இணைய ஜாம்பவான கூகுள் மிகப்பெரிய மாற்றங்களை அவ்வப்போது கொண்டு வருவது நாம் அனைவரும் அறிந்ததே! சமீபத்தில் கொண்டு வந்த Google Play பற்றி கூட பார்த்தோம். அது போன்ற பெரிய மாற்றங்களில் கவனம் செலுத்தும் அதே வேளையில் பல சின்ன சின்ன மாற்றங்களையும் கொண்டு வரும். அவற்றைப் பற்றி இங்கு பார்ப்போம்.
கூகுள் தேடலில் சமீபத்தில் Personal Results என்ற வசதியை கொண்டு வந்தது உங்களுக்கு தெரியும். அதாவது நாம் தேடுவதற்கு தொடர்புடைய பதிவுகளை அல்லது தளங்களை நமது நண்பர்கள் ப்ளஸ் ஒன் செய்திருந்தால் அதனை காட்டும். தற்போது அதில் மேலும் ஒரு வசதியை சேர்த்துள்ளது.
தேடல் முடிவுகளில் நண்பர் ப்ளஸ் ஒன் செய்த பதிவிற்கு அருகே Thank [நண்பரின் பெயர்] என்று இருக்கும். அதை க்ளிக் செய்து ப்ளஸ் ஒன் செய்த நண்பருக்கு கூகுள் ப்ளஸ் மூலம் நன்றி தெரிவிக்கலாம்.
ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ப்ளஸ் ஒன் செய்திருந்தால் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கலாம்.
கணித பாடத்தில் Binary, Octal, Hexadecimal படித்திருப்போம். கூகுள் தேடலில் இவை மூன்றையும் தேடினால் இது தொடர்பான மொத்த முடிவுகளின் எண்ணிக்கையினை சாதாரணமான எண்களாக காட்டாமல் Binary எண்களாகவும், Octal எண்களாகவும், Hexa-decimal எண்களாகவும் காட்டும்.
Binary |
Octal |
Hexadecimal |
இன்னும் பல மாற்றங்களை செய்துள்ளது. இறைவன் நாடினால் பிறகு பார்க்கலாம்.
தகவலுக்கு நன்றி நண்பரே …!
புதிய தகவல்கள் ! தொடருங்கள் நண்பரே !
தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி ! நன்பரே
"மாற்றம் ஒன்றே மாறாதது" – இதை உணர்ந்த சிலருள் கூகிளும் ஒன்று.
பகிர்விற்கு நன்றி நண்பரே!