கூகுள் ஸ்டேசன் – அதிவேக இலவச இணையம்

கூகுள் நிறுவனம் செப்டம்பர்  மாதம் இந்திய ரயில் நிலையங்களில்  RailWire என்ற பெயரில் இலவச அதிவேக இணைய வசதியை அறிமுகப்படுத்தியது. தற்போது அதனை Google Station என்று   பெயர் மாற்றம்  செய்துள்ளது.

கூகுள் ஸ்டேசன்

கூகுள் ஸ்டேசன் அதிவேக  இணைய  சேவையை ரயில் நிலையங்களில் மட்டுமல்லாமல் வணிக வளாகங்கள், பேருந்து நிலையங்கள், நகர மையங்கள் ஆகியவற்றுக்கு விரிவுப்படுத்தவுள்ளது. மேலும் இந்தியாவைத் தவிர வேறு நாடுகளுக்கும் இந்த சேவையை அளிக்க முடிவெடுத்துள்ளது. 
இதற்காக வர்த்தக பங்காளர்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது கூகுள் நிறுவனம். தற்போது இலவசமாக வழங்கும் இந்த இன்டர்நெட் வசதியை விரைவில் கட்டணமாக்க திட்டமிட்டுள்ளது.
தற்போது 53 நிலையங்களில் இருக்கும் இந்த வசதி இந்த ஆண்டு இறுதிக்குள் நூறு ரயில் நிலையங்களாக அதிகப்படுத்தவுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள கூகுள் ஸ்டேசன் ரயில் நிலையங்கள்:

  1. சென்னை எக்மோர்
  2. சென்னை சென்ட்ரல்
  3. தாம்பரம் ரயில் நிலையம்
  4. திருச்சிராப்பள்ளி ஜங்சன்
  5. மதுரை ஜங்சன்
  6. கோயம்பத்தூர் ஜங்சன்
மேலும் தகவலுக்கு https://station.google.com/
இதையும் படிங்க:  தமிழ்மணத்தில் ஓட்டு போட்டது யார்? #2

7 thoughts on “கூகுள் ஸ்டேசன் – அதிவேக இலவச இணையம்”

  1. கோவை சந்திப்பில் பயன்படுத்திப் பார்த்தேன். நல்ல வேகமாக இருக்கிறது. இது இந்த மாதம் தான் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது தெரியாத தகவல்.

  2. நல்ல விஷயம்தேன் .. ஆனா என் 1100 ல நெட்டு ஏன் வேலை செய்யமாட்டேங்குதுன்னு கேட்டா அடிக்க வாரானுக.. இத நீங்கதான் பைசல் பண்ணிவிடனும்

  3. இலவசமாக கொடுத்து பழக்கப்படுத்துவார்கள் பின் கட்டணம் கழுத்தை நெறிக்கும் நம்மாட்கள் தெறித்து ஓடுவார்கள். தகவலுக்கு நன்றி.