தகவல் தொடர்பு சாதனங்களில் முக்கிய பங்கு வகிப்பது மின்னஞ்சல்கள் (ஈமெயில்கள்). நம்மில் பலருக்கு அதிகமான மின்னஞ்சல்கள் வரும். அவற்றில் தேவையில்லாத மெயில்களும் வரும். ஒவ்வொரு மின்னஞ்சல்களையும் திறந்து திறந்து படிக்கணும் என்றால் (என்னை போன்றவர்களுக்கு) கொஞ்சம் சிரமம் தான்.
நம்முடைய சிரமத்தைக்(?) கண்ட ஜிமெயில் தற்போது Preview Pane என்னும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது Microsoft Office Outlook-ல் உள்ளது போன்றாகும்.
உங்களுக்கு வந்துள்ள மின்னஞ்சல்களுக்கு வலது புறம் ஒரு Window இருக்கும். இடது புறம் உள்ள மின்னஞ்சல்களில் எதை க்ளிக் செய்கிறீர்களோ, அதனை வலது புறம் உள்ள விண்டோவில் படிக்கலாம், அங்கிருந்தே அந்த மெயில்களுக்கு பதில் அனுப்பலாம், மெயில்களை அழிக்கலாம்.
இந்த வசதியை பெற:
1. முதலில் https://mail.google.com/mail/#settings/labs (Gmail Lab)சென்று, அங்கு Preview Pane என்னும் Gadget-ஐ தேடவும்.
2. பிறகு அந்த gadget-ல் Enable என்பதை தேர்வு செய்து, Save Changes என்னும் பட்டனை க்ளிக் செய்யவும்.
3. பிறகு உங்களுக்கு புது விண்டோ தெரியும். மின்னஞ்சல்களில் எதையாவது க்ளிக் செய்தால், அது வலது புறம் தெரியும்.
அவ்வளவு தான்..!
மீண்டும் பழைய மாதிரியே வேண்டுமானால், மின்னஞ்சல்களுக்கு மேலே வலது ஓரம் Toggle split Pane Button இருக்கும். அதை க்ளிக் செய்து எப்பொழுது வேண்டுமானாலும் மாறிக்கொள்ளலாம்.
அவ்வாறு வரும் Preview window-வை இரண்டு விதமாக பார்க்கலாம். Toggle பட்டனுக்கு பக்கத்தில், Drop Down Arrow-வை க்ளிக் செய்தால் மூன்று விருப்பங்கள் வரும்.
No Split – ப்ரிவீவ் விண்டோ இல்லாமல் சாதாரணமாக பார்க்க
Vertical Split – வலது புறம் ப்ரிவீவ் பார்க்க
Horizontal Split – கீழே ப்ரிவீவ் பார்க்க
இனி என் போன்றவர்களுக்கு மின்னஞ்சல்கள் படிப்பது எளிதாகிவிடும்.
எனக்கும் உபயோகமான தகவல் நண்பரே
அருமை பகிர்வுக்கு நன்றி
தினமும் அசத்தலான தகவல்கள் தருகிறீர்கள்..
வாழ்த்துக்கள்..
good information
//M.R said… 1
எனக்கும் உபயோகமான தகவல் நண்பரே
அருமை பகிர்வுக்கு நன்றி//
நன்றி நண்பரே!
//# கவிதை வீதி # சௌந்தர் said… 2
தினமும் அசத்தலான தகவல்கள் தருகிறீர்கள்..
வாழ்த்துக்கள்..//
நன்றி நண்பா!
//arul said… 3
good information//
Thank You Friend!
என்னுடைய computer – ல் ,C Drive – ல் மெமரி குறைந்து கொண்டே வருகிறதே!
என்ன செய்து இதை தடுப்பது?
இதற்கு என்ன காரணம்?
அருமையான பகிர்வு!
உபயோகமான தகவல்கள்!
வாழ்த்துக்கள்
நல்ல தகவல் சகோ
வாழ்த்துக்கள்
பயனுள்ள தகவல் சகோதரா!
நண்பரே ஓட்டுப்பட்டையை எப்படி போஸ்ட்க்கு கீழே கொண்டு வந்தீர்கள்
இமெயில் பயன்படுத்தும் அனைவருக்கும் மிகவும் பயனுள்ள பதிவு… நன்றி நண்பரே
பயனுள்ள புது புது தகவல்கள் ….நன்றி !
//koodal bala said… 7
பயனுள்ள புது புது தகவல்கள் ….நன்றி !//
நன்றி நண்பா!
//மாய உலகம் said… 8
இமெயில் பயன்படுத்தும் அனைவருக்கும் மிகவும் பயனுள்ள பதிவு… நன்றி நண்பரே//
நன்றி நண்பரே
//மாய உலகம் said… 9
நண்பரே ஓட்டுப்பட்டையை எப்படி போஸ்ட்க்கு கீழே கொண்டு வந்தீர்கள்//
ஓட்டு பட்டைகளின் Code-ஐ
<data:post.body/> என்ற Code-ற்கு பின்னால் paste செய்தால் இப்படி வரும் நண்பரே!
//அசால்ட் ஆறுமுகம் said… 10
பயனுள்ள தகவல் சகோதரா!//
நன்றி சகோ.!
//ஆமினா said… 11
நல்ல தகவல் சகோ
வாழ்த்துக்கள்//
நன்றி சகோ.!
//சிவகாமி கணேசன் said… 12
அருமையான பகிர்வு!
உபயோகமான தகவல்கள்!
வாழ்த்துக்கள்
//
நன்றி சகோதரி!
//என்னுடைய computer – ல் ,C Drive – ல் மெமரி குறைந்து கொண்டே வருகிறதே!
என்ன செய்து இதை தடுப்பது?
இதற்கு என்ன காரணம்?//
அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கிறது சகோதரி!
1. சாஃப்ட்வேர்கள் அதிகம் வைத்திருந்தால்..
2. அனைத்து ஃபைல்களையும் C: டிரைவில் அல்லது டெஸ்க்டாப்பில் வைத்திருந்தால்..
கணிப்பொறியில் உள்ள temperoary file-களை அளிப்பதன் மூலமும் கொஞ்சம் மெமரி கிடைக்கும்.
அதனை அளிப்பதற்கு http://www.piriform.com/ccleaner/download என்ற முகவரிக்கு சென்று CCleaner என்னும் மென்பொருளை டவுன்லோட் செய்யவும்.
குறிப்பு: Download from Piriform.com என்பதை க்ளிக் செய்து இலவச மென்பொருளை டவுன்லோட் செய்யவும்.
அருமையான தகவல் நன்றி சகோ பகிர்வுக்கு ….
//அம்பாளடியாள் said… 20
அருமையான தகவல் நன்றி சகோ பகிர்வுக்கு ….
//
நன்றி சகோதரி!
gud info…….
http://www.techwet.blogspot.com