கூகிள் ப்ளஸ்ஸில் ஆட்டம் ஆரம்பம்

சமூக வலைத்தளங்களிடையே ஒரு மாபெரும் போட்டி நிலவி வருகிறது. அது “தம்மில் யார் அதிகமான மக்களை இணையத்தில் அடிமையாக வைத்திருப்பது?” என்பது தான். தற்போது அந்த போட்டியில் மோதும் முக்கிய போட்டியாளர்கள் கூகிளும், பேஸ்புக்கும் தான்.

பேஸ்புக் தளத்தில் அதிக வரவேற்பை பெற்ற வசதிகளில் ஒன்று விளையாட்டுகள். பேஸ்புக் பயனாளர்கள் 750 மில்லியன் நபர்களில் சுமார் 200 மில்லியன் நபர்கள் இதனை விளையாடுகிறார்கள் (நான் மில்லியன்களில் ஒருவன்!). பேஸ்புக்கிற்கு ஒவ்வொரு அடியாக கொடுத்துவரும் கூகிள் ப்ளஸ், ஏற்கனவே கூகுள் ப்ளஸ் பற்றி சில செய்திகள் என்ற பதிவில் சொல்லியிருந்தது போல, தற்போது தனது ஆட்டத்தை தொடங்கியுள்ளது. அதாவது கூகிள் ப்ளஸ்ஸில் விளையாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் வழக்கம் போல, கொஞ்சம் கொஞ்சமாக தான் அனைவருக்கும் வரும். அது வரை காத்திருக்க வேண்டும்.

உங்கள் கூகிள் ப்ளஸ் முகப்பு பக்கத்தின் மேலே Home, Photos, Profile, Circles என்ற Tab-ற்கு அருகே புதிதாய் ஒரு Tab இருக்கும். அது தான் Google Plus Game-ன் Tab-ஆகும். இன்னும் எனக்கு வரவில்லை. உங்களுக்கு வந்திருந்தால் விளையாடி பார்த்து சொல்லவும்.

விளையாட்டுகளும் வசதிகளும்:

இணையத்தில் பிரபலமான Angry Birds Game உள்பட மேலும் சில விளையாட்டுகள் (படத்தை பார்க்கவும்) தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பல விளையாட்டுக்கள் வரும் எனவும் கூகுள் தெரிவித்துள்ளது.

##உங்கள் Circle-ல் உள்ளவர்கள் சமீபத்தில் விளையாடிய விளையாட்டுக்கள் பற்றிய தகவல்களை பார்க்கலாம்.

## ஒரே விளையாட்டில் நண்பர்களுடன் சேர்ந்து விளையாடலாம். (பேஸ்புக் விளையாட்டு போல). 

## விளையாட்டில் நீங்கள் எடுத்த மதிப்பெண்களை நண்பர்களுடன் பகிரலாம் (பேஸ்புக் விளையாட்டு போல).

##உங்களுக்கு விளையாட்டுகளில் ஆர்வம் இல்லை என்றால், அதனை செயல்நீக்கம் (Disable) செய்யலாம்.

இன்னும் சில வசதிகள் உள்ளன. பயன்படுத்தி பார்த்தபிறகு விரிவாக பதிவிடுகிறேன். 

இது  பற்றிய அறிவிப்பு: Games in Google+: fun that fits your schedule

கூடுதல் தகவல்கள்: 

போட்டிக்கு  போட்டி:

கூகிள் ப்ளஸ்ஸின் இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே, பேஸ்புக் தளமும் விளையாட்டில் சில மாற்றங்கள் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. அது பற்றி படிக்க 
http://blog.facebook.com/blog.php?post=10150251242342131
  

நானும் ஆட்டத்துல இருக்கேன்: 
இவர்கள் இருவரும் சீரியஸாக மோதிக் கொண்டிருக்க, ட்விட்டர் தளமோ “நானும் ஆட்டத்தில் இருக்கேன்” என்ற பாணியில், புதுப்புது வசதிகளை அறிமுகப்படுத்துகிறது.
1. இதுவரை ட்விட்டர் தளத்தில் புகைப்படங்களை பகிர வேண்டுமானால் Twitpic என்ற தளத்தை பயன்படுத்தி வந்தோம். தற்போது நேரடியாகவே ட்விட்டர் தளத்தில் பகிரும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
2. மற்றவர்களின் ட்விட்டர் பக்கத்திற்கு சென்றால், அங்கு உடனடியாக அவருக்கு செய்தி அனுப்பலாம்.
ஹீலோவிற்கு ஒரு ஹலோ! 
ட்விட்டர் தளம் சொந்தமாக படங்களை பகிரும் வசதியை கொண்டு வந்ததால் செம கடுப்பில் இருக்கும் (???) twitpic தளத்தின் நிறுவனர், ஹீலோ என்ற ஒரு சமூக வலைத்தளத்தை உருவாக்கியுள்ளார். ஆனால் இத்தளத்தில் ஒரு பெரிய மாற்றம் உள்ளது. ட்விட்டர் தளத்தில் நாம் பகிர்வதற்கு பெயர், ட்வீட். ஹீலோவில் பகிர்வதற்கு பெயர் பிங்(Ping).
என்னுடைய முகவரி: http://heello.com/basith27  (ச்சும்மா.. ஒரு ஆசைக்கு..)
Update:
கூகிள் ப்ளஸ் விளையாட்டு எனக்கு வந்தாச்சு.. சில விசயங்களை கேட்பதைவிட செயல்படுத்தி பார்ப்பது தான் நன்று.. நீங்கள் விளையாடினால் உங்கள் கருத்தை பகிரவும்.

25 thoughts on “கூகிள் ப்ளஸ்ஸில் ஆட்டம் ஆரம்பம்”

  1. ஸலாம் சகோ.அப்துல் பாஸித்…

    //"தம்மில் யார் அதிகமான மக்களை இணையத்தில் அடிமையாக வைத்திருப்பது?"//—முற்றிலும் தவறான போக்கு இது..!

    அவர்கள் அப்படி நினைத்தாலும்… புத்திசாலி மக்கள் இது போன்ற சமூக வலைத்தலங்களை வீண் வெட்டி விளையாட்டுக்கும் பாலியல் வக்கிரத்திற்கும் பயன்படுத்தாமல் தமக்கும் பிறர்க்கும் உபயோகமாக பயன் படுத்த வேண்டும். இதற்கு நிறைய அண்மைய புரட்சி முன்மாதிரிகள் உண்டு.

    இறைநாடினால் இதுபற்றிய ஒரு முன்மாதிரி புரட்சியை நாளை என் தளத்தில் பகிர்கிறேன்.

  2. சபாஷ் சரியான போட்டி.. இவர்களது இடையில் இப்பொழுது ட்விட்டருமா… கூகுல் + தனது முதல் எடத்தை விட்டுக்கொடுக்காதே என்றே நினைக்கிறேன்.. கூகுல் ப்ளஸ்க்கு ஜே… நன்றி நண்பரே பகிர்வுக்கு

  3. //முஹம்மத் ஆஷிக் 'Citizen of World' said… 1

    ஸலாம் சகோ.அப்துல் பாஸித்…//

    வ அலைக்கும் ஸலாம் சகோ.!

    ////"தம்மில் யார் அதிகமான மக்களை இணையத்தில் அடிமையாக வைத்திருப்பது?"//—முற்றிலும் தவறான போக்கு இது..!
    //

    நான் சொன்னது தவறு என்கிறீர்களா? அல்லது அவர்களுடைய போக்கு தவறு என்கிறீர்களா?

    தங்களுடைய பதிவை படித்தேன்.

  4. //மாய உலகம் said… 2

    சபாஷ் சரியான போட்டி.. இவர்களது இடையில் இப்பொழுது ட்விட்டருமா… கூகுல் + தனது முதல் எடத்தை விட்டுக்கொடுக்காதே என்றே நினைக்கிறேன்.. கூகுல் ப்ளஸ்க்கு ஜே… நன்றி நண்பரே பகிர்வுக்கு//

    நன்றி நண்பரே!

  5. //M.R said… 4

    நல்ல தகவல்கள் பகிர்ந்துள்ளீர்கள்

    பகிர்வுக்கு நன்றி நண்பரே//

    நன்றி நண்பரே!

  6. //அம்பாளடியாள் said… 6

    சுவாரசியமான செய்தியைப் பகிர்ந்துள்ளீர்கள் மிக்க
    நன்றி உங்களுக்கு//

    நன்றி சகோதரி!

  7. //ஆர்.கே.சதீஷ்குமார் said… 10

    இதெல்லாம் ப்ராண்ட்பாண்ட் வேகமாக இருக்குறவங்களுக்கு ஹிஹி//

    ஆம் நண்பா! வேகமான இணையம் வைத்திருப்பவர்களுக்கே கொஞ்சம் நேரம் எடுக்கிறது. அதுவும் Angry Birds விளையாட்டு slow motion ஆக இருக்கிறது.

    🙂 🙂 🙂