சுட்டிகள் புதிய விண்டோவில் திறக்க..

நமது ப்ளாக்கில் நாம் கொடுக்கும் சுட்டிகளை(Links) வாசகர்கள் க்ளிக் செய்தால், அதே விண்டோவில் வராமல் வேறு விண்டோவில் அல்லது Tab-ல் திறக்க வைப்பது எப்படி? என்று பார்ப்போம்.

1. Blogger Dashboard => Design => Edit Html பக்கத்திற்கு செல்லவும்.

2. Download Full Template என்பதை கிளிக் செய்து ஒரு காப்பி எடுத்து வைத்து கொள்ளுங்கள். நாம் டெம்ப்ளேட்டில் மாற்றம் செய்யும் போது தவறு ஏதாவது ஏற்பட்டால் மீண்டும் அதை Upload செய்து கொள்ளலாம். 


3.


<head>

என்ற Code-ஐ தேடி, அதற்கு பின்னால், பின்வரும் Code-ஐ Paste செய்யவும்.


<base target='_blank' />
 4. பிறகு Save Template என்பதை க்ளிக் செய்யவும்.

அவ்வளவு தான்.. இனி உங்கள் ப்ளாக்கில் உள்ள எந்த லிங்கை க்ளிக் செய்தாலும் அது புதிய Tab-ல், அல்லது புதிய Window-வில் திறக்கும்.

கவனிக்க: இவ்வாறு செய்வதனால் நம் தளத்தில் உள்ள பதிவுகள், பின்னூட்டங்கள் போன்ற (நம் தளத்திற்கே கொண்டு செல்லும்) சுட்டிகளும் வேறு Tab அல்லது Window-ல் ஓபன் ஆகும். இதனால் வாசகர்களுக்கு அலுப்பு ஏற்படலாம். இதனையும் கவனத்தில் கொள்ளவும்.
இதையும் படிங்க:  நமது ப்ளாக்கை பிரபலமாக்குவது எப்படி? (இறுதி பகுதி)

6 thoughts on “சுட்டிகள் புதிய விண்டோவில் திறக்க..”

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

    மிகவும் அவசியமான பதிவு சகோ.அப்துல் பாசித்.

    //கவனிக்க: //

    அது மட்டுமல்ல… இந்த மாறுதலால்…

    சகோ., Go to top அழுத்தினாலும் கூட அடுத்த window அல்லது tab ஓபன் ஆகும்..!?!?

    இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளியாக… நம் விருப்பப்படி எந்தந்த சுட்டிகள் எப்படி திறக்க வேண்டும் என்று ஏதேனும் codes உள்ளனவா..?

  2. //முஹம்மத் ஆஷிக் 'Citizen of World' said…

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

    மிகவும் அவசியமான பதிவு சகோ.அப்துல் பாசித்.

    //கவனிக்க: //

    அது மட்டுமல்ல… இந்த மாறுதலால்…

    சகோ., Go to top அழுத்தினாலும் கூட அடுத்த window அல்லது tab ஓபன் ஆகும்..!?!?

    இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளியாக… நம் விருப்பப்படி எந்தந்த சுட்டிகள் எப்படி திறக்க வேண்டும் என்று ஏதேனும் codes உள்ளனவா..?
    //

    வ அலைக்கும் ஸலாம் (வரஹ்..)
    நாளை வரை காத்திருக்க முடியுமா, சகோ.!? அதை பற்றி நாளை பதிவிடுகிறேன் (இறைவன் நாடினால்..)