தணிக்கைக்கு தயாரானது ப்ளாக்கர்

பதிவுலகம் முழுவதும் ஒருவித சோகம் பரவியுள்ளது. அதற்கு காரணம் கூகுள் இன்று சத்தமில்லாமல் ப்ளாக்கர் தளங்களில் செய்த ஒரு மாற்றம் தான். அதாவது இலவச ப்ளாக்கர் தளங்களில் உள்ள .blogspot.com என்னும் முகவரியினை சில நாடுகளில் மட்டும் .com என்பதற்கு பதிலாக .in, .com.au என்ற முகவரிகளாக மாற்றியுள்ளது. இந்த மாற்றத்திற்கான காரணங்களைப் பற்றியும், இதன் விளைவுகளை பற்றியும் பார்ப்போம்.

ப்ளாக்கர் தளம் இதுவரை உலகம்  முழுவதும் இலவச ப்ளாக்கர் தளங்களில் .com என்ற டொமைனை பயன்படுத்திவந்ததை மாற்றி இனி அந்தந்த நாடுகளுக்கான டொமைன்களை பயன்படுத்தும். இது Country-code top level domain எனப்படும். உதாரணத்திற்கு ஒருவர் உங்கள் ப்ளாக்கை இந்தியாவிலிருந்து பார்க்கும்போது .blogspot.in என்ற முகவரிக்கும், ஆஸ்திரேலியாவிலிருந்து பார்த்தால் .blogspot.com.au என்ற முகவரிக்கும் மாறிவிடும்.

இதுவரை (இந்தியா, ஆஸ்திரேலியா உள்பட) சில நாடுகளுக்கு மட்டும் இந்த மாற்றத்தை கொண்டுவந்ததாக ப்ளாக்கர் தளம் கூறுகிறது. விரைவில் அதிகமானநாடுகளில் இந்த மாற்றங்களை கொண்டுவரப்போவதாகவும் அறிவித்துள்ளது.

ஏன் இந்த திடீர் மாற்றம்?

சமீப காலமாக இணையத்தளங்களில் வரும் செய்திகளை தணிக்கை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுவதை பார்த்திருப்போம். நமது இந்திய நீதிமன்றம் கூட கூகுள், பேஸ்புக், ட்விட்டர் போன்ற தளங்களை தணிக்கை செய்ய வலியுறுத்தியது. இது போல் தணிக்கை செய்ய சொல்லி கோரிக்கை வந்தால் ப்ளாக்கர் தளங்களில் உள்ளவற்றை எளிதாக தணிக்கை செய்வதற்காகவே இந்த மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது.

இதன் மூலம் சில கருத்துக்களை நீக்குமாறு ஒரு நாடு கோரிக்கை வைத்தால் அந்த நாடுகளில் மட்டும் அந்த கருத்துக்கள் கொண்ட பதிவுகளை/தளங்களை நீக்கிவிடும். மற்ற நாடுகளில் அந்தக் கருத்துக்கள் உள்ள பதிவுகள்/தளங்கள் பார்க்கும்படி இருக்கும்.

ஆனால் கஸ்டம் டொமைங்களில் உள்ள தளங்களுக்கு இந்த மாற்றம் வராது. அதற்கான தணிக்கைப் பற்றி தெரியவில்லை.

இந்த மாற்றத்தின் மூலம் தேடுபொறிகளில் உங்கள் தளங்களின் மதிப்பு பாதிக்காது என்ரம் தெரிவித்துள்ளது.

தேடுபொறிகளில் எந்த மாற்றமும் இல்லையென்றாலும் இந்த மாற்றத்தினால் .blogspot.com முகவரியில் இயங்கும் இலவச தளங்களுக்கு சில பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

அலெக்ஸா மதிப்பு:

இணையதளங்களை பட்டியலிடும் அலெக்ஸா மதிப்பு இதனால் சரிந்துவிடும். அதிலும் குறிப்பாக தமிழ் தளங்கள் உள்பட இந்திய தளங்களின் மதிப்பு வெகுவாக குறைந்துவிடும். காரணம் .blogspot.in, .blogspot.com.au போன்ற முகவரிகளில் இயங்கும் நம்முடைய தளங்களின் மதிப்புகள் எல்லாம் நம்  தளங்களின் மதிப்புகளாக கணக்கிடாமல் blogspot.in, blogspot.com.au என்ற தளங்களுக்கு சென்றுவிடும்.

நம் தளங்களுக்கு அதிக வாசகர்கள் வருவதே இந்தியாவிலிருந்து தான். இந்தியாவில் நம்முடைய முகவரி மாறுவதால் அலெக்ஸா மதிப்பு வெகுவாக குறையும் என்பதில் சந்தேகமில்லை. ஒருவேளை அலெக்ஸா தளம் மாற்றம் கொண்டுவந்தால் மாறலாம்.


தமிழ்மணம் பிரச்சனை:

இதையும் படிங்க:  ப்ளாக்கரில் HTTPS பாதுகாப்பு வசதி அறிமுகம்

இந்த மாற்றத்தினால் ஏற்படும் அடுத்த பாதிப்பு தமிழ்மணத்தில் இணைப்பதில் ஏற்படும் பிரச்சனை. இதுவரை .com முகவரியை தமிழ்மணத்தில் இணைத்திருப்பீர்கள். அப்படி இணைத்திருந்தால் .com அல்லாத மற்ற முகவரியில் இருக்கும்போது ஓட்டுப்பட்டை வேலை செய்யாது. ஒருவேளை நீங்கள் தமிழ்மணத்தில் .in. .com.au போன்ற முகவரிகளை சமர்ப்பித்தால் மற்ற நாடுகளில் ஓட்டுபட்டைகள் வேலை செய்யாது. எப்படியிருந்தாலும் தமிழ்மணத்தில் பிரச்சனை தான்.

தமிழ்மணம் மட்டுமின்றி மற்ற திரட்டிகளிலும் இந்த பிரச்சனை உள்ளது.

Follower Gadget:

நீங்கள் Friendconnect மூலம் follower gadget வைத்திருந்தால் அதிக நாடுகளில் இந்த gadget தெரியாது. அதனால் Blogger Layout பகுதியிலிருந்து மட்டும் Add a Gadget மூலம் இதனை சேர்க்கவும்.

UPDATE:

பிளாக்கர் பிரச்சனைக்கு முழுமையான தீர்வு

தொடர்புடைய நண்பர்களின் பதிவுகள்:

பிளாக் முகவரி மாற்றத்தால் காணாமல் போன FOLLOWERS GADGET-ஐ மீண்டும் இணைப்பது எப்படி?

பிளாக்கரின் டொமைன் முகவரி மாற்றம் காரணமும் சிக்கல்களும்

52 thoughts on “தணிக்கைக்கு தயாரானது ப்ளாக்கர்”

  1. உண்மைதான்.பதிவுலகம் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறது!! அலெக்ஸா மாற்றம் கொண்டு வரணும்.அலெக்ஸாவுக்கு நிறைய கோரிக்கை போகும் என நினைக்கிறேன்.பார்க்கலாம்!!

  2. தமிழ்மணத்தில் என்னுடைய ஒட்டுபட்டை சில நாட்களாகவே வேளை செய்வதில்லை. இத்துணைக்கும் நான் custom domain வைத்திருக்கிறேன், இதற்கு என்ன தீர்வு?

  3. அஸ்ஸலாமு அலைக்கும் பாஸித்,

    மிக விளக்கமாக சொல்லிருக்கீங்க..மாஷா அல்லாஹ். ஜசாக்கல்லாஹ்.

    வஸ்ஸலாம்..

  4. பேசாம வோர்ட்பிரஸ் -க்கு மாறிரலாம் …

    blogger – wordpress எப்படி மாறலாம் ..ஒரு பதிவு எழுதுங்களேன் …

  5. உங்களுக்கு ஒரே ஜாலி தான்..எங்களுக்கு வடபோச்சே …இன்னும் என்னால வரபோதோ தெரியல …ஆனா ஒன்னு உங்களுக்கு வேலை அதிகமாச்சு …நண்பா

  6. காலையில நான் 6 மணிக்கு பாத்தபோதே இருந்துச்சு ஆனா அத பத்தி நான் கேர் எடுத்துகல ஆனா இப்பதான தெரிது அதனுடைய விளைவு என்னனு ….என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே …

  7. விரிவான விளக்கம் கொடுத்துள்ளீர்கள். திரட்டிகளில் இணைப்பதும், ஓட்டுப் பட்டைகள் செயல்படாமல் இருப்பதும் பிரச்சனைதான். இதற்கு எளிய தீர்வு டொமைன் வாங்குவது தானா? அப்படியெனில் என்ன செய்ய வேண்டும்? விளக்கமாகப் பதிவிடுங்களேன்…

  8. //அது நீங்கள் தேடும் டொமைன் பொறுத்து. ஆனால் இனி .com வாங்குவதே சிறந்தது.//

    தற்போது நீங்கள் .com வாங்கினால் இந்த பிரச்சனை இருக்காது நண்பா!

  9. வெளியில் சொல்லிடாதீங்க சகோ.! பிறகு முதல் இடத்தில் இருக்கும் கூகிள் உங்களை தடை பண்ணிட போறாங்க?

    🙂 🙂 🙂

  10. நல்ல தகவல் நண்பரே…
    இலவசம் என்றுமே இல்லை நம்வசம் என்பதை பலரது பதிவுகளிம் உணர்த்துகிறன..
    நன்றி

  11. அருமை நண்பரே! நானும் என்னடா டாப் லெவல் டொமைன் முகவரிகள் வேறு வேறாக வருகிறதே என குழம்பிப் போயிருந்தேன்! தகவலுக்கு நன்றி!