கேள்வியும் நீங்களே! பதிலும் நீங்களே!

நமக்குள்ளே எழும் கேள்விகள் தான் எத்தனை எத்தனை? எல்லாம் தெரிந்தவனும் இல்லை, ஒன்றும் தெரியாதவனும் இல்லை! நமக்கு தெரிந்ததை தெரியாதவர்களுக்கு சொல்லுவோம், தெரியாததை தெரிந்தவர்களிடம் கேட்போம். கொஞ்சம் மொக்கையா இருக்கோ? சரி நேரிடையாக பதிவிற்கு செல்வோம்.

பிரபல தொழில்நுட்ப பதிவர் பிரபு கிருஷ்ணாவும் நானும் இணைந்து பதில்! என்னும் புதிய தளத்தை உருவாக்கியுள்ளோம். பெயரை பார்த்தவுடன் புரிந்திருக்கும். ஆம், தொழில்நுட்பம் தொடர்பான உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் தளம்.

(Piracy தவிர்த்து) தொழில்நுட்பம் தொடர்பான உங்கள் அனைத்து கேள்விகளையும் இங்கு கேட்கலாம். நாங்களோ அல்லது அந்த கேள்விகளுக்கு பதில் தெரிந்தவர்களோ பதில் அளிப்பார்கள். அதே போல இங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு உங்களுக்கு பதில் தெரிந்தால் நீங்களும் பதில் அளிக்கலாம். கேள்வியும் நீங்களே! பதிலும் நீங்களே!

கேள்வி கேட்பதற்கும், பதில் அளிப்பதற்கும் நீங்கள் கணக்கு ஒன்றை தொடங்க வேண்டும். கணக்கு தொடங்கியவுடன் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு சுட்டி ஒன்று வரும், அதை க்ளிக் செய்து மின்னஞ்சல் முகவரியை உறுதி செய்ய வேண்டும்.

உங்களுக்கு பேஸ்புக் கணக்கு இருந்தால் அதன் மூலமாகவும் உள் நுழையலாம்.

தற்போது தொழில்நுட்பம் தொடர்பான கேள்விகளுக்கு மட்டுமே அனுமதி. இறைவன் நாடினால் இதற்கு கிடைக்கும் வரவேற்பைப் பார்த்து மற்ற பிரிவுகள் அனுமதிக்கப்படும்.

தமிழில் இது புதிய முயற்சி இல்லை என்றாலும் சிறந்த முயற்சியாக கொண்டுவர முயற்சிக்கிறோம்.

பதில்கள் பேஸ்புக் பக்கம்: https://www.facebook.com/bathilgal 

தங்கள் ஆதரவை எதிர்பார்த்து,

பிரபு கிருஷ்ணா & அப்துல் பாஸித்

இதையும் படிங்க:  Privacy Policy பக்கம் உருவாக்குவது எப்படி?

35 thoughts on “கேள்வியும் நீங்களே! பதிலும் நீங்களே!”

 1. நல்ல முயற்சி நண்பரே.. தமிழில் இப்படி ஒரு தளம் ஆரம்பிக்க பட்டது மிகவும் அருமையான விடயம்.. கலக்குங்க..

 2. நல்லதொரு முடிவு.

  இருவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்…தொடரட்டும் உங்களின் சீரிய பணி.

 3. உங்கள் முயற்சி வெற்றி பெற என் வாழ்த்துக்கள்……

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

 4. நேற்று உங்கள் தளம் ஓபன் ஆகவேஇல்லை இன்னைக்கு தான் ஓபன் ஆச்சு இப்போது புதிய மின்வெட்டு முறை அறிமுகம் ஆகியுள்ளது காலை ஆறு டு மதியம் மூணு வரை சந்தோசமாய் இருக்கோம்…..

 5. போங்கையா இவ்வளவு நாள் சீனு ஹாரி தான் பிரபலபதிவர் என்பதை ஒத்து கொள்ளாமல் திரிந்தனர் இப்ப அந்த லிஸ்டில் பிரபுவும் சேர்ந்து விட்டார்,,,,,,,

 6. வாவ் அருமையான முயற்சி…

  வாழ்த்துக்கள்…

  நானெல்லாம் எல் கே ஜி தனமாத்தான் கேள்வி கேட்பேன்…

  சகித்துக்கொள்ளுங்கள்…