தமிழாக்கம் செய்ய கூகிளின் புது வசதி

கூகிள் Translate பற்றிஅனைவரும் அறிந்திருப்பீர்கள். ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு கட்டுரைகளையோ, வலைத்தளங்களையோ மாற்ற உதவுகிறது. ஆனால் இதுவரை தமிழ் மொழிக்கு மாற்றும் வசதி இல்லை. தற்போது அதனையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆனால் தற்போது சோதனை முறையாகவே அறிமுகம் செய்துள்ளது. அதனால் சரியாக மொழிமாற்றம் செய்யவில்லை. பல ஆங்கில வார்த்தைகளை ஆங்கில வார்த்தைகளாகவே கொடுக்கிறது. அதே போல தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மாற்றினால் பல தமிழ் வார்த்தைகளை தமிழிஷ் [Tamil word in English] வார்த்தைகளாகவே கொடுக்கிறது.


மொழிமாற்றம் செய்ய:

http://translate.google.com/ தளத்திற்கு சென்று நீங்கள் டைப் செய்யுங்கள். நீங்கள் எந்த மொழியில் டைப் செய்தாலும் முடிந்தவரை அது தானியங்கியாக கண்டுபிடித்துவிடும். பிறகு மேலே TO என்ற இடத்தில் எந்த மொழிக்கு மாற்றம் செய்ய வேண்டுமோ, அதனை தேர்வு செய்யவும். பிறகு Translate என்பதை க்ளிக் செய்யவும்.

வலைத்தளங்களை மொழிமாற்றம் செய்ய:

வலைத்தளங்களை மொழிமாற்றம் செய்ய http://translate.google.com/ தளத்திற்கு சென்று  தளமுகவரியை (URL) கொடுத்து Enter கீயை அழுத்தவும்.

தமிழுடன் சேர்த்து வங்காளம், குஜராத்தி, தெலுங்கு, கன்னடம் என மொத்தம் ஐந்து மொழிகள் தற்போது சோதனை முறையில் இருக்கின்றன. Google Translate Gadget-ல் இன்னும் இந்த வசதி வரவில்லை.

இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை காண : இங்கு க்ளிக் செய்யவும்.

இதையும் படிங்க:  2013-ல் சிறந்த 10 பதிவுகள்

23 thoughts on “தமிழாக்கம் செய்ய கூகிளின் புது வசதி”

 1. //நண்பன் said…

  thangal thntha intha pokkisamana sethikku mamarntha vazththukkal
  thaangalin intha magaththaana sevai menmelum vazarnthu nal nilamai adaya vazthugiren anbudan hajaburuhani abuthaabi 0506926374
  thayavu seythu thodarbu kollavum.
  //

  நன்றி நண்பா!

 2. //வெள்ளித்திரை விமர்சனம் said…
  அருமையான தகவல் நண்பரே நன்றி//

  நன்றி நண்பரே!

 3. Nan indru than intha blockil serdhen. Enakku block open seiya udhavungal,enakku sila visayangal puriyavillai. intha block open seivathal enakku enna palan kidaikum. intha question-ku reply vanthal eppady nan parkka mudiyum.

 4. நானும் யூஸ் பண்ணி பார்த்து இருகேன் சரியான தவல்களை கூகிளால் தர முடியவில்லை.இதனால் சரியான மொழி மாற்றம் செய்ய பட்டால் எனக்கு அதிகம் பயனை அளிக்கும்.ஆனால் தற்போது உள்ள நிலையில் இதனை கொண்டு எதாவது ஒரு ஆங்கில பக்கத்தை திறந்தால் ஏன் படிக்க நினைத்தோம் தோன்றும் அளவுக்கு அதன் தன்மை இருக்குது.
  சரி பின்னாலில் பார்போம் இதன் நன்பக தன்மையை. .. . . .