தேடுபொறி மூலம் தனது பயணத்தை தொடங்கிய கூகுள் நிறுவனம் இது வரை பல்வேறு
வசதிகளை தந்துள்ளது. மேலும் பல நிறுவனங்களையும் கையகப்படுத்தியுள்ளது. கூகுள் தனது சேவைகளில் சிலவற்றை அவ்வப்போது “Spring Cleaning” என்ற பெயரில் நிறுத்திவிடும்.
கடந்த வருடம் கூட Google Talk Chatback, iGoogle, Google Video போன்றவற்றை நிறுத்த போவதாக அறிவித்தது. தற்போது மேலும் சில வசதிகளை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது. அதில் முக்கியமான ஒன்று கூகுள் ரீடர் (Google Reader).
கூகுள் ரீடர்:
கூகுள் ரீடர் 2005-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. நமக்கு விருப்பமான தளங்களை ஒரே இடத்தில் படிப்பதற்கு இது பயன்படுகிறது. கூகுள் ரீடரை அதிகமானவர்கள் பயன்படுத்தியிருந்தாலும், அதன் பயன்பாடு கடந்த சில வருடங்களாகவே குறைந்துவிட்டது என்றும், அதனால் அதனை மூடப்போவதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது. வரும் ஜூலை ஒன்று முதல் கூகுள் ரீடர் இயங்காது. நான் இதை பயன்படுத்துவதில்லை என்பதால் கவலையில்லை.
கூகுள் ரீடரில் உள்ள தகவல்களை தரவிறக்கம் செய்துக் கொள்ள https://www.google.com/takeout/#custom:reader என்ற முகவரிக்கு செல்லவும்.
கூகுள் ரீடருடன் சேர்த்து Apps Script, Google Building Maker, Google Cloud Connect, Google Voice
App for Blackberry, Snapseed Desktop for Macintosh and Windows மற்றும் இன்னும் சில சேவைகளை மூடபோவதாகஅறிவித்துள்ளது கூகுள்.
கூகுள் ரீடருக்கு மாற்று: 5 Best Alternatives for Google Reader
(இவற்றில் சில அப்ளிகேசன்களில் தமிழ் எழுத்துக்கள் தெரியாது)
எளிதான மாற்று ரீடர் ஏதேனும் உண்டா…?
ayyayayo…. I use it very often…. 🙁
காலையில் பேப்பருக்கு அடுத்து, ரீடர் வாசிச்சாகணும் எனக்கு. இப்போ அதை மூடப்போறாங்கன்னு கேட்டதும் பகீர்னு இருக்கு.
//அதன் பயன்பாடு கடந்த சில வருடங்களாகவே குறைந்துவிட்டது என்றும், அதனால் அதனை மூடப்போவதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது.//
நான் இன்னும் தொடர்ந்து பயன்படுத்திக்கிட்டிருக்கேன்னு சொல்லுங்க அவங்ககிட்ட. நான் யாருன்னும் சொல்லுங்க. அதுக்கப்புறம் மூடற ஐடியாவை ட்ராப் பண்ணிடுவாங்க. அவ்வ்வ்வ்……
இதுக்கான மாற்று எப்படி இருக்குமோ? என்ன குழப்படிலாம் வருமோ!! நிம்மதியா இருக்க விடமாட்டாங்க போல… :-(((((
இனி Email Subscription தான் கதியா?
Its very bad decision. Is there any alternative? I use it frequently..
எனது இணைய உலவியின் நிரந்திர முதல் பக்கத்தின் மரணம்..
எனது மூளை மரணிக்கபோகிறது…
RIP to Google Reader
இன்று காலை கூகிள ரீடரை ஓபன் செய்தபோது மூடப் போகும் விஷயம் அறிந்தேன்.விளக்கமாகக் கூறியதற்கு நன்றி.
VERY SAD NEWS
நான் கூகிள் ரீடர் பற்றி அறிந்திருக்கவில்லை…
One can imporrt the reader to wordpress