கூகுள் விளையாட்டு: கூடைப்பந்து (Basket Ball)

லண்டன் ஒலிம்பிக் விளையாட்டுக்களை (Olympics Games) முன்னிட்டு கூகுள் நேற்று வெளியிட்ட தடகளப் போட்டியை (Hurdle Game) விளையாடுவது பற்றி நேற்று பார்த்தோம் அல்லவா? இன்று கூகுள் கூடைப்பந்தை விளையாடும் வகையில் DOODLE-ஐ உருவாக்கியுள்ளது.

கூகுள்  தளத்திற்கு சென்றால் மேலே உள்ள படம் போன்று இருக்கும். அதில் Play Button-ஐ கிளிக் செய்ய வேண்டும். கிளிக் செய்தவுடன் உங்கள் வீரருக்கு கூடைப்பந்து கிடைக்கும். Space Bar-ஐ நன்றாக அழுத்தி விட்டால் வீரர் பந்தை கூடையில் வீசுவார். நீங்கள் அழுத்துவதைப் பொறுத்து பந்து வீசப்படும் வேகம் இருக்கும்.

சில பந்துகளுக்கு பிறகு வீரர் கொஞ்சம் பின்னுக்கு செல்வார். அப்போது வேகத்தை கொஞ்சம் அதிகரிக்க வேண்டும். மீண்டும் பின்னுக்கு செல்வார். அப்போதும் வேகத்தை அதிகரிக்க வேண்டும். நீங்கள் Space Bar-ஐ அழுத்திக் கொண்டிருக்கும் போது பந்தின் நிறம் மாறும்.

மொத்தம் 24 நொடிகள். அதற்குள் நீங்கள் எத்தனை பந்தை சரியாக கூடையில் போடுகிறீர்கள்? என்பது தான் விளையாட்டு.

நான் விளையாடி 21 Score எடுத்துள்ளேன். அப்போ நீங்க?

கூகுள் விளையாட்டு: கூடைப்பந்து (Basket Ball)

இதையும் படிங்க:  ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-1]

12 thoughts on “கூகுள் விளையாட்டு: கூடைப்பந்து (Basket Ball)”

  1. வணக்கம் சகோ .பகிர்வுக்கு நன்றி .எனக்கொரு சின்ன உதவி வேண்டும் .
    எனது blogger Dashboard ல் பிறரது ஆக்கங்களைக் காண முடியவில்லை
    பதிலுக்கு Reding list >Add blogs to folow என்று வருகின்றது அதில் add என்பதை தேர்வு செய்தபோது add from URL அல்லது import from google reader என்று உள்ளது .வழமைபோல் என் தளம் இருக்க இதற்க்கு நான் எவ்வாறு பதில் அளிக்க வேண்டும் (add from URL நான் இதைத் தேர்வு செய்து எனது URL rupika – rupika .blogspot .com என கொடுத்து folow என்பதை தேர்வு செய்தேன் ஆனாலும் இதனால் எந்த மாற்றமும் நிகழவில்லை .)