Social Networking Sites எனப்படும் சமூக வலைப்பின்னல் தளங்கள் பற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை. இணைய உலகின் ராஜாவாக திகழ்ந்த கூகிள் நிறுவனத்துக்கு தற்போது சவால் விட்டுக் கொண்டிருப்பது ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைப்பின்னல் தளங்கள் தான். அவைகளுக்கு போட்டியாக கூகிளும் பல்வேறு முயற்சிகளை எடுத்தது. ஆனான் எதுவும் எடுபடவில்லை.
தற்போது கூகுள் ப்ளஸ்(Google+) என்ற புதிய சேவை மூலம் சமூக வலைபின்னல் தளங்களுக்கு போட்டியாக மீண்டும் களத்தில் இறங்க உள்ளது. கூகிள் +1 (பட்டன்) என்பது வேறு என்பதை கவனத்தில் கொள்ளவும்.
கூகிள் ப்ளஸ் என்பது மற்ற சமூக தளங்கள் போன்று நண்பர்களுடன் உறவுப்பாலத்தை அமைப்பதற்கான தளம். அனைத்து சமூக தளங்களும் இதை தான் செய்கின்றன. ஆனால் அவைகள் ஒவ்வொன்றும் வேறுபடுவது அவைகள் கொடுக்கும் வசதிகளை பொறுத்தே! அதனால் கூகிளும் மற்ற தளங்களைவிட வேறுபடுவதற்காக சில வசதிகளை அறிமுகப்படுத்தவுள்ளது.
தற்போது கூகிளின் முகப்பு பக்கத்தில் மாற்றம் வந்திருப்பதை கவனித்திருப்பீர்கள். அங்கு Web என்பதற்கு பக்கத்தில் +You என்ற Tab வர இருக்கிறது. அதனை க்ளிக் செய்தால் பின்வரும் வசதிகள் வரும்.
ப்ளஸ் சர்குள்ஸ் (+Circles) – நட்பு வட்டம், பதிவர் வட்டம் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அது போல தான் இதுவும். நண்பர்கள், உறவினர்கள், பதிவர்கள் இப்படி தனிதனி குழுவாக(Group) வைத்திருப்பது. நாம் பகிர நினைப்பதை குறிப்பிட்ட வட்டத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் பகிரலாம்.
ப்ளஸ் ஸ்பார்க்ஸ்(+Sparks) – நீங்கள் ஒரு விஷயத்தை பற்றி அதிகம் கூகிளில் தேடுபவர்களாக இருந்தால், இந்த வசதி உங்களுக்காகத்தான்..! உதாரணத்திற்கு “தொழில்நுட்பம்” என்பதை அதிகம் தேடுபவர்களாக இருந்தால், முதலில் அந்த வார்த்தையை கொடுத்து தேட வேண்டும். அதற்கான முடிவுகள் வரும். அங்கு தேடுபொறி பெட்டிக்கு கீழே Add Interest என்பதை க்ளிக் செய்தால், அந்த வார்த்தை இடது புறம் வந்துவிடும். பிறகு நீங்கள் தொழில்நுட்பம் பற்றி தேடுவதாக இருந்தால், அந்த வார்த்தையை க்ளிக் செய்தால் போதுமானது.
ப்ளஸ் ஹேங்கவுட்ஸ் (+Hangouts) – இணையத்தில் நண்பர்கள் பலருடன் ஒரே நேரத்தில் முகம் பார்த்து உரையாடும் வசதி( Group video Chat). இதற்கு உங்களிடம் வெப்கேமரா இருக்க வேண்டும்.
இன்ஸ்டன்ட் அப்லோட்(Instant Upload) – மொபைல்களில் எடுக்கப்படும் படங்களை உடனடியாக பதிவேற்றம் செய்யும் வசதி.இது பற்றி சரியாக தெரியவில்லை. பயன்படுத்திப் பார்த்தால் தான் தெரியும்.
இன்னும் சில வசதிகளையும் அறிமுகப்படுத்தவுள்ளது. தற்போது சில நபர்களுக்கு மட்டுமே சோதனை முறையாக அறிமுகப்படுத்த உள்ளது. அந்த சோதனையில் சேர நீங்கள் உங்கள் பெயரையும்,மின்னஞ்சல் முகவரியினையும் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்ய இங்கு க்ளிக் செய்யவும்.
இது பற்றிய அதிகாரப்பூர்வ தகவலையும், வீடியோக்களையும் பார்க்க இங்கு க்ளிக் செய்யவும்.
இது பற்றிய Demo பார்க்க இங்கு க்ளிக் செய்யவும்.
கூகிளின் இந்த அறிமுகம் சாதனை படைக்குமா? அல்லது Google wave, Google Buzz போன்று சோடை போகுமா? என பொறுத்திருந்து பார்ப்போம்.
Useful information
An Interesting read, on behind the scenes
http://www.wired.com/epicenter/2011/06/inside-google-plus-social/all/1
THANK YOU FOR INFORMATION.INTERESTING COMPETITION BETWEEN SOCIAL NETWORKING SITES.
//koodal bala said…
Useful information
//
Thank You Friend!
//Anonymous said… 2
An Interesting read, on behind the scenes
http://www.wired.com/epicenter/2011/06/inside-google-plus-social/all/1
//
Thank You for the information Friend! It helped me to add inmages of Google+.
//r.elan said…
THANK YOU FOR INFORMATION.INTERESTING COMPETITION BETWEEN SOCIAL NETWORKING SITES.//
Thank You friend!
நல்ல பதிவு
//வெள்ளித்திரை விமர்சனம் said…
நல்ல பதிவு
//
நன்றி நண்பா!
வலைசரத்தில் உங்களை பற்றி எழுதி உள்ளேன் நேரம் இருந்தால் பார்க்கவும்
நன்றி
கூட்டான்சோறு பகுதி – 2
//"என் ராஜபாட்டை"- ராஜா said… 9
வலைசரத்தில் உங்களை பற்றி எழுதி உள்ளேன் நேரம் இருந்தால் பார்க்கவும்
நன்றி
கூட்டான்சோறு பகுதி – 2
//
நன்றி நண்பா!