முதல் பகுதி: கூகுள் வெப்மாஸ்டர் டூல் – அறிமுகம்
இரண்டாம் பகுதி: கூகுள் வெப்மாஸ்டர் டூல் – Site Configuration
மூன்றாம் பகுதி: கூகுள் வெப்மாஸ்டர் டூல் – Search Queries
இந்த பகுதியில் நாம் காணவிருப்பது, உங்கள் தளத்திற்கு யாரெல்லாம் இணைப்பு கொடுத்திருக்கிறார்கள்? எப்படி கொடுத்திருக்கிறார்கள்? உங்கள் தளத்தின் எந்த பக்கங்கள் அதிக முறை இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது? என்பதை அறிய உதவும் “Links to your site” பற்றி.
தேடுபொறி ரகசியங்கள் தொடரில் Backlinks எனப்படும் பின்னிணைப்புகள் பற்றி பார்த்தோம். மேலும் கூகிள் தேடுபொறியில் அதிகமான தளங்களுக்கு Backlinks காட்டுவதில்லை என்றும், அனைத்து பின்னிணைப்புகளையும் காண வெப்மாஸ்டர் தளத்தில் பார்க்க வேண்டும் எனவும் கூறியிருந்தேன். அதை தான் இங்கு பார்க்கப்போகிறோம்.
வெப்மாஸ்டர் டூல் தளத்தில், உங்கள் தள டாஷ்போர்டில் “Your Site on the Web” என்பதை க்ளிக் செய்து, அங்கு இரண்டாவதாக உள்ள ”Links to your site” என்பதை க்ளிக் செய்தால், உங்கள் தளத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகள் பற்றிய விவரங்களை காணலாம்.
[படங்களை பெரிதாக காண, படங்களின் மீது க்ளிக் செய்யவும்]
Overview என்பதற்கு கீழே, Total Links என்பதில் மொத்தம் எத்தனை இணைப்புகள் உங்கள் தளத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது என்பதை காட்டும். இதில் உங்கள் தளத்திற்குள் கொடுக்கப்பட்டுள்ள உள்இணைப்புகளை காட்டாது. மற்ற தளங்களில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளை மட்டும் தான் காட்டும்.
அந்த பக்கத்தில் காணப்படும் மூன்று விபரங்கள்,
எந்தெந்த தளங்கள் உங்கள் தளத்திற்கு இணைப்பு கொடுத்திருக்கிறார்கள்? என்ற விபரங்கள். இவைகள் Backlinks ஆகும். உங்கள் தளத்திற்கு அதிக இணைப்புகள் கொடுத்துள்ள முதல் ஐந்து தளங்களை காட்டும். அதற்கு கீழே More என்பதை க்ளிக் செய்தால் முழுவிவரங்களையும் காட்டும். கீழ் உள்ள படத்தை பாருங்கள்.
ப்ளாக்கர் தளங்களில் உள்ள உங்களது இணைப்புகள் அனைத்தும் blogspot.com என்பதில் இருக்கும்.
எந்த பதிவுகளுக்கு அதிக இணைப்புகள் கொடுத்திருக்கிறார்கள்? என்ற விபரங்கள்.
Your Pages: இணைப்பு கொடுக்கப்பட்டுள்ள உங்கள் ப்ளாக்கின் பக்கங்கள்.
Links: ஒவ்வொரு பக்கங்களுக்கும் எத்தனை இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது என்ற விபரம்.
Source Domains: அந்த பக்கங்களுக்கு எத்தனை தளங்கள் இணைப்பு கொடுத்துள்ளது? என்ற விபரம்.
Your Pages-ல் காட்டும் உங்கள் பதிவு முகவரியில் க்ளிக் செய்தால் மேலும் சில விபரங்களை காணலாம்.
எப்படி இணைப்பு கொடுத்திருக்கிறார்கள்? என்ற விபரங்கள். அதாவது நாம் முன்பு பார்த்த Anchor Text எப்படி கொடுத்திருக்கிறார்கள் ? என்ற விபரங்கள்.
இதிலிருந்து நாம் என்ன கற்கலாம்?
நமது தளத்திற்கு Backlinks-ஐ அதிகரிக்க, ட்விட்டர், பேஸ்புக், கூகுள் ப்ளஸ் போன்ற சமூக தளங்களிலும், இன்ட்லி, தமிழ்மணம் போன்ற திரட்டிகளிலும், நமது பதிவுகளை பகிர்வது நல்லது. மேலும் நம்முடைய தளத்திற்கு யாரெல்லாம் இணைப்பு கொடுத்திருக்கிறார்கள்? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.
______________________________________________________________________________
keywords மற்றும் Internal Links பற்றி இறைவன் நாடினால் அடுத்த பகுதியில் காணலாம்.
SEO Comic:
படம் சூப்பர். சொந்த செலவில் சூனியம் வைப்பது இதுதானா?
அருமை சகோ. இதோ போறேன் வெப் மாஸ்டர் பக்கத்துக்கு.
Thanks friend.Nice post
அருமையான உபயோகமான தகவல் நண்பரே
பகிர்வுக்கு நன்றி
links ஐ அறிந்து கொள்ள உபயோகமான பதிவு… பகிர்வுக்கு நன்றி நண்பரே…!
உபயோகமான தகவல்.பகிர்வுக்கு நன்றி .
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி நண்பா!
useful info thanks Abdul
asathuringa ponga puthiya pathivargalukku ithu payanullathaga irukkum nanbare…………
//Prabu Krishna (பலே பிரபு) said… 1
அருமை சகோ. இதோ போறேன் வெப் மாஸ்டர் பக்கத்துக்கு.//
நன்றி சகோ.!
//படம் சூப்பர். சொந்த செலவில் சூனியம் வைப்பது இதுதானா?//
ஹா..ஹா..ஹா..
//Arjun said… 3
Thanks friend.Nice post//
You are welcome friend!
//M.R said… 4
அருமையான உபயோகமான தகவல் நண்பரே
பகிர்வுக்கு நன்றி//
நன்றி நண்பரே!
//மாய உலகம் said… 5
links ஐ அறிந்து கொள்ள உபயோகமான பதிவு… பகிர்வுக்கு நன்றி நண்பரே…!
//
நன்றி நண்பரே!
//நண்டு @நொரண்டு -ஈரோடு said… 6
உபயோகமான தகவல்.பகிர்வுக்கு நன்றி .//
நன்றி நண்பரே!
//மாணவன் said… 7
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி நண்பா!//
நன்றி நண்பா!
//♠புதுவை சிவா♠ said… 8
useful info thanks Abdul//
You are welcome friend!
//Jey@tecnoupdates said… 9
asathuringa ponga puthiya pathivargalukku ithu payanullathaga irukkum nanbare…………//
நன்றி நண்பா!