ஜிமெயில் ஆயிரம் – அறிவோம் ஆயிரம்

ஜிமெயில் தளம் மெயில் அனுப்புவதற்கு புதிய Compose Mode-ஐ அறிமுகப்படுத்தியது பற்றி இனி ஈஸியா (ஜி)மெயில் அனுப்பலாம் என்ற பதிவில் பார்த்தோம். அப்போது ஸ்மைலீஸ், நிகழ்ச்சிக்கான அழைப்பு (Event Invitation), அனுப்பும் மெயில்களுக்கு லேபில் கொடுப்பது போன்ற வசதிகள் விரைவில் வரவுள்ளதாகவும் பார்த்தோம்.

தற்போது அந்த வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது ஜிமெயில். 

புதிய Compose Mode-ஐ பயன்படுத்த:

நீங்கள் பழைய Compose Mode பயன்படுத்தினால் மெயில் எழுதும் போது மேலே Try out new compose experience என்று இருக்கும். அதை க்ளிக் செய்தால் புதிய Compose Mode (Pop-up Window-வாக) வந்துவிடும்.




அதன் கீழே Formatting, Attachment, Google Drive, Photos, Links, Emoticons Invitation ஆகியவைகளை சேர்க்கும் வசதி உள்ளது. 

இதில் முக்கியமான செய்தி, இந்த புதிய Compose Mode-ல் ஆயிரக்கணக்கான உணர்ச்சித்திரங்களை (Emoticons) சேர்த்துள்ளது.



மொத்தம் 1,287 உணர்சித்திரங்களை சேர்த்துள்ளது. மேலும் இவற்றை காப்பி செய்து பிளாக்கர் பதிவிலும் Paste செய்து சேர்க்கலாம்.


 

Compose Mode-ல் கடைசியாக உள்ள More Options என்பதை க்ளிக் செய்தால் மேலே உள்ள படம் போல வரும்.

Switch back to old compose – பழைய Compose Mode-கு மாறுவதற்கு இதனை க்ளிக் செய்யுங்கள்.

Label – நாம் அனுப்பும் மின்னஞ்சலுக்கு லேபிள் கொடுக்க இதனை க்ளிக் செய்து, லேபில் பெயரை தேர்வு செய்யுங்கள்.

புதிய Compose Mode பாப்-அப் விண்டோவாக இருப்பதால் நான் இதை பயன்படுத்தவில்லை. மற்றபடி இந்த வசதிகள் பிடித்துள்ளது.


அறிவோம் ஆயிரம்:

பேஸ்புக் தளத்தின் வளர்ச்சி பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை. சிலர் இதனை தவறாக பயன்படுத்தினாலும், பலர் இதனை பயனுள்ள வழியில் பயன்படுத்துகின்றனர். பிரபல தொழில்நுட்ப பதிவர் பிரபு கிருஷ்ணா அவர்களும் நானும் இணைந்து அறிவோம் ஆயிரம் என்ற புதிய பேஸ்புக் பக்கத்தை தொடங்கியுள்ளோம். இதில் அறிவியல், பொது அறிவு, தொழில்நுட்பம், விழிப்புணர்வு செய்திகள் போன்றவற்றை பகிர முடிவெடுத்துள்ளோம்.

முகவரி: www.facebook.com/arivomaayiram/

இங்கிருந்தே லைக் செய்ய:

இதையும் படிங்க:  இனி அனைவருக்கும் புதிய ஜிமெயில்

8 thoughts on “ஜிமெயில் ஆயிரம் – அறிவோம் ஆயிரம்”

  1. தக்களின் புது முயர்ச்சிக்கு வாழ்த்துகள்.பேஸ்புக் கணக்கு ஆரம்பிப்பது எப்படி?