ஜனவரி 28 – பேஸ்புக் தளம் முடக்கப்படுமா?

அனானிமஸ் (Anonymous) என்பது இணையத்தில் பிரபலமான ஹேக்கர் குழுமம் ஆகும். இதுவரை பல்வேறு தளங்களை முடக்கியுள்ள இந்த குழுமம் தற்போது சமூக வலைத்தளமான பேஸ்புக் தளத்தை வரும் ஜனவரி 28-ஆம் தேதி முடக்கப் போவதாக இணையத்தில் வதந்தி கிளம்பியுள்ளது.

ஆனால் அனானிமஸ் குழு இதனை மறுத்துள்ளது. கடந்த  நவம்பர் மாதம் இந்த குழு பேஸ்புக் தளத்தை முடக்கப் போவதாகவும் வதந்தி பரவியது. மேலும் இந்த குழு சில நாட்களுக்கு முன் அமெரிக்க நீதித்துறை, யுனிவர்சல் மியூசிக், வெள்ளை மாளிகை, எஃப்.பி.ஐ உள்பட பல தளங்களை முடக்கியது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை அனானிமஸ் குழு மறுத்தாலும், இது குறித்து பேஸ்புக் நிறுவனத்தினர் மற்ற இணையத் தாக்குதல்கள் போலவே இந்த அனானிமஸ் தாக்குதலையும் எதிர்பார்ப்பதாகவும், பாதுகாப்பை பலப்படுத்தியிருப்பதாகவும் கூறியுள்ளனர். மேலும் நாங்கள் எப்போதும் எங்கள் பயனாளர்களுக்கு பாதுகாப்பு அளிப்போம் எனவும் உறுதியளித்துள்ளனர்.


மாட்டிக் கொண்ட MegaUpload; விழித்துக் கொண்ட Filesonic

MegaUpload என்பது இணையத்தில் பிரபலமான கோப்புகளை பகிரும் தளமாகும் (File Sharing site). இதில் சினிமா, பாடல், மென்பொருள்கள் உள்பட காப்புரிமை இல்லாத கோப்புகள் தான் அதிகம் காணப்பட்டன. இதனால் காப்புரிமை சட்டத்தின் கீழ் அதன் நிறுவனர் கிம் டாட்காம் என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் மெகா அப்லோட் உள்பட  மற்ற தளங்களையும் அமெரிக்க நீதித்துறை முடக்கியது. (இதனையடுத்து தான் மேலே சொன்ன அனானிமஸ் குழுமம் சில தளங்களை முடக்கியது.)

இதனைப்பார்த்து  அதிர்ந்து போன மற்றொரு கோப்புகளை பகிரும் தளமான Filesonic, தற்போது கோப்புகளை பகிரும் வசதியை நிறுத்தியுள்ளது. ஆனால் நமது கோப்புகளை சேமித்துக் கொள்ளலாம். அதாவது நாம் பதிவேற்றிய கோப்புகளை நாம் மட்டுமே பதிவிறக்கம் செய்துக்கொள்ள முடியும்.

ஆனால் மற்ற பிரபல தளங்களான Rapidshare மற்றும் Mediafire தளங்கள் இதற்கு அசரவில்லை. தாங்கள் காப்புரிமை விதிகளின்படியே செயல்படுவதாக கூறியுள்ளது.

ஒரு சின்ன தகவல்:

காப்புரிமை இல்லாத கோப்புகளை நமது தளங்களில் பயன்படுத்துவது மட்டுமல்ல, அவ்வாறான தளங்களுக்கு இணைப்பு கொடுப்பதும் காப்புரிமை மீறுதல் சட்டத்தின்படி குற்றமாகும்.

படங்கள் உதவி: அனானிமஸ் (Anonymous)

இதையும் படிங்க:  அப்ளிகேசன் கடை திறக்கும் பேஸ்புக்

6 thoughts on “ஜனவரி 28 – பேஸ்புக் தளம் முடக்கப்படுமா?”

  1. ஸலாம் சகோ.அப்துல் பாஸித்,
    மிக நல்ல தகவல்கள் அளித்தமைக்கு மிக்க நன்றி சகோ.
    அப்புறம்….//காப்புரிமை இல்லாத கோப்புகளை நமது தளங்களில் பயன்படுத்துவது மட்டுமல்ல, அவ்வாறான தளங்களுக்கு இணைப்பு கொடுப்பதும் காப்புரிமை மீறுதல் சட்டத்தின்படி குற்றமாகும்.//…எனில்,
    யார் யார் எது எதற்கு எல்லாம் காப்புரிமை போடலாம்/கூடாது என்ற வரைமுறை ஏதேனும் உள்ளதா சகோ..?

  2. வ அலைக்கும் ஸலாம் சகோ.!

    அதாவது எதற்கெல்லாம் காப்புரிமை பெறப்பட்டுள்ளது? என்று தெரிய வேண்டுமா?