பேஸ்புக் தளத்தின் வளர்ச்சியை பற்றி நான் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. பேஸ்புக்கில் இது வரை கணினி, மொபைல்களில் இருந்து தான் பேஸ்புக் Status Update செய்திருப்போம். ஒரு மாறுதலுக்காக செவ்வாய் கிரகத்தில் இருந்து அப்டேட் செய்வோமா?
இது நகைச்சுவை விளையாட்டு. யாரும் அடிக்க வரக்கூடாது.
பொதுவாக நாம் மொபைல்களில் இருந்து பேஸ்புக் ஸ்டேடஸ்அப்டேட் செய்தால் via Mobile, via iPhone, via Blackberry என்று வரும். அதற்கு பதிலாக via செவ்வாய் கிரகம், via Nokia 1100, via iPhone 5 என்பது போன்று Facebook Application நாமே உருவாக்கி செய்யலாம். எப்படி என்று இங்கு பார்ப்போம்.
முதலில் https://developers.facebook.com/apps என்ற முகவரிக்கு சென்று Create New App என்பதை கிளிக் செய்யுங்கள்.
பிறகு App Name என்ற இடத்தில் செவ்வாய் கிரகம், Nokia 1100, iPhone5 போன்று உங்களுக்கு விருப்பமானதை கொடுங்கள்.
App namespace என்ற இடத்தில் ஆங்கிலத்தில் ஏதாவது கொடுங்கள். இது நீங்கள் உருவாக்கும் அப்ளிகேசனுக்கான முகவரி.
பிறகு continue என்பதை கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கான அப்ளிகேசன் உருவாக்கப்படும்.
பிறகு edit icon என்பதையும் இடது புறம் உள்ள படத்தையும் தனித்தனியாக கிளிக் செய்து உங்களுக்கு பிடித்த படத்தை அப்லோட் செய்யுங்கள். பிறகு கீழே உள்ள Save Changes என்பதை கிளிக் செய்யுங்கள்.
மேலே உள்ளது போல வரும். அதில் App ID என்ற இடத்தில் இருக்கும் எண்ணை காப்பி செய்துக் கொள்ளுங்கள்.
பிறகு பின்வரும் முகவரிக்கு செல்லுங்கள்.
https://www.facebook.com/dialog/feed?_path=feed&app_id=439268769418013&&redirect_uri=https%3A%2F%2Fwww.facebook.com&display=popup
மேலே உள்ள சிவப்பு கலரில் உள்ள எண்களை நீக்கிவிட்டு உங்கள் App ID எண்களைக் கொடுக்க வேண்டும்.
மேலே உள்ளது போல வரும். பெட்டியில் ஏதாவது எழுதி கீழே உள்ள share என்பதை கிளிக் செய்யுங்கள். அவ்வளவுதான்!
செவ்வாய் கிரகத்தில் இருந்து நீங்கள் அப்டேட் செய்ததாக காட்டும்.
பிறகு நீங்கள்அப்ப்ளிகேசன் பெயரை மாற்றினால் பழைய ஸ்டேடஸும் மாறிவிடும்.
நாளை புதன் கிரகத்தில் இருந்து அப்டேட் செய்யலாம். சரியா?
ஹா ஹா ஹா. சூப்பர் சகோ.
எங்கேயோ போயிட்டீங்க !
நல்ல ஐடியா . நன்றி
via டவுன் பஸ் அப்படின்னு போட்டுர்வோம் 😉
அங்கேயும் சூடு தானா???
வேடிக்கையான விஷயம்…
பகிர்வுக்கு நன்றி நண்பா
ஹி ஹி ஹி .., எப்புடித்தான் இதையெல்லாம் புடிக்கிறீங்களோ தெரியலை ஹி ஹி ஹி ..!
செல்லாது.. செல்லாது!!!
சூப்பர்
தொடந்து பேஸ் புக் பற்றி அப் டேட் வருகிறதே …
பகிர்வுக்கு நன்றி-
nalla pathivu nanbare……….
ஐயோ ஐயோ இப்பவே செய்யலாமா..? என்னுதோனுது..பகிவுக்கு நன்றி நண்பா
சூப்பர்
நல்லதொரு பதிவு.. நானும் செய்து பார்த்திடறேன்.. இதை இங்கே குறிப்பிட்ட சொல்லியே ஆகணும் அப்துல் பாசித் சார்…
செவ்வாய் கிரகத்தைப் பத்தி எழுதி நம்ம "ஆளுங்க" அருணை உசுப்பேத்தி விட்டுட்டீங்க.. அவரோட தளத்துலப் போய் பாருங்க… செவ்வாயை என்னமா அளந்து விட்டிருக்காருன்னு…
நீங்க ஒரு தீர்க்கதரிசி…
தற்போது கியூரியோசிட்டி என்னும் ரோவர் செவ்வாயில் இருந்து ஸ்டேடஸ் அப்டேட் கொடுக்குதாம்..
தகவல்கள்: http://www.aalunga.in/2012/08/curiosity-rover-mars-mission.html
தங்கள் அனைவரின் கருத்துக்கும் பதில் அளிக்காததற்கு மன்னிக்கவும்! 🙁