டைனமிக் டெம்ப்ளேட்டில் Gadget வைக்கலாம்

ப்ளாக்கர் தளம் அறிமுகப்படுத்திய டைனமிக் டெம்ப்ளேட்கள் (Dynamic Templates) பற்றி இப்படியும் படிக்கலாம்! (Dynamic Views) என்ற  பதிவிலும், அதன் குறைகளைப் பற்றி ஏமாற்றத்தைக் கொடுத்த ப்ளாக்கர் புது வசதி என்ற பதிவிலும் பார்த்தோம். அதில் உள்ள முக்கிய குறையே அந்த டெம்ப்ளேட்டில் Gadget சேர்க்க முடியாதது தான். தற்போது பாதி குறையை சரி செய்துள்ளது ப்ளாக்கர்.

தற்போது சில Gadget-கள் மட்டும் டைனமிக் டெம்ப்ளேட்களில் வேலை செய்யும்படி வைத்துள்ளது. அவைகள்,

1. Blog Archive – அனைத்து பதிவுகளையும் காட்டும் Gadget

2. Followers – ப்ளாக்கை பின்தொடர்பவர்கள் Gadget

3. Labels – குறிச்சொற்கள் கேட்ஜெட்

4. Profile – ப்ரொஃபைல் கேட்ஜெட். ஒரு ப்ளாக்கில் பலர் ஆசிரியராக இருந்தால் அனைவரின் பெயரையும் காட்டும்.

5. Subscribe – Follow by Email கேட்ஜட் அல்லது Rss Feed சுட்டியை உங்கள் ப்ளாக்கில் வைத்திருந்தால் இது தானாக வந்துவிடும்.

6. Link List – மற்ற தளங்களுக்கு இணைப்பு கொடுக்கும் கேட்ஜெட்

இந்த  கேட்ஜட்களுடன் Dynamic Template பின்வருமாறு காட்சி அளிக்கும்.

இதற்கு  முன் டைனமிக் டெம்ப்ளேட் வைத்திருந்தால் Layout பகுதி தெரியாமல் இருந்தது. தற்போது அந்த பகுதி வந்துள்ளது.

இந்த மாற்றம் வரவேற்கத்தக்கது என்றாலும் நிரல்களை இணைக்க உதவும் “HTML/Javascript” கேட்ஜெட்டை இணைக்காதது குறையே ஆகும். விரைவில் அதனையும் இணைக்கும் என்று நம்புவோம்.

உங்களுக்குத் தெரியுமா?

நீங்கள்  ஆன்ட்ராய்ட் மொபைல் வைத்திருந்தால் அதன் மூலம் உங்களையோ அல்லது மற்றவைகளையோ கார்டூனாக படம் பிடிக்கலாம். மேலும் விபரங்களுக்கு Cartoon Yourself with Cartoon Camera

ச்சும்மா… ஒரு வெளம்பரம்ம்ம்ம்ம்… 

இதையும் படிங்க:  இப்படியும் படிக்கலாம்! (Dynamic Views)

10 thoughts on “டைனமிக் டெம்ப்ளேட்டில் Gadget வைக்கலாம்”

  1. வணக்கம் நண்பரே …,

    தங்களது அண்மைய யோசனையை ஏற்று எனது வலைத்தளத்திற்கு ஒரு புதிய template ஒன்று மாற்றினேன்.., அதில் கீழ்கண்ட பிரச்சனைகளை என்னால் சரி செய்ய இயலவில்லை நண்பா..,

    1. வலைப்பதிவு தலைப்பு தனித்தனியாய் உடைந்து கிடக்கிறது, அதனை சேர்க்க இயலவில்லை.

    2. வலைப்பதிவு 'Side bar widget title -ஐ' ஹைலைட் செய்ய முடியவில்லை.

    தங்களது உதவியை எதிர்பார்க்கிறேன்.

  2. நண்பருக்கு வணக்கம்.
    நான் இது பற்றி தங்களிடம் பேசலாமா வேண்டாமா என தயங்கி இருந்தேன். ஆனால் வேறு வழி எனக்கு தெரியவில்லை.சில நாட்களுக்கு முன் கூகிளில் “தமிழ்” என்று தேடிய போது மிகவும் ஒரு கீழ்த்தரமான முடிவுகள் முதல் இரண்டு முடிவாக வந்து நின்றன. நம் தமிழ் மொழியையே களங்கப்படுத்தக் கூடியதாய் அது இருந்தது. இது பற்றி நான் கூகுளை தொடர்பு கொள்ள முயற்சித்தேன்.ஆனால் என்னால் முடியவில்லை. அதனால் உங்களிடம் தெரிவிக்கிறேன். தயவு செய்து நீங்களும் மற்ற தமிழ் நண்பர்கலும் முயற்சித்து அதனை கூகிளிற்கு தெரிவித்து அந்த முடிவுகளை தவிர்க்குமாறு வலியுறுத்த வேண்டுகிறேன்.
    நன்றி.
    கு.மோகன்.

  3. இந்த மாற்றத்தைப் பற்றி நானும் ஒரு பதிவு எழுதி இருக்கிறேன் (இன்னும் வெளியிடவில்லை). தாங்கள் இதனை வெளியிட்டு விட்டதால், அதனை வெளியிட தங்கள் அனுமதியைக் கோருகிறேன்!

  4. ஹா..ஹா..ஹா… என்ன நண்பா இப்படி கேட்கிறீங்க? தொழில்நுட்ப செய்தி பற்றி யார் வேண்டுமானாலும் பகிரலாம். பகிர்வதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை.

  5. வணக்கம் சகோ எப்படி உள்ளீர்கள்?..எனக்கு தங்கள்
    உதவி தேவைப்படுகின்றது .அதாவது எனது தள
    முகவரி rupika -rupika .blogspot .com என்பதாகும் அது
    இப்போது rupika -rupika .blogspot .ch என மாறியுள்ளது இது
    எவ்வாறு நிகழ்ந்தது என்று எனக்குப் புரியவில்லை .
    இவ்வாறு உள்ளதனால் பிற தளங்களுக்கு ஆக்கங்களை
    வெளியிட முடியவில்லை .தயவு செய்து இதை சரி
    செய்யும் தகவலை எனக்கு என் தளத்தில் வழங்குவீர்களா?…

  6. ப்லாகில் பின்னணி இசை gadget சேர்ப்பது எப்படி , முன்னர் ராகா வில் இருந்து ஒரு gadget போட்டிருந்தேன் தற்போது அது வேளை செய்யவில்லை ஏன்…….my blog kadambur temple .blogspot.com