கூகுள் வெப்மாஸ்டர் டூல் – Diagnostics

முதல் பகுதி: கூகுள் வெப்மாஸ்டர் டூல் – அறிமுகம்

இரண்டாம்  பகுதி: கூகுள் வெப்மாஸ்டர் டூல் – Site Configuration

மூன்றாம்  பகுதி: கூகுள் வெப்மாஸ்டர் டூல் – Search Queries

நான்காம்  பகுதி: கூகுள் வெப்மாஸ்டர் டூல் – Links to your site

ஐந்தாம் பகுதி: கூகுள் வெப்மாஸ்டர் டூல் – K.I.S

ஆறாம்  பகுதி: கூகுள் வெப்மாஸ்டர் டூல் – +1 Metrics

வெப்மாஸ்டர் தளத்தில் முக்கியமான பகுதி. நமது தளத்தில் உள்ள தொழில்நுட்பத் தவறுகள் பற்றி நமக்கு தெரிவிக்க உதவுகிறது Diagnostics (கண்டறிதல்) என்ற இந்த பகுதி. இதனை பற்றி இங்கு பார்ப்போம்.

வெப்மாஸ்டர் தளத்தில் இடதுபுறம் Diagonastics என்பதை க்ளிக் செய்தால் அங்கு Malware, Crawl Errors, Crawl Stats, Fetch as Googlebot, Html Suggestions என்று ஐந்து தேர்வுகள் இருக்கும்.

Malware:

Malicious Software என்பதின் சுருக்கமே Malware ஆகும். Malware என்றால் தீம்பொருள் என்று கூகிள் தமிழ் சொல்கிறது. உங்கள் தளம் இதன் மூலம் பாதிக்கப்பட்டுள்ளதா? என்று காட்டும்.

Crawl Errors:

தேடுபொறி ரகசியங்கள் தொடரில் Crawlers பற்றி பார்த்தோம் அல்லவா?

தேடுபொறிகள் இணையத்தில் உள்ள கோடிக்கணக்கான
பக்கங்களை ஊடுருவிச் சென்று தகவல்களை சேகரிப்பதற்காக ஒருவித
தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றன. அதற்கு Robots, Spiders, Crawlers
என்று வேறு வேறு பெயர்கள்.

கூகிளின் Crawler-கு  கூகிள்பாட்(Googlebot) என்று பெயர். அது உங்கள் தளத்திற்கு வரும்போது உங்கள் தளத்தில் உள்ள சில முகவரிகளை அணுகமுடியாமல் போகும். அதனை பற்றிய விவரங்களை இங்கு காட்டும். இதில் Not Found, Restricted by robots.txt, Unreachable என்று மூன்று பிழைகள் இருக்கும். அவற்றை பற்றி பார்ப்போம்.

Not Found  

பதிவுகள் ஏதாவது நீக்கியிருந்தால் அந்த முகவரிகளும், உங்கள் தளத்திற்கு இணைப்புகள் கொடுக்கும் போது தவறான முகவரியை கொடுத்திருந்தால் அந்த முகவரிகளும் Not Found என்று காட்டும். உதாரணத்திற்கு கீழே உள்ள படத்தை பார்க்கவும்.

மொத்தம் ஒன்பது முகவரிகள் Not Found என்று காட்டுகிறது. இந்த தவறான முகவரிகளை நீக்குவது எப்படி? என்று பார்ப்போம்.

 இத்தொடரின் இரண்டாவது பகுதியில், Crawler Access பற்றி பார்க்கும் போது, மூன்றாவதாக உள்ள Remove URL என்பதை பற்றி இறைவன் நாடினால் பின்னால் வர இருக்கும் Diagonostics பகுதியில் பார்க்க இருக்கிறோம்.” என்று சொல்லியிருந்தேன் அல்லவா? அதன் மூலம் தான் நாம் இந்த முகவரிகளை நீக்கப் போகிறோம்.


இடதுபுற sidebar-ல் Site Configuration க்ளிக் செய்து, Crawler Access என்பதை க்ளிக் செய்து, Remove URL என்பதை க்ளிக் செய்யவும்.

அங்கு New Removal Request என்ற பட்டனை க்ளிக் செய்து, தவறான முகவரியை கொடுத்து, Continue என்பதை க்ளிக் செய்யவும்.

பிறகு வரும் பக்கத்தில், Url என்ற இடத்தில் நீங்கள் கொடுத்த முகவரி இருக்கும். Reason என்ற இடத்தில் Remove page from search results and cache என்பதை தேர்வு செய்து Submit Request என்பதை க்ளிக் செய்யவும்.

நீங்கள் கொடுத்துள்ள முகவரியை Pending என்று காட்டும். இப்படி Not Found பகுதியில் காட்டும் முகவரிகள் ஒவ்வொன்றாக நீக்க வேண்டும்.

Restricted by robots.txt

இது கொஞ்சம் பெரிய விஷயம். நமது தளத்திற்கு வரும் Crawlers எந்த பக்கத்தை அணுகலாம் என்று சொல்வது. இந்த பக்கத்தில் அதிகமாக நமது குறிச்சொற்களின் (Labels) முகவரிகளை தான் பிழை என்று காட்டும்.உதாரணத்திற்கு கீழே உள்ள படத்தை பார்க்கவும்.

இதனை சரி செய்வது எப்படி? என்று பார்ப்போம்.

1. உங்கள் ப்ளாக்கரில் Dashboard=> Template பகுதிக்கு செல்லவும்.

2. அங்கு வலதுபுறம் மேலே Backup/Restore என்பதை க்ளிக் செய்து, Download Full Template என்பதை க்ளிக் செய்து உங்கள் டெம்ப்ளேட்டை பிரதி எடுத்துக் கொள்ளவும்.

3. பிறகு அதனை close செய்துவிட்டு, Edit Html என்பதை க்ளிக் செய்து, Proceed என்பதை க்ளிக் செய்யவும்.

4. Expand Widget Templates என்பதை க்ளிக் செய்யவும்.

5. பிறகு

<a expr:href=’data:label.url’ rel=’tag’>

என்ற code-ஐ தேடி அதனை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக

<a expr:href=’data:label.url’ rel=’tag,nofollow‘>

என்ற code-ஐ paste செய்யவும்.

6. பிறகு Save Template என்பதை க்ளிக் செய்யவும்.

அவ்வளவுதான்! ஒரு சில நாட்களுக்கு பிறகு குறிச்சொல் முகவரிகளை பிழைகளாக காட்டாது.


Unreachable:

இது server பிரச்சனையினால் ஏற்படுவது. அதனால் இது பற்றி கவலைப்பட வேண்டாம்.

மேலும் Crawl Errors பக்கத்தில், Mobile CHTML, Mobile WML/XHTML என்று இருக்கும். அதை பற்றியும் கவலைப்பட வேண்டாம்.

________________________________________________________________________________

அடுத்ததாக இருக்கும் Crawl Stats, Fetch as Googlebot என்பது அவசியமானது இல்லை என்பதால், அதற்கு அடுத்துள்ள HTML Suggestions பற்றி இறைவன் நாடினால் அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

SEO Comic:

இதையும் படிங்க:  அன்னையர் தினம் - அழகிய கூகுள் டூடுல்

6 thoughts on “கூகுள் வெப்மாஸ்டர் டூல் – Diagnostics”

  1. வெப்மாஸ்டர் டூ டையகனாஸ்டிக்ஸ் பதிவும் பயனுள்ள பகிர்வு… இது வரை ஆறு ஆப்சனைப்பற்றியும் மிக தெளிவாக எளிமையாக சொல்லிவிட்டீர்கள் அன்பரே நன்றிகள்