ட்வீட்களை பதிவில் இணைப்பது எப்படி?

சமூக வலைத்தளங்களில் குறுஞ்செய்திகள் மூலம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது ட்விட்டர் தளம். பேஸ்புக், கூகுள் ப்ளஸ் என்று பல தளங்கள் வந்தாலும் தனக்கென்ற தனி வழியில் சென்றுக் கொண்டிருக்கும் ட்விட்டர் தளம், நாம் பகிரும் ட்வீட்களை நம்முடைய பதிவில் இணைக்கும் வசதியையும் தருகிறது.

இது பல மாதங்களுக்கு முன்னாலேயே அறிமுகப்படுத்தப்பட்ட வசதி ஆகும். சோதனைக்காக ப்ளாக்கர் நண்பன் தளத்தில் இணைத்த போது சரியாகத் தெரியவில்லை. தற்போது வேலை செய்கிறது.

ட்விட்டர் தளத்தில் உங்களுடைய  அல்லது உங்களுக்கு பிடித்த ட்வீட்களை கிளிக் செய்தால், அது விரிந்து பின்வருமாறு தெரியும்.

அதில் Details என்பதை கிளிக் செய்யுங்கள்.

பிறகு Embed this Tweet என்பதை கிளிக் செய்யுங்கள்.

அந்த  ட்வீட்டுக்கு பிரத்யேக நிரல் கொடுக்கும். அதில் HTML நிரல்களை தான் காப்பி செய்து உங்கள் பதிவில் இணைக்க வேண்டும்.

மேலும்  பதிவெழுதும் பக்கத்தில் வலதுபுறம் உள்ள Post Settings பகுதியில் உள்ள Option என்பதை கிளிக் செய்து, 
“Interpret typed HTML” என்பதனையும் தேர்வு செய்யவும்.

பதிவில் இணைத்த ட்வீட்கள் இப்படி தெரியும்,

செந்தமிழ் பேச்சினை கேட்கையிலே…இன்பத்தேன் வந்து பாயுதே காதினிலே…#வெளிநாட்டு வாழ்க்கை
— ப்ளாக்கர் நண்பன் (@bloggernanban) August 25, 2012

இது வேலை செய்கிறதா? என்பதனை ReTweet செய்து தெரிந்துக் கொள்ளலாம். 🙂 🙂 🙂

இதையும் படிங்க:  பேஸ்புக்கை பின்தொடரும் ட்விட்டர்

14 thoughts on “ட்வீட்களை பதிவில் இணைப்பது எப்படி?”

  1. நல்ல தகவல்…

    நான் அதிகம் ட்விட்டர் பக்கம் போவதில்லை 🙂

    ஒன்லி முக நூல் … அதுவும் அடிக்கடிநான் முக நூல் செக்யூரிட்டி செக்கப்பில் மாட்டிக்கொள்வதால் இனி முக நூலுக்கும் போகலாமா வேண்டாமா என்ற யோசனையில் இருக்கிறேன் 🙁

    இப்பொழுது கூட எனது முக நூல் கணக்கு செக் யூரிட்டி செக்கப்பில் மாட்டிக்கொண்டுள்ளது. எனது செல் போன் என்னைக் கேட்டது கொடுத்தேன் . ஆனால் இன்னும் எனது ஐடியை அவர்கள் விடுவிக்கவில்லை
    செம்ம கடுப்பா இருக்கு 😉

  2. நல்ல தகவல் நண்பரே…
    என்னிடம் ட்விட்டர் உள்ளது
    ஆனால் ட்வீட் இல்லையே..
    நான் என்ன செய்வது
    எப்படி இணைப்பது
    (#டவுட்டு) ஹி ஹி ஹி