கூகிள் பஸ்ஸிற்கு Good Bye!

பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைப்பின்னல் தளங்களுக்கு போட்டியாக கூகிள் தளம் கடந்த வருடம் அறிமுகப்படுத்திய சமூக வலைப்பின்னல் கருவி தான் கூகிள் பஸ் (Google Buzz). ஆனால் அது அறிமுகமான சில நாட்களிலேயே அடிவாங்கத் தொடங்கியது.

கூகிள் பஸ் தொடக்கத்திலேயே அடிவாங்க காரணம், அதன் தனியுரிமை அமைவுகள் (Privacy Settings). கூகிள் பஸ் தனி தளத்தில் செயல்படவில்லை. ஜிமெயிலில் (Gmail) ஒரு பகுதியாக தான் செயல்பட்டது. ஜிமெயிலில் சமீபத்தில் நீங்கள் மெயில் அனுப்பியவர்களின் பட்டியலையும், அரட்டை அடித்தவர்களின் பட்டியலையும் உங்களை பின்தொடர்பவருக்கு காட்டிக் கொடுத்தது. மேலும் பஸ்ஸை செயல்நீக்கம் (Disable) செய்யும் வசதியும் இல்லை. இதனால் உலகெங்கும் கடும் எதிர்ப்பை சந்தித்தது கூகிள். பிறகு அதனுடைய தனியுரிமை அமைவுகளை மாற்றி அமைத்தது. மேலும் அதனை செயல்நீக்கம் செய்யும் வசதியையும் தந்தது. [அப்பொழுது பஸ்ஸை செயல்நீக்கம் செய்த நான் இன்று அதனை வழி அனுப்புவதற்காக செயலாக்கம் (Enable) செய்துள்ளேன். 🙂 🙂 🙂 ]


கூகிள் பஸ்ஸில் செய்த தவறிலிருந்து மீண்டு தற்போது கூகிள் ப்ளஸ் தளத்தை வெற்றிக்கரமாக அறிமுகப்படுத்தியுள்ளது. கூகிள் ப்ளஸ் தளத்திலேயே கூகிள பஸ் வசதியையும் இணைத்தது. தற்போது கூகிள் ப்ளஸ்ஸில் முழு கவனம் செய்வதால் கூகிள் பஸ் வசதியை மூடுவதற்கு முடிவெடுத்துள்ளது. இன்னும் சில வாரங்களில் இது நிரந்தரமாக மூடப்பட்டுவிடும். ஆனாலும் உங்கள் பழைய பஸ் செய்திகளை கூகிள் ப்ளஸ் தளத்தில் பார்க்கலாம். மேலும் அத்தகவல்களை நீங்கள் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். பதிவிறக்கம் செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.


நாளுக்கு நாள் புதிய வசதிகளை அறிமுகப்பத்திவரும் அதேவேளையில் தனது பல்வேறு வசதிகளை மூடிவருகிறது கூகிள் தளம். மூடப்போகும் வசதிகளில் சில:


1. Code Search – இணையத்தில் உள்ள திறந்த மூல குறியீடுகளை (Open Source Codes) தேடுவதற்கு பயன்பட்ட Code Search என்னும் தேடுபொறி வசதி. இது 2012, ஜனவரி 15ஆம் தேதி மூடப்படுகிறது.


2. Jaiku – இது ட்விட்டர் போன்ற Micro Blogging தளம். இதனை 2007-ஆம் வருடம் கையகப்படுத்தியது கூகிள். இதுவும் 2012, ஜனவரி 15ஆம் தேதி மூடப்படுகிறது.

3. Google Labs – கூகிளின் புதிய திட்டங்களை (Projects) சோதனை செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட கூகிள் லேப் தளம் இன்று மூடப்பட்டுவிட்டது.

4. Aardvark – இது சமூக தேடுபோறியாகும் (Social Search Engine). இங்கு நம்முடைய கேள்விகளை கேட்கலாம். பதில் தெரிந்தவர்கள் பதில் அளிப்பார்கள். Yahoo Answers தளம் போன்று. இந்த தளத்தை 2010-ஆம் ஆண்டு கையகப்படுத்திய கூகிள் தளம் விரைவில் இதனை மூடப்போகிறது.


5. Google Pack – பல்வேறு பயனுள்ள மென்பொருட்களை பதிவிறக்கம் செய்ய பயன்பட்டு வந்த கூகிள் பேக் தளம், இவ்வசதியை நிறுத்திவிட்டது. ஆனால் முக்கிய மென்பொருட்களை பதிவிறக்கம் செய்வதற்கான சுட்டியை தந்துள்ளது. அதனை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்.


இன்னும் நிறைய வசதிகளை மூட முடிவெடுத்துள்ளது. 


கூகிள் பஸ் மூடலால் அதிகம் வருத்தப்படுவது தமிழ் பதிவர்கள் தான் என நினைக்கிறேன். இனி கூகிள் பஸ்ஸிற்கு Good Bye சொல்லுவோம்!

35 thoughts on “கூகிள் பஸ்ஸிற்கு Good Bye!”

  1. கூகிள் ப்ளஸ் தொடக்கத்திலேயே அடிவாங்க காரணம்,

    நண்பா பிழை // கூகுள் பஸ் //

    Reply
  2. நானும் அதுக்குள்ள 2 , 3 தடவ போயிருக்கேன்.ஆனா ஒரு மண்ணும் புரியல….

    அதுனால எதுவும் சொல்றதுக்கில்ல 🙂

    Reply
  3. //வைரை சதிஷ் said… 1

    நல்ல தகவல்

    நான் கூகுள் Buzz-தளத்துக்கு சென்றதே இல்லை//

    நன்றி நண்பா! நானும் அதிகம் பயன்படுத்தியது இல்லை.

    Reply
  4. //Prabu Krishna said… 2

    Good Bye Google Buzz.. ஆன்மா சாந்தி அடையட்டும்! ஹி ஹி ஹி//

    தங்கள் இரங்கல் அஞ்சலிக்கு நன்றி சகோ.!

    🙂 🙂 🙂

    Reply
  5. //M.R said… 3

    நல்ல விளக்கம் நண்பரே

    குட் பை சொல்வோம்//

    நன்றி நண்பரே!

    Reply
  6. //stalin said… 5

    கூகிள் ப்ளஸ் தொடக்கத்திலேயே அடிவாங்க காரணம்,

    நண்பா பிழை // கூகுள் பஸ் ////

    நன்றி நண்பா! தற்போது மாற்றிவிட்டேன்.

    Reply
  7. //சம்பத்குமார் said… 6

    தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே..
    //

    நன்றி நண்பரே!

    Reply
  8. //தமிழ்கிழம் said… 8

    நான் இதுவரை google buzz பயன்படுதியதே இல்லை நண்பா…//

    நன்றி நண்பா! நானும் அதிகம் பயன்படுத்தியது இல்லை.

    Reply
  9. //விக்கியுலகம் said… 10

    மாப்ள இதுவும் போச்சா ரைட்டு! தகவலுக்கு மிக்க நன்றி!//

    🙂 🙂 🙂

    தங்கள் வருகைக்கு நன்றி நண்பா!

    Reply
  10. //ஆர்.சண்முகம் said… 11

    என்ன ஆச்சு கூகுளுக்கு?//

    ஹிஹிஹிஹி…

    //பழசை மூடுராங்கனா புதுசா எதுவோ வர போகுதுன்னு அர்த்தம் பாஸ்//

    புதுசு (கூகிள் ப்ளஸ்) வந்ததினால், பழசை (கூகிள் பஸ்) மூடுகிறார்கள். மற்றவைகளில் அதிக லாபம் இல்லாதது காரணமாக இருக்கலாம்.

    தங்கள் வருகைக்கு நன்றி நண்பா!

    Reply
  11. //ஆமினா said… 14

    நானும் அதுக்குள்ள 2 , 3 தடவ போயிருக்கேன்.ஆனா ஒரு மண்ணும் புரியல….

    அதுனால எதுவும் சொல்றதுக்கில்ல :-)//

    🙂 🙂 🙂

    தங்கள் வருகைக்கு நன்றி சகோதரி!

    Reply
  12. ம் மூடட்டும்..! ஒன்று வழி அடைக்கும்போது மறு வழி தானாகவே திறக்கும். நம்புவோம்..!!

    Reply
  13. //தங்கம்பழனி said… 30

    ம் மூடட்டும்..! ஒன்று வழி அடைக்கும்போது மறு வழி தானாகவே திறக்கும். நம்புவோம்..!!//

    🙂 🙂 🙂

    நன்றி நண்பா!

    Reply
  14. //மாய உலகம் said… 31

    தகவலை தாமதமாக தெரிந்து கொண்டேன் நண்பா… பகிர்வுக்கு நன்றி.//

    நன்றி நண்பா!

    Reply
  15. கூகிள் க்ரோம் மூலம் ஜி. மெயிலுக்கு வந்தால்தான் கூகிள் பஸ் கிடைக்கிறது. இண்டெர்னெட் எக்ஸ்ப்லோரர் மூலம் ஜி மெயில் வந்தால் கூகிள் பஸ் வருவதில்லை. மேலும் எனக்கு இந்த டெக்னிகல் சமாசாரங்கள் தெரிவதில்லை, விளங்குவதுமில்லை. ஏத்ஹோ ப்ளாக் எழுதுகிறேன் கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறேன். ஜி. மெயிலில் உங்கள் மெயில் கண்டும் ஏதும் செய்யவில்லை. இதுதான் காரணம்.

    Reply

Leave a Reply