கூகிள் ப்ளஸ் தளம் புதுப்புது வசதிகளாக அறிமுகப்படுத்திவருகிறது. தற்போது யூட்யூப் வீடியோக்களை கூகிள் ப்ளஸ் தளத்திலேயே பார்க்கும் வசதியையும், நாம் பார்க்கும் யூட்யூப் வீடியோக்களை நண்பர்களுக்கு பகிரும் வசதியையும் அளித்துள்ளது. அதைப் பற்றி இங்கு பார்ப்போம்.
கூகுள் ப்ளஸ் தளத்தி நுழைந்தாலே பக்கவாட்டில் Youtube பட்டனை பார்த்திருப்பீர்கள். அதனை க்ளிக் செய்தால் சின்னதாக ஒரு தேடல் பெட்டி வரும்.
அதில் நீங்கள் விரும்பியவற்றை கொடுத்து Search என்பதை க்ளிக் செய்தால், புதிய விண்டோவில் நீங்கள் தேடியவற்றுக்கான வீடியோக்களின் பட்டியல் வரும்.
அதில் உங்களுக்கு விருப்பமானதை பார்க்கலாம். மேலும் உங்களுக்கு பிடித்த வீடியோக்களை கூகுள் ப்ளஸ் நண்பர்களுடன் பகிர்ந்துக் கொள்ளலாம். வீடியோவின் மேலே Share என்பதை க்ளிக் செய்தால் எப்பொழுதும் போல பகிரும் வசதி வரும்.
யாருக்கு பகிரப் போகிறீர்கள்? என்பதனை தேர்வு செய்து Share என்பதை க்ளிக் செய்யவும்.
Google+ Ripples:
Google+ Ripples என்னும் புதிய வசதியை சில நாட்களுக்கு முன் அறிமுகபடுத்தியது. Ripples என்றால் தண்ணீரில் கல்லெறிந்தால் சிறிய அலைப் போல காட்சி அளிக்கும் அல்லவா? அது தான். அதே போல Google+ Ripples என்றால் கூகிள் ப்ளஸ் தளத்தில் நாம் பகிர்பவற்றின் தாக்கம் எப்படி இருக்கிறது என்பதை படமாக காட்டுவது. அதாவது நாம் பகிர்பவற்றை எத்தனை நபர்கள் பகிர்கிறார்கள் என்று காட்டும். ஆனால் இது Public-ஆக பகிர்பவற்றை மட்டும் தான் காட்டும். மற்றவைகளை காட்டாது. மேலும் பழைய பகிர்வுகளை காட்டாது. உதாரணத்திற்கு கீழுள்ள படத்த பாருங்கள்.
மேலுள்ளது நான் கூகிள் ப்ளஸ் தளத்தில் பகிர்ந்தவற்றின் படம்.
நீங்கள் Public-ஆக பகிர்ந்தவற்றின் விவரங்களை பார்க்க வேண்டுமானால் உங்கள் பகிர்வுகளை ஒருவராவது Public-ஆக பகிர்ந்திருக்க வேண்டும். அப்படி பகிர்ந்திருந்தால் அந்த பகிர்வுக்கு வலதுபுறம் சின்ன ஐகான் இருக்கும். அதனை க்ளிக் செய்து View Ripples என்பதை க்ளிக் செய்தால் முழு விவரங்களையும் காட்டும்.
மேலுள்ள பகிர்வின் Ripples-ஐ பார்க்க: https://plus.google.com/ripples/details?activityid=KyEBcq5ErGw
நன்றி: Google Ripples பற்றிய ஸ்க்ரீன்ஷாட் எடுப்பதற்கு உதவி செய்வதற்காக என் பகிர்வை பகிர்ந்த நண்பர்களுக்கு நன்றி!
YouTube Logo Credit: Wikipedia.org
விளக்கதுக்கு நன்றி சகோ.
நான் ஸ்கூல்ல வாங்குன மார்க் இங்க என் பெயர சுத்தி இருக்கே.
அஸ்ஸலாமு அழைக்கும் சகோ.,,
ஈகை திருநாள் நல்வாழ்த்துக்கள். பதிவிற்கு மிக்க நன்றி
how to stop virtual hits in blogger?
//thariq ahamed said… 1
அஸ்ஸலாமு அழைக்கும் சகோ.,,
ஈகை திருநாள் நல்வாழ்த்துக்கள். பதிவிற்கு மிக்க நன்றி//
வ அலைக்கும் ஸலாம்.
நன்றி சகோ.!
//Prabu Krishna said… 2
விளக்கதுக்கு நன்றி சகோ.
நான் ஸ்கூல்ல வாங்குன மார்க் இங்க என் பெயர சுத்தி இருக்கே.
//
ஹாஹாஹா…
நன்றி சகோ.!
//arul said… 3
how to stop virtual hits in blogger?//
You mean Spam Referral links? we cannot stop that. Plz read this:
http://bloggernanban.blogspot.com/2011/10/spam-referrals.html
இன்று என் வலையில்
விஜய் , சூர்யா , அஜித் – Face book இல் படும்பாடு
புது புது தகவல் தருவதில் நீங்கல் கில்லாடி
பேஸ் புக் தான் நண்பா தனி ஆளா நின்னு சாதிக்குது .
கூகுள் பிளசை பிரபலமாக்கவே (பேஸ் புக் முந்தனுமா ) அதனால …பிளாக்கர் profile -ல கூகுள் பிளசோடு கல்யாணம்(join),யூ ட்யுப் -யும் (2nd wife)……. அப்படி தானே நண்பா ….
இன்னும் எதலாம் கூகுள் பிளசுக்குள் கொண்டு வர போறாங்களோ …
பெரு நாள் நல்வாழ்த்துக்கள் நண்பா
பயனுள்ள பதிவு நண்பா..
தகவலுக்கு நன்றி நண்பரே…
தகவலுக்கு நன்றி நண்பரே!
இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் உலகளாவிய அனைத்து முஸ்லீம் சமுதாயத்திலும் தொடர்ந்த தொடரும் உண்மை நிகழ்வுகளை சித்தரிக்கும் ஆழமான அழகிய முழு திரைகதையும் அடங்கிய விடியோ கீழுள்ள சுட்டியை சொடுக்கி காணுங்கள்.
**** ஆதாமின்டே மகன் அபு *****
.
அன்பிற்க்கினிய சகோதரர் அவர்களே. உங்கள் சுற்றத்தார் அனைவர் மீதும்
அல்லாஹ்வின் வற்றாத கருணை உண்டாவதாக உங்கள் வலை பதிவுகளை
எனது வலைப்பூவின் வாசகர்கள் பயன்பெரும் வகையில் உங்கள் பதிவுகள்
அனைத்தையும் ஆர்சிவ்ஸ்ஸா பதிவிட்டுள்ளேன் தயவு செய்து வாருங்கள்
உங்கள் கருத்துரையை பதியுங்கள் இந்தியாவில் இருந்தால் கால் செய்யுங்கள்
அன்புடன் ஓ.பி.கலில் ரஹ்மான் எஸ்.பி.பட்டினம் 9841306148.
பி.கு. உங்கள் பதிவுகள் அனைத்திற்க்கும் பின்னூட்டமிடவே ஆசைபடுகிறேன்.
சில வரம்புமீறிய சொர்களையும் வார்தைகளையும் புகழ்தள்களையும் கண்டு
பயப்படுகிறேன்!…
http://www.kaleelsms.com/2011/09/blog-post_9739.html
பக்ரீத் தின நல்வாழ்த்துக்கள் நண்பா…
பெரு நாள் நல்வாழ்த்துக்கள் நண்பா
பயனுள்ள பகிர்வு… பகிர்வுக்கு நன்றி நண்பா!
ஈகைத் திரு நாள் வாழ்த்துக்கள். தாங்கள் பகிர்ந்த விஷயத்தினை நானும் கவனித்தேன். உடனே பதிவாக தந்தமைக்கு நன்றி தோழரே! வாழ்த்துக்கள்.