத்திருந்தால் .. என படிக்கவும்..

 15. Blogger நண்பன் அருமையான கட்டுரைகளை அள்ளி அள்ளித் தருகின்றீர்கள் மிக்க உபயோகமாக அனைவர்க்கும் இருக்கும் .வாழ்த்துகள் .நீங்கள் நேரில் வந்து செய்து கொடுத்தால் நாங்கள் பணம் தருவோம் ! உங்களால் முடியுமா ?
  ஏன் நீங்கள் ஒரு தமிழ்மணம் போன்று ஆரம்பிக்க கூடாது அதுதான் அனைவர்க்கும் மிக்க உதவியாக இருக்கும்.!!!? சவால்! செய்து காட்டுங்கள் .அதுதான் உங்கள் திறமையின் வெளிப்பாடு.

 16. ஸலாம் சகோ பாசித்,,தங்களது பதிவுகளை நான் தொடர்ந்து படித்துவருகிறேன்..எனது ப்ளாக்கில் ஒரு பிரச்சனை.என்னால் ஃபாலோயர்ஸ் கேட்கெட் ஆட் செய்ய முடியவில்லை.ஆட் கேட்கெட் குடுத்தால்,அது சோதனை முயற்சி என்றே உள்ளது…எப்படி ஆட் செய்வது…

  உதவுங்களேன்..

  நன்றி

 17. //nidurali said…

  Blogger நண்பன் அருமையான கட்டுரைகளை அள்ளி அள்ளித் தருகின்றீர்கள் மிக்க உபயோகமாக அனைவர்க்கும் இருக்கும் .வாழ்த்துகள்
  //

  தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி!

  //நீங்கள் நேரில் வந்து செய்து கொடுத்தால் நாங்கள் பணம் தருவோம் ! உங்களால் முடியுமா ?
  //

  🙂

  //ஏன் நீங்கள் ஒரு தமிழ்மணம் போன்று ஆரம்பிக்க கூடாது அதுதான் அனைவர்க்கும் மிக்க உதவியாக இருக்கும்.!!!? சவால்! செய்து காட்டுங்கள் .அதுதான் உங்கள் திறமையின் வெளிப்பாடு.
  //

  அதற்கு நான் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும்..

 18. //ரஜின் said…

  ஸலாம் சகோ பாசித்,,தங்களது பதிவுகளை நான் தொடர்ந்து படித்துவருகிறேன்..எனது ப்ளாக்கில் ஒரு பிரச்சனை.என்னால் ஃபாலோயர்ஸ் கேட்கெட் ஆட் செய்ய முடியவில்லை.ஆட் கேட்கெட் குடுத்தால்,அது சோதனை முயற்சி என்றே உள்ளது…எப்படி ஆட் செய்வது…

  உதவுங்களேன்..

  நன்றி
  //

  வ அலைக்கும் ஸலாம்.
  தாமதமான பதிலுக்கு மன்னிக்க்கவும்ம்.

  நீங்கள் உங்கள் ப்ளாக்கின் மொழியாக தமிழை தேர்ந்தெடுத்துள்ளீர்கள். அதனால் வரவில்லை. அதை ஆங்கிலத்துக்கு மாற்றினால் சேர்க்க முடியும்.

  Blogger Dashboard=>settings=>Formatting சென்று, அங்கு Language என்ற இடத்தில், தமிழ் என்பதற்கு பதிலாக ஆங்கிலத்தை தேர்வு செய்யுங்கள். பிறகு save செய்துக் கொள்ளுங்கள்.

 19. //மதுரை பாண்டி said…

  I am not using feedburner so far.. So no problem… Anyway Thanks for nice information …
  //

  தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி, நண்பா!

 20. //சரவணன்.D said…

  அவசியமான பகிர்வு,பகிர்வுக்கு நன்றி தோழா!!!
  //

  தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி, நண்பா!

 21. blogger நண்பா பயனுள்ள தகவல் சொன்னீர்கள் மிகவும் நன்றி.

  நண்பரே! என்னுடைய ப்ளாக் -ல் feed burner widget சேர்த்திருக்கிறேன் ஆனால் ப்ளாக் setting -ல் site feed-ல் Post Feed Redirect URL என்ற இடத்தில் என்ன url கொடுப்பது என தெரியவில்லை கொஞ்சம் உதவுங்களேன்…என்னுடைய feed burner url -ஐ எப்படி கண்டுபிடிப்பது?

 22. //யோவ் said…

  blogger நண்பா பயனுள்ள தகவல் சொன்னீர்கள் மிகவும் நன்றி.

  நண்பரே! என்னுடைய ப்ளாக் -ல் feed burner widget சேர்த்திருக்கிறேன் ஆனால் ப்ளாக் setting -ல் site feed-ல் Post Feed Redirect URL என்ற இடத்தில் என்ன url கொடுப்பது என தெரியவில்லை கொஞ்சம் உதவுங்களேன்…என்னுடைய feed burner url -ஐ எப்படி கண்டுபிடிப்பது?
  //

  தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி, நண்பா!

  feedburner தளத்தில் உங்கள் தளத்தை க்ளிக் செய்த பின், மேலே உங்கள் பதிவின் பெயருக்கு கீழே Edit Feed Details… என்று இருக்கும். அதை க்ளிக் செய்யுங்கள்.

  அங்கு Feed Address: என்ற இடத்தில் உள்ளவைதான் உங்களின் feedburner url.

 23. ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் வண்டி ஓடும் போல சொல்றீங்க…..பதிவு அருமை. இனிய அகிலத்துப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

 24. நண்பா…அதே போல் மற்றுமொரு சந்தேகம் new domain மாற்றியிருக்கிறேன் அதன் படி google apps account -ம் கிடைத்தது 2011 க்குள் transition செய்யவேண்டும் என்று சொன்னது இல்லையேல் automatic ஆக ஆகும் என்றது. எனக்கு அதை எப்படி செய்வது என்று தெரியவில்லை. visiters க்கு முன்கூட்டியே தகவல் தந்துவிடுங்கள் என்கிறது. transition என்றால் என்ன? இதற்கும் கொஞ்சம் உதவுங்களேன்…

 25. //பாண்டிச்சேரி வலைப்பூ said…

  ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் வண்டி ஓடும் போல சொல்றீங்க…..பதிவு அருமை. இனிய அகிலத்துப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
  //

  ஹிஹிஹி..

  தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி!

 26. //யோவ் said…
  மிகவும் நன்றி blogger நண்பா…நீங்கள் சொன்னபடி சரியாக செய்துவிட்டேன்.
  //

  மிக்க மகிழ்ச்சி நண்பா!

 27. //தமிழ்வாசி – Prakash said…

  உங்கள் பதிவின் படி அனைத்து டிக் ஐ எடுத்து விட்டேன். ஆனால் ஓட்டுப் பட்டையில் பிரச்சனை உள்ளதே….தயவு செய்து உதவி செய்யுங்களேன்?
  //

  தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும் நண்பா! கொஞ்சம் வேலைப்பளுவாக இருந்தது.

  தற்போது தங்கள் தளத்தில் தமிழ்மணம் ஓட்டுப் பட்டை வேலை செய்கிறது நண்பா!

  தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!

 28. //Philosophy Prabhakaran said…

  புதுப்பொலிவுடன் மீண்டு(ம்) வந்திருக்கிறேன்… நம்ம கடைப்பக்கம் வந்து பார்த்து கருத்து கூறவும்…

  http://www.philosophyprabhakaran.blogspot.com/
  //

  கண்டிப்பாக..

  தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி, நண்பா!

 29. //யோவ் said…

  நண்பா…அதே போல் மற்றுமொரு சந்தேகம் new domain மாற்றியிருக்கிறேன் அதன் படி google apps account -ம் கிடைத்தது 2011 க்குள் transition செய்யவேண்டும் என்று சொன்னது இல்லையேல் automatic ஆக ஆகும் என்றது. எனக்கு அதை எப்படி செய்வது என்று தெரியவில்லை. visiters க்கு முன்கூட்டியே தகவல் தந்துவிடுங்கள் என்கிறது. transition என்றால் என்ன? இதற்கும் கொஞ்சம் உதவுங்களேன்…
  //

  மன்னிக்கவும் நண்பா! Google Apps-ஐ நான் பயன்படுத்தியதில்லை. அதனால் அது பற்றி தெரியவில்லை..

 30. உங்க பதிவெல்லாம் அமர்ந்து பொறுமையா உபயோகிக்க வேண்டியது. நானும் ஒவ்வொரு முறையும் யோசிக்கறேன்…. ஆனா டைமில்ல. இன்ஷா அல்லாஹ் இந்த தடவை புது டெம்ப்ளேட் போடறப்ப நிறைய கவனிச்சு செய்யணும். ரெம்ப நன்றிங் பாய்.

 31. அருமையான விளக்க பதிவு உங்களுக்கு என் நன்றிகள் ,என்னுடைய தளத்திலும் தமிழ் மனம் ஒட்டு பட்டை இப்பொழுது வேலை செய்கிறது

 32. இந்தப்பதிவில் குறிப்பிட்டுள்ள படி பீட்பர்னரில் சரியாக உள்ளது,பிளாக்கிலும் பீட்பர்னர் முகவரி சரியாக உள்ளது. ஆனால் பதிவுகளை தமிழ்மணத்தில் இணைக்க இயலவில்லை. தமிழ்மணத்தின் நிர்வாகிகளை எப்படி தொடர்பு கொள்வது.. தமிழ்நேசன்

 33. என் வலைப்பூவில் பீட்பர்னரை இணைக்க முடியவில்லை… Add Gadget>email subscription ல் இருக்கும் இரண்டு கேட்கெட்டில் ஏதாவது ஒன்றையாவது என் வலைப்பூவில் இணைக்கலாம் என்று எண்ணிடும் போது பிழைச் செய்தி காட்டுகின்றதே.!

  அறியின் விளக்கம்.

  http://sivahari.blogspot.com/

 34. Customise Gadget

  We are sorry, this gadget appears to be broken.

  This gadget has errors and cannot be used until fixed. Learn more

  மேலே இருப்பது தான் நண்பரே!

  இரண்டிலும் இதே செய்தி

 35. காரணம் தெரியவில்லை நண்பரே! மறுபடியும் சிறிது நேரம் கழித்து "Follow by email" gadget-ஐ முயற்சி செய்யுங்கள்.

  புதிய டாஷ்போர்ட் தானே பயன்படுத்துகிறீர்கள்?

 36. ஆஷிக் சொல்லி இந்த பதிவின் மூலம் எனது வலைப்பூவில் சரி செய்துவிட்டேன் ரொம்ப நன்றி இருவருக்கும்.