கூகுள் வெப்மாஸ்டர் டூல் – +1 Metrics

முதல் பகுதி: கூகுள் வெப்மாஸ்டர் டூல் – அறிமுகம்

இரண்டாம்  பகுதி: கூகுள் வெப்மாஸ்டர் டூல் – Site Configuration

மூன்றாம்  பகுதி: கூகுள் வெப்மாஸ்டர் டூல் – Search Queries

நான்காம்  பகுதி: கூகுள் வெப்மாஸ்டர் டூல் – Links to your site

ஐந்தாம் பகுதி: கூகுள் வெப்மாஸ்டர் டூல் – K.I.S

இந்த  பகுதியில் கூகிள் தேடுபொறியில் ப்ளஸ் ஒன் பட்டன் நமது தளத்திற்கு எப்படி வேலை செய்கிறது? என்பதை சொல்லும் +1 Metrics பற்றி பார்ப்போம்.
ஏற்கனவே கூகிள் ப்ளஸ் ஒன் பட்டனை நிறுவுவது பற்றி பார்த்தோம். தற்போது கூகிள் தளம், கூகிள் ப்ளஸ் ஒன் பட்டனையும் தனது தேடல் காரணிகளில் ஒன்றாக சேர்த்துள்ளது. இதன் மூலம் அதிக ப்ளஸ் ஒன் செய்யப்பட பக்கங்கள், தளங்களுக்கு தேடல் முடிவுகளில் முன்னுரிமை அளிக்கும்.

நமது தளத்தில் +1 செய்யப்பட விவரங்களை பற்றி பார்க்க, கூகிள் வெப்மாஸ்டர் தளத்தில், இடது புறம் +1 Metrics என்பதை க்ளிக் செய்தால் அங்கு Search Impact, Activity, Audience என்று மூன்று தேர்வுகள் இருக்கும்.

இந்த  விவரங்களில் பல்வேறு தகவல்கள் இருக்கும். அவற்றையெல்லாம் பார்த்து குழப்பிக் கொள்ள வேண்டாம். முக்கியமானதாக நான் கருதும் சிலவற்றை மட்டும் பார்க்கலாம்.

Search Impact:

கூகிளில் நீங்கள் தேடும் பொழுது அது காட்டும் முடிவுகளில், அந்தந்த தளங்களுக்கு பக்கத்தில் +1 பட்டன் இருப்பதை பார்த்திருப்பீர்கள். நீங்கள் கூகிள் கணக்கில் இருக்கும் போது மட்டுமே அப்படி காட்டும். இந்த Search Impact பக்கத்தில், கூகுள் தேடுபொறியில்  +1 பட்டனுடன் உங்கள் பக்கங்கள் எத்தனை முறை வந்துள்ளது? அவற்றை க்ளிக் செய்தவர்கள் எத்தனை நபர்கள்? +1 இல்லாமல் எத்தனை தடவை வந்துள்ளது?  என்ற விவரங்களை காணலாம்.

Sort Top pages bye என்ற இடத்தில் All Clicks என்பதை தேர்வு செய்துக் கொள்ளுங்கள். Compare என்ற இடத்தில் CTR, Impressions. Clicks என்று மூன்று தேர்வுகள் இருக்கும். அதில் மூன்றையும் ஒவ்வொன்றாக தேர்வு செய்து முடிவுகளை பாருங்கள். அதில் காட்டும் சில முடிவுகள்,

Page – தேடுபொறியில் வந்த உங்கள் தள பக்கங்கள்

All Impressions – அந்த பக்கங்கள் மொத்தம் எத்தனை முறை வந்துள்ளது?

All Clicks – மொத்தமாக எத்தனை நபர்கள் க்ளிக் செய்துள்ளார்கள்

+1 annotated impressions – +1 பட்டனுடன் அந்த பக்கங்கள் எத்தனை முறை வந்துள்ளது?

இதையும் படிங்க:  பதிவுலகம் - ஒரு வரலாற்றுப் பயணம்

+1 annotated Clicks – +1 பட்டனுடன் வந்த பக்கங்களை க்ளிக் செய்தவர்கள் எத்தனை நபர்கள்?

Activity:

Activity பகுதியில்  தங்கள் தளத்தில் எத்தனை பக்கங்கள் ப்ளஸ் ஒன் செய்யப்பட்டுள்ளது? எத்தனை தடவை ப்ளஸ் ஒன் செய்யப்பட்டுள்ளது? என்ற விவரங்களை காட்டும்.

Show என்ற இடத்தில் ALL என்பதை க்ளிக் செய்யுங்கள்.அதில் காட்டும் சில விவரங்கள்,

Url – ப்ளஸ் ஒன் செய்யப்பட பக்கங்கள்

+1’s from your site – உங்கள் தளத்திலிருந்து ப்ளஸ் ஒன் செய்யப்பட்டவை

+1’s from other sites – கூகிள் தேடுபொறி முடிவுகளில் அல்லது **கூகிள் விளம்பரங்களில்** ப்ளஸ் ஒன் செய்யப்பட்டவைகள்

All +1’s for your site – மொத்தமாக ப்ளஸ் ஒன் செய்யப்பட்டவைகள்

**கூகிளில் நீங்கள் ஏதாவது ஆங்கிலத்தில் தேடினால் விளம்பரங்களும் வரும் அல்லவா? அதிலும் தற்போது ப்ளஸ் ஒன் பட்டன் தெரியும். அதில் ப்ளஸ் ஒன் செய்த விவரங்கள். ஆனால் இது Google Adwords பயன்படுத்துபவர்களுக்கு தான் பயன்.


Audience:

மொத்தம் எத்தனை நபர்கள் (Unique Visitors) தங்கள் தளத்தில் ப்ளஸ் ஒன் செய்துள்ளார்கள் என்ற விவரங்கள்.

அதுமட்டுமின்றி, உங்கள் தளத்தில் ப்ளஸ் ஒன் செய்தவர்களின் இருப்பிடம், வயது, பாலினம் போன்ற மொத்த தகவல்களையும் காட்டும் (என சொல்கிறது). ஆனால் எல்லாருக்கும் இத்தகவல்களை காட்டுவதில்லை. இத்தகவல்களை பார்க்க குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட நபர்கள் ப்ளஸ் ஒன் செய்திருக்க வேண்டும் என்று சொல்கிறது. ஆனால் எத்தனை என்று சொல்லவில்லை.

இணையத்தில் இது பற்றி தேடிய போதும் சரியான பதில் கிடைக்கவில்லை. ஒருவர் தன் தளத்தில் 300 நபர்கள் ப்ளஸ் ஒன் செய்திருக்கிறார்கள், ஆனாலும் அத் தகவல்களை காட்டவில்லை என்று சொல்லியிருக்கிறார். இது பற்றி தகவல் கிடைத்தால் பகிர்கிறேன்.

இல்லை, உங்களுக்கு அது பற்றி விளக்கமாக சொல்லவேண்டும் என்று கருதினால், உடனடியாக இந்த தளத்தில் ப்ளஸ் ஒன் செய்யவும். 🙂 🙂 🙂

________________________________________________________________________________

இறைவன் நாடினால், வெப்மாஸ்டர் தளத்தில் முக்கியமான Diagnostics பற்றி அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

Seo Quote:


“Old SEOs never die, they just lose their rankings.”

8 thoughts on “கூகுள் வெப்மாஸ்டர் டூல் – +1 Metrics”

 1. என்னுடைய ஆட்சென்ஸ் கணக்கை நான் எங்குமே பயன்படுத்தவில்லை, ஆனால் ஆட்சென்ஸிற்குள் நுழைந்தால் கணக்கு முடக்கப்படுள்ளதாக வருகிறது… ஏன்?

 2. //மாய உலகம் said… 3

  +1 மெட்ரிக்ஸ் பற்றிய பயனுள்ள தகவல் … பகிர்வுக்கு நன்றி நண்பரே//

  நன்றி நண்பரே!

 3. //Heart Rider said… 4

  என்னுடைய ஆட்சென்ஸ் கணக்கை நான் எங்குமே பயன்படுத்தவில்லை, ஆனால் ஆட்சென்ஸிற்குள் நுழைந்தால் கணக்கு முடக்கப்படுள்ளதாக வருகிறது… ஏன்?//

  இது பற்றி adsense-லிருந்து தங்களுக்கு மெயில் எதுவும் வந்ததா? என்னுடைய மெயில் தொடர்பு கொள்ள முடியுமா?

  basith27[at]gmail.com