கூகுள் படங்களை பந்தாடலாம் வாங்க!

கூகுள் நிறுவனம் Easter Eggs என்ற பெயரில் அவ்வப்போது பல விளையாட்டுக்களை மறைத்து வைத்திருக்கும். தற்போதும் புதிய விளையாட்டை தனது பட தேடல் (Image Search) பக்கத்தில் வைத்துள்ளது. இதன் மூலம் படங்களை பந்தாடலாம்! 🙂

Atari Breakout:

Atari என்னும் நிறுவனத்தால் 1976-ஆம் ஆண்டு அறிமுகமான வீடியோ கேம், Breakout. இந்த விளையாட்டை நம்மில் பலர் பல விதத்தில் விளையாடியிருப்போம்.

எட்டு வரிசையில் கட்டங்கள் இருக்கும். கீழே ஒரு தட்டில் பந்து இருக்கும். அந்த பந்து மேலே உள்ள கட்டங்கள் ஒவ்வொன்றாக அழிக்கும். பந்து  கீழே வரும் போது சரியாக தட்டை அங்கு நகர்த்தினால் மீண்டும் மேலே சென்று கட்டங்களை அழிக்கும். இப்படி பந்தை தவறவிடாமல் அனைத்து கட்டங்களையும் அழிக்க வேண்டும். அப்படி அழித்தால் அடுத்த லெவலுக்கு போகும்.

இந்த விளையாட்டை தற்போது கூகுள் படத்தேடல் பக்கத்தில் வைத்துள்ளது.

கூகுள் பட தேடலில் “Atari Breakout” என்று தேடுங்கள், பந்து ஆடுங்கள்!

இதையும் படிங்க:  கூகுள் ரகசியம் - கண்டுபிடிக்கலாம் வாங்க!

3 thoughts on “கூகுள் படங்களை பந்தாடலாம் வாங்க!”