தேடுபொறிகளில் நமது தளம் முன்னணியில் வருவதற்கான சில வழிகளை பற்றி தேடுபொறி ரகசியங்கள் என்ற தொடரில் பார்த்தோம். நாளுக்கு நாள் தனது தேடல் படிமுறைகளை (Search Algorithms) மேம்படுத்திக் கொண்டு இருக்கும் கூகிள் தளம், வெப்மாஸ்டர்ஸ் எனப்படும் வலைத்தள உரிமையாளர்களுக்கு பயன்படும் வகையில் பல உதவிகளையும் செய்து வருகிறது. அதில் ஒன்று நமது தளங்களை ஆய்வு செய்வதற்கான கருவி, வெப்மாஸ்டர் டூல். இது கூகிளின் தளமாகும்.
வெப்மாஸ்டர் டூல் மூலம் கூகிள் தேடுபொறியின் பார்வையில் நமது தளம் எவ்வாறு உள்ளது? என்பதை பார்க்கலாம். இதன் மூலம் நமது தளத்தை மேம்படுத்தி, கூகுள் உள்பட பல தேடுபொறிகளில் முன்னணியில் வரவைக்கலாம். இதனை பயன்படுத்தும் முறைகள் பற்றி இந்த தொடரில் விரிவாக பார்ப்போம்.
வலைத்தளத்தை சேர்த்தல்:
உங்கள் தளத்தை பற்றி அறிந்துக் கொள்ள முதலில் உங்கள் தளத்தை சேர்க்க வேண்டும். மொபைல் தளங்கள் உள்பட அதிகபட்சமாக ஆயிரம் தளங்கள் வரை உங்கள் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் அதனுடைய உரிமையாளர் நீங்கள் தான் என்பதை உறுதி செய்ய வேண்டும்.
1. முதலில் https://www.google.com/webmasters/tools/ என்ற முகவரிக்கு சென்று உங்கள் கூகுள் கணக்கு மூலம் உள்நுழையுங்கள்.
2. அங்கு Add a Site என்பதை க்ளிக் செய்து, உங்கள் தள முகவரியை கொடுத்து, Continue என்பதை க்ளிக் செய்யுங்கள். [Sub Domain பயன்படுத்துபவர்கள் அதனை மட்டும் கொடுக்கவும்]
பொதுவாக ப்ளாக்கர் தளங்களை உங்கள் கூகுள் கணக்கு மூலம், அந்த தளத்திற்கு நீங்கள் தான் உரிமையாளர் என்பதை தானாகவே உறுதி செய்துவிடும். பழைய ப்ளாக்கர் தளங்களையும், மற்ற தளங்களையும் உறுதி செய்ய சிலவற்றை செய்ய வேண்டும். கூகிள் அனாலிடிக்ஸ் பயன்படுத்தும் ப்ளாக்கர் அல்லாத தளங்களையும் தானாகவே உறுதி செய்துவிடும்.
3. Continue பட்டனை க்ளிக் செய்த பிறகு Verify Ownership என்ற பக்கத்திற்கு செல்லும். அங்கு உங்கள் தளத்தை உறுதி செய்வதற்கு மூன்று வழிகள் இருக்கும்.அதில் “Add a meta tag to your site’s home page” என்பதை க்ளிக் செய்தால் உங்கள் தளத்திற்கான பிரத்யேக Meta Code-ஐ காட்டும். அதனை காப்பி செய்துக் கொள்ளுங்கள்.
4. பிறகு தனியாக ஒரு Window அல்லது Tab-ஐ திறந்து, Blogger Dashboard=> Template=> Edit Template Html பக்கத்திற்கு செல்லுங்கள். [மாற்றம் செய்வதற்கு முன் உங்கள் டெம்ப்ளேட்டை Backup எடுத்துக் கொள்ளுங்கள்.]
5. அங்கு
என்ற Code-ஐ தேடி அதற்கு கீழே நீங்கள் காப்பி செய்த Meta Code-ஐ Paste செய்யுங்கள்.
6. பிறகு Save Template என்பதை க்ளிக் செய்யுங்கள்.
7. பிறகு மீண்டும் ஏற்கனவே திறந்து வைத்துள்ள Verify Ownership பக்கத்திற்கு சென்று, அங்கு Verify என்ற பட்டனை க்ளிக் செய்யுங்கள்.
உங்கள் தளம் உறுதி செய்யப்பட்டதாக அறிவிக்கும். உறுதி செய்த பிறகு உங்கள் தளத்திற்கான Dashboard பக்கத்தை காட்டும். புதிதாய் சேர்த்த தளங்களுக்கு விவரங்களை காட்ட சிறிது நாள் எடுக்கும். அதுவரை காத்திருக்க வேண்டும். ஏற்கனவே உங்கள் ப்ளாக்கில் கூகிள் அனலிடிக்ஸ் நிறுவியிருந்தால் உடனே காட்டும்.
Dashboard-ல் இடது புறம் Sidebar-ல் Site Configuration, Your Site on the Web, +1 Metrics, Diagnostics, Labs என்று ஐந்து தேர்வுகள் இருக்கும். இறைவன் நாடினால் இவைகளை பற்றி ஒவ்வொன்றாக அடுத்தடுத்த பகுதிகளில் பார்ப்போம்.
SEO Quote:
என்னை போன்ற புதிய வலை பதிவர்களுக்கு மிகவும் அவசியமான பதிவு நண்பரே!வாழ்த்துக்கள்.
மிகவும் உபயோகமான பதிவு…நன்றியுடன் வாழ்த்துக்கள் நண்பரே…!
மிகவும் பயனுள்ள தகவல் உடனே ட்ரை பண்ணுகிறேன். எனது ஊரின் பைத்துல்மால், நிதிநிலை அறிக்கை போட்டு இருக்கிறேன். வந்து பார்க்கவும்
payanulla thagaval..nanri
புதிய பதிவர்களுக்கு பயனுள்ள தகவல்..
ஏற்கனவே நான் கூகிள் அனலிடிக்ஸ் நிறுவியிருந்ததால் Your site has been added to your account என்று வந்துவிட்டது. அடுத்த பதிவு எப்ப பிரதர் சீக்கிரம்
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி சகோ .தமிழ்மணம்
ஓட்டுப் போட்டாச்சு வாழ்த்துக்கள் .
அருமையான தகவல் நண்பரே…
தொடரட்டும் உங்கள் வெற்றிபயணம்
இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள்
நட்புடன்
சம்பத்குமார்
வணக்கம் சகோதரா, அருமையான விளக்கக் குறிப்பாக, கூகிள் வெப் மாஸ்டரில் Meta tag இணைப்பதனைப் பகிர்ந்திருக்கிறீங்க.
நல்லதோர் பதிவு நண்பா.
//ஸ்ரீதர் said… 1
என்னை போன்ற புதிய வலை பதிவர்களுக்கு மிகவும் அவசியமான பதிவு நண்பரே!வாழ்த்துக்கள்.//
நன்றி நண்பரே!
//மாய உலகம் said… 2
மிகவும் உபயோகமான பதிவு…நன்றியுடன் வாழ்த்துக்கள் நண்பரே…!//
நன்றி நண்பரே!
//தாரிக் said… 3
மிகவும் பயனுள்ள தகவல் உடனே ட்ரை பண்ணுகிறேன். எனது ஊரின் பைத்துல்மால், நிதிநிலை அறிக்கை போட்டு இருக்கிறேன். வந்து பார்க்கவும்//
//ஏற்கனவே நான் கூகிள் அனலிடிக்ஸ் நிறுவியிருந்ததால் Your site has been added to your account என்று வந்துவிட்டது. அடுத்த பதிவு எப்ப பிரதர் சீக்கிரம்//
நன்றி சகோ.!
//பலே பிரபு said… 5
புதிய பதிவர்களுக்கு பயனுள்ள தகவல்..//
நன்றி சகோ.!
//thoorigai said… 6
payanulla thagaval..nanri//
நன்றி நண்பா!
//சம்பத்குமார்.B said… 7
அருமையான தகவல் நண்பரே…
தொடரட்டும் உங்கள் வெற்றிபயணம்
இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள்
நட்புடன்
சம்பத்குமார்//
வாழ்த்துக்கு நன்றி நண்பரே!
//அம்பாளடியாள் said… 8
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி சகோ .தமிழ்மணம்
ஓட்டுப் போட்டாச்சு வாழ்த்துக்கள் .//
நன்றி சகோ.!
//நிரூபன் said… 9
வணக்கம் சகோதரா, அருமையான விளக்கக் குறிப்பாக, கூகிள் வெப் மாஸ்டரில் Meta tag இணைப்பதனைப் பகிர்ந்திருக்கிறீங்க.
நல்லதோர் பதிவு நண்பா.//
நன்றி சகோ.!
ரம்ஜான் வாழ்த்துக்கள் நண்பரே …….
தமிழ் குரானை மொபைலில் பாருங்கள்
//stalin said… 18
ரம்ஜான் வாழ்த்துக்கள் நண்பரே …….
தமிழ் குரானை மொபைலில் பாருங்கள்//
வாழ்த்துக்கு நன்றி நண்பரே!
அன்பான தமிழ் வலைப் பதிவர்களுக்கு வணக்கம்.
"தேன்கூடு" தமிழ் வலைப் பதிவு திரட்டி சில நண்பர்களின் உதவியுடன் மீண்டும் செயல்படத் துவங்கியுள்ளது.
தங்கள் புதிய பதிவுகள் உடனுக்குடன் "தேன்கூடு" திரட்டியின் முகப்பில் தெரிய இங்கே சொடுக்கவும்
GOOD
//TNTJTIRUPUR said… 21
GOOD//
Thank You!