கூகுளும், ஐந்து முட்டாள் தின குறும்புகளும்

இன்று ஏப்ரல் ஒன்று! என்ன தினம் என்று சொல்லி தான் தெரிய வேண்டுமா என்ன? முட்டாள்கள் தினத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. இன்று கூகுள் வெளியிட்டுள்ள மூன்று ஐந்து முட்டாள்தின குறும்புகளை (April Fool Pranks) பார்ப்போம்.

புதையல் வரைப்படம்:

Google Maps தளத்தில் புதிதாக Treasure Map என்று இருக்கும். அதன் மூலம் புதையல்கள் இருக்கும் இடத்தை அறியலாம். ஆனால் புதையலை அடைய முடியாது. 🙂


Google Nose:

தற்போது கூகுள் முடிவு பக்கங்களில் சிலவற்றை நுகர்ந்து பார்க்க Google Nose என்ற புதிய வசதி வந்துள்ளது.

பார்க்க: http://www.google.com/intl/en/landing/nose/

மூடப்படும் யூட்யூப்:

யூட்யூப் தளத்தை மூடப்போவதாகவும், தற்போது அந்த தளத்தில் இருக்கும் அனைத்து வீடியோக்களையும் அழிக்க போவதாகவும் கூகுள் அறிவித்துள்ளது. மேலும் யூட்யூப் தளத்தில் சிறந்ததொரு வீடியோவை மட்டும் வைக்க போவதாகவும் அறிவித்துள்ளது.

Google Analytics:

Google Analytics தளத்திற்கு சென்றால் “International Space Station – Control Room”-லிருந்து 41 நபர்கள் தற்போது உங்கள் தளத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதாக காட்டும்.

Gmail Blue:

முழுவதும் நீலக் கலரிலான ஜிமெயில் ப்ளூ.

இந்த மூன்று ஐந்து செய்திகளும் உண்மை இல்லை, கூகிளின் முட்டாள் தின குறும்புகளாகும் (April Fool Prank). இதில் Google Nose மட்டும் நன்றாக உள்ளது.

இது தவிர மேலும் சிலவற்றை ஒவ்வொன்றாக வெளியிட்டுவருகிறது.

கடந்த வருட கூகுள் குறும்புகள் பற்றி அறிய, நம்மை முட்டாளாக்கும் கூகுள்?

இதையும் படிங்க:  கூகுள் மாற்றங்களும், ரகசியங்களும்

5 thoughts on “கூகுளும், ஐந்து முட்டாள் தின குறும்புகளும்”