கூகுள் நிறுவனம் தனது சேவை விதிமுறைகளில் (Terms of Service) சில முக்கிய மாற்றத்தை செய்துள்ளது. இதன்படி கூகுள் விளம்பரங்களில் உங்கள் புகைப்படத்தை கூகுள் பயன்படுத்த முடியும். இதற்கு Shared Endorsements என்று பெயரிட்டுள்ளது.
இதுபற்றிய அறிவிப்பு உங்கள் Google+ Notifications பகுதியிலும், மின்னஞ்சலிலும் வந்திருக்கும்.
இது கிட்டத்தட்ட பேஸ்புக் விளம்பரம் போன்றது. நீங்கள் எந்த தயாரிப்புகளையாவது ப்ளஸ் ஒன் செய்திருந்தாலோ, கூகுள் ப்ளஸ்ஸில் பகிர்ந்திருந்தாலோ அல்லது விமர்சனம் (Review) செய்திருந்தாலோ அந்த தயாரிப்பு பற்றிய விளம்பரங்கள் உங்கள் கூகுள் ப்ளஸ் சர்க்கிளில் உள்ளவர்களுக்கு அல்லது உங்களை தனது சர்க்கிளில் சேர்த்திருப்பவர்களுக்கு உங்கள் புகைப்படத்துடன் காட்டும்.
இதனால் கூகுளுக்கு என்ன பயன்?
பேஸ்புக் வந்த பிறகு கூகுள் விளம்பரதாரர்கள் பலர் பேஸ்புக் விளம்பரங்களுக்கு மாறிவிட்டனர். காரணம் சாதாரண விளம்பரங்களைவிட பேஸ்புக் தளத்தில் இருக்கும் சமூக விளம்பரங்கள் (Social Ads) அதிக வாடிக்கையாளர்களை பெற்றுத்தரக்கூடியது. இதற்கு போட்டியாக கூகுள் நிறுவனமும் தனது சமூக இணையதளமான கூகுள் ப்ளஸ் தளத்தை பயன்படுத்துகிறது.
இதில் கூகுளுக்கு உள்ள அதிக நன்மை என்னவென்றால், பேஸ்புக் தனது விளம்பரங்களை பேஸ்புக் தளத்தில் மட்டும் தான் வைக்க முடியும். ஆனால் கூகுளுக்கு பல்வேறு தளங்கள் இருக்கிறது. தான் பறிக்கொடுத்த விளம்பரதாரர்களை மீட்டெடுக்கும் முயற்சியாக கூட இதைக் கருதலாம்.
இதைத் தடுக்க முடியாதா?
மேலே சொன்னபடி உங்கள் புகைப்படம் கூகுள் விளம்பரங்களில் தெரியக் கூடாது என்றால் கீழே உள்ள முகவரிக்கு சென்று “Based upon my activity, Google may show my name and profile photo in shared endorsements that appear in ads.” என்ற இடத்தில் உள்ள கட்டத்தில் டிக்கை எடுத்துவிட்டு Save கொடுங்கள்.
கவனிக்க: தற்போது Default-ஆக அந்த கட்டத்தில் டிக் இருக்காது. அதனால் தற்போது எதுவும் செய்ய வேண்டாம். ஆனால் வரும் நவம்பர் 11-ஆம் தேதி தானாக அதில் டிக் செய்யப்பட்டுவிடும். அப்போது வந்து டிக்கை எடுத்தால் போதும்.
தகவல் பயனுள்ளவை…
எனக்கு டிக் இருந்துச்சு… எடுத்துவிட்டுட்டேன்….
ஜஸக்கல்லாஹ் ஹைர்
எனக்கு இப்போவே டிக் இருக்கு .. தூக்கிடேன் …
அண்ணா .. கூகுள் மோபைல் சர்ச்ல விளம்பரம் வராம தடுக்க என்ன வழி ..?
அதனை தடுக்க முடியாது தம்பி!
வருகைக்கு நன்றி அண்ணே!
ஓ! எனக்கு டிக் இல்லாமல் இருந்தது
ரொம்ப நன்றி அண்ணே…நானும் தூக்கிடறன்…
தகவலுக்கு நன்றி . .ப்ரோ
thanks for sharing this important post
எனக்கும் டிக் இருந்துச்சு, எடுத்துவிட்டுட்டேன்.
ஜஸாகல்லாஹ் ஹைரா 🙂
பயனுள்ள தகவல் நண்பரே….
அதேபோல் தங்களுடைய "பிளாக்கர் பிரச்சனைக்கு முழுமையான தீர்வு" பதிவும் மிகவும் பயனுள்ள ஒன்று… அதில் குறிப்பிட்ட ஆலோசனை மூலம் தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை என் பதிவில் இணைத்து பயனடைந்தேன்… ஆனால், தமிழ்மணத்தில் என்னுடைய பதிவை இணைப்பதில் உள்ள சிக்கல் இன்னும் தீரவில்லை. பலமுறை முயன்றும் தமிழ்மணத்தில் இருந்து உதவி கிட்டவில்லை. தங்களிடம் இதற்கு ஏதேனும் தீர்வு உள்ளதா?
பயனுள்ள தகவல்,நன்றி.
Thanks brother
வணக்கம் ப்ளாக்கர் நண்பன் உங்கள் பதிவை இந்த இணைப்பில்
http://www.4tamilmedia.com/knowledge/useful-links/17921-2013-10-15-07-24-23
மீள்பிரசுரம் செய்துள்ளோம் –
நன்றி நட்புடன்
4தமிழ்மீடியா குழுமம்
Nice Info… Blog in tamil – Sad Downloads – Blogger Tutorial
கூகுளில் தமிழ் இன்புட் மிகவும் சிறப்பானது. ஆனால் என்னுடைய கணினியில்தால் இதனை நிறுவ முடியவில்லை. ஏதேனும் வழி உள்ளதா?
natrayan50@gmail.com
nalla payanulla seyidhigal kidaittulladhu.. nandri….
டிக் எடுத்துட்டோம்ல…