கூகுள் +1 பட்டனில் நண்பர்களின் பரிந்துரை

பேஸ்புக் தளத்திற்கு போட்டியாக களமிறங்கிய கூகுள் ப்ளஸ் தளம் பேஸ்புக் லைக் பட்டனுக்கு போட்டியாக கூகுள் +1 பட்டனைக் கொண்டு வந்தது நாம் அனைவரும் அறிவோம். சமீபமாக கூகுள் ப்ளஸ் ஒன் பட்டனில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வரும் கூகுள் தற்போது Google +1 Recommendations என்னும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதாவது ஒரு தளத்தில் ப்ளஸ் ஒன் பட்டனில் மவுசை நகர்த்தி சென்றால் (கூகுள் ப்ளஸ் தளத்திலுள்ள) உங்கள் நண்பர்கள் அந்த தளத்தில் ப்ளஸ் ஒன் செய்து பரிந்துரைத்த மூன்று பதிவுகளை காட்டும். இது ஒவ்வொரு முறையும் மாறும். உதாரணத்திற்கு மேலே இருக்கும் படமும், கீழே இருக்கும் படமும் ஒரே பதிவில் காட்டப்பட்ட பரிந்துரைகள்.

இந்த  வசதியால் நம் பதிவுகளை படிக்கும் வாசகர்கள் அவற்றை கிளிக் செய்து படிப்பதன் மூலம் அதிக நேரம் நமது தளத்தில் செலவிடுவார்கள். இதனால் அலெக்சா ரேங்கும் அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு.

இதில் உள்ள பிரச்சனை என்னவென்றால் ப்ளஸ் ஒன் செய்யும் முன் இந்த பரிந்துரைகளை காட்டும். (ப்ளஸ் ஒன் செய்துவிட்டால், பரிந்துரைக்கு பதிலாக அந்த குறிப்பிட்ட பதிவை பகிரும் வசதியை காட்டும்). பரிந்துரைகளை காட்டும் போது வரும் பதிவுகளை கிளிக் செய்தால் இன்னொரு Tab-ல் அந்த பதிவு திறக்கும். அப்படி படிக்க சென்ற வாசகர்கள் திரும்ப வந்து முந்தைய பதிவிற்கு ப்ளஸ் ஒன் செய்வார்களா? என்பது சந்தேகமே!

இந்த வசதிக்கு நீங்கள் நிரலில் மாற்றம் செய்ய வேண்டிய அவசியமில்லை. ப்ளஸ் ஒன் பட்டன் வைத்திருந்தாலே போதும். ப்ளஸ் ஒன் பட்டன் இணைக்கவில்லையெனில் பிளாக்கர் பிரச்சனைக்கு முழுமையான தீர்வு என்ற பதிவில் அதற்கான நிரல் இருக்கிறது.

இந்த வசதி தற்போது Developer preview group-ல் உள்ளவர்களுக்கு மட்டுமே தெரியும். உங்களுக்கும் தெரிய இங்கே கிளிக் செய்து அந்த குழுமத்தில் இணைந்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிங்க:  கூகுள் தளம் ஹேக் செய்யப்பட்டுள்ளது

11 thoughts on “கூகுள் +1 பட்டனில் நண்பர்களின் பரிந்துரை”

  1. Developer preview group-ல் இணைந்த வர்களுக்கு மட்டும் தானா நண்பா..விரைவில் அனைவருக்குமா நண்பா…

    தகவலுக்கு நன்றி நண்பா…