சமீபத்தில் கூகுள் அறிமுகப்படுத்திய புதிய கூகுள் பார் பற்றி ஏற்கனவே பார்த்தோம். தற்போது புதிய Google (Navigation) Bar ஒன்றை சோதனை செய்து வருகிறது. அதனை நாம் எப்படி பெறுவது? என்பதை இங்கு பார்க்கலாம்.
பழைய கூகிள் பாரையும், புதிய கூகிள் பாரையும் கலந்து செய்த கலவையாக இந்த புதிய பாரை கொடுத்திருக்கிறது கூகிள். இன்னும் எத்தனை முறை மாற்ற போகிறதோ? தெரியவில்லை.
1. ஃபயர்பாக்ஸ் உலவியை திறந்து Cntrl+Shift+K என்ற பட்டன்களை ஒரே நேரத்தில் அழுத்தவும். பிறகு பின்வரும் விண்டோ திறக்கும்.
அந்த விண்டோவின் கீழே பின்வரும் நிரலியை இட்டு Enter பட்டனை அழுத்தவும்.
2. பிறகு அந்த விண்டோவை மூடிவிட்டு கூகிள் தளத்தை மறுபடி திறந்தால் புதிய கூகிள் பார் வந்துவிடும்.
1. க்ரோம் உலவியை திறந்து Ctrl+Shift+J என்ற பட்டன்களை ஒரே நேரத்தில் அழுத்தவும். பிறகு பின்வரும் விண்டோ திறக்கும்.
அந்த விண்டோவில் Console என்பதை தேர்வு செய்து, அங்கு பின்வரும் நிரலியை இட்டு Enter பட்டனை அழுத்தவும்.
2. பிறகு அந்த விண்டோவை மூடிவிட்டு கூகிள் தளத்தை மறுபடி திறந்தால் புதிய கூகிள் பார் வந்துவிடும்.
இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் பெற:
1. இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் உலவியை திறந்து, கூகிள் தளத்திற்கு சென்று F12 பட்டனை அழுத்தினால் பிறகு பின்வரும் விண்டோ திறக்கும்.
அதில் Script என்பதை தேர்வு செய்து, Console என்பதை தேர்வு செய்து, அதன் கீழே பின்வரும் நிரலியை இடவும்.
பிறகு அதற்கு கீழே உள்ள Run Script என்ற பட்டனை அழுத்தவும்.
பிறகு அந்த விண்டோவை மூடிவிட்டு கூகிள் தளத்தை மறுபடி திறந்தால் புதிய கூகிள் பார் வந்துவிடும்.
மீண்டும் பழைய முறைக்கு மாற மேலுள்ள Code-ற்கு பதிலாக பின்வரும் Code-ஐ பயன்படுத்துங்கள்.
document.cookie="PREF=; path=/; domain=.google.com";window.location.reload();
கவனிக்க: நீங்கள் google.com என்பதற்கு பதிலாக google.co.in போன்ற முகவரியை பயன்படுத்தினால் மேலுள்ள code-ல் domain=.google.com என்பதற்கு பதிலாக domain=.google.co.in போன்று உங்களுக்கு வரும் முகவரியை கொடுங்கள்.
டிஸ்கி: இது ஒரு காப்பி & பேஸ்ட் பதிவு ஆகும். ஏற்கனவே நான் பதிவிட்டதில் Coding மட்டும் மாற்றி பதிவிட்டுள்ளேன்.
புதிய தகவல்களை முந்திக்கொண்டு தருவதில் நீங்களே முதல்தரம் . நன்றி நண்பா பகிர்வுக்கு
சகோதரர் பாஸித்,
அஸ்ஸலாமு அலைக்கும்,
//புதிய தகவல்களை முந்திக்கொண்டு தருவதில் நீங்களே முதல்தரம்//
உங்களின் கடுமையான முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றி இது. எல்லாப் புகழும் இறைவனிற்கே.
உங்கள் மீது நாங்கள் வைத்திருக்கும் இத்தகைய நம்பிக்கையை தாங்கள் என்றென்றும் தக்கவைத்து கொள்ள இறைவனை பிரார்த்திக்கின்றேன்..
வஸ்ஸலாம்
சார். தொழில்நுட்ப தகவல்களை நல்ல தரத்தோடு தொடர்ந்து தருகிறீர்கள். வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றி.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ, தகவலுக்கு நன்றி
நன்றி
பிளாக்கர், கூகுள் பற்றிய எந்த தகவல் ஆனாலும் தங்களுடைய வலைக்கு வந்தாலே போதும் நண்பரே பலதும் தெரிந்துக்கொள்ளலாம்.அதில் ஒரு உதாரணம் இந்த பதிவு.நன்றி.
சைக்கோ திரை விமர்சனம்..
அட, புதிய விஷயமா இருக்கே… மிக்க நன்றி நண்பா!
thank u good post
Thank you for your earlier information.
பயனுள்ள பதிவு ! வாழ்த்துக்கள் ! நன்றி !