கூகிளின் புதிய தோற்றம் – New Google Bar

கூகிள் என்பதற்கு அகராதியில் “மாற்றம்” என்ற பொருளையும் சேர்த்துவிடலாம். அந்த அளவிற்கு மாற்றங்களை செய்து வருகிறது. சமீபத்தில் கூகிள் தேடல், ஜிமெயில் போன்ற தளங்களின் மேலே கருப்பு நிற பட்டையைக் கொண்டு வந்தது அல்லவா? அதன் தோற்றத்தை தற்போது மாற்றியுள்ளது.

கூகிளின் எழுதப்படாத விதியின்படி இந்த வசதியையும் அனைவருக்கும் ஒரே நேரத்தில் அறிமுகப்படுத்தவில்லை. ஒரு சிலருக்கு மட்டும் தான் அறிமுகப்படுத்தியுள்ளது. மற்றவர்களுக்கு வரிசையாக அறிமுகப்படுத்தி வருகிறது. எனக்கு இன்னும் இந்த வசதி வரவில்லை.

[படங்களை பெரிதாக காண படத்தின் மீது கிளிக் செய்யுங்கள்]

பழைய கூகிள் பட்டையின் தோற்றம்:

புதிய தோற்றம்:

இதில் கூகிள் லோகோவிற்கு பக்கத்தில் இருக்கும் சிறிய ஐகானை கிளிக் செய்தால் கூகிளின் மற்ற தளங்களின் சிறிய பட்டியல் வரும். அதில் ஏதாவது ஒன்றை கிளிக் செய்து அந்த தளத்திற்கு செல்லலாம்.

இதில் More என்பதை கிளிக் செய்தால் ப்ளாக்கர் உள்ளிட்ட மேலும் பல கூகிள் தளங்களை காட்டும்.

பழைய பட்டையில் இருந்து கூகிள் ப்ளஸ் தளத்தில் பகிரும் வசதி இருந்தது அல்லவா? அதனையும் இதில் சேர்த்துள்ளது.

வலது புறத்தில் Shareஎன்னும் பட்டனை கிளிக் செய்து கூகிள் ப்ளஸ் தளத்தில் பகிரலாம்.

இது பற்றி கூகிள் வெளியிட்டுள்ள வீடியோ:

உங்களுக்கு இந்த வசதி கிடைத்திருந்தால் உங்கள் கருத்துக்களையும் இங்கு பதிவு செய்யவும்.

Image Credits: கூகிள்

இதையும் படிங்க:  தமிழ்மணத்தில் ஓட்டு போட்டது யார்? #2

29 thoughts on “கூகிளின் புதிய தோற்றம் – New Google Bar”

  1. தகவலுக்கு நன்றி நண்பரே! எனக்கு எப்பொழுது கிடைக்குமென்று எதிர்பார்க்கிறேன். பகிர்வுக்கு நன்றி நண்பரே!

  2. //விக்கியுலகம் said… 1

    இன்னும் கெடைக்கல மாப்ள…பகிர்வுக்கு நன்றி!//

    அடுத்த பதிவை பாருங்கள் நண்பரே!

  3. //தமிழ்கிழம் said… 8

    ஹைய்யா நானும் ஒரு வி‌ஐ‌பி, எனக்கும் இந்த மாற்றம் கிடைத்து விட்டது…//

    ஹாஹாஹா… வாழ்த்துக்கள் நண்பா!

  4. //stalin wesley said… 9

    பேஸ் பூக் – மேல கொலை வெறி -ல தான் இப்படி பண்ணராங்களோ …..

    நன்றி//

    ஹிஹிஹி…. இருக்கலாம்.

  5. //~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said… 10

    ஸலாம் சகோ.அப்துல் பாஸித்,
    எனக்கும் கூகுள் இன்னும் மாற்றவில்லை.
    ஆனால், முதல் படம் மட்டும் தெரிகிறது.
    //

    வ அலைக்கும் ஸலாம்

    ஹிஹிஹிஹி…

  6. //வே.சுப்ரமணியன். said… 12

    தகவலுக்கு நன்றி நண்பரே! எனக்கு எப்பொழுது கிடைக்குமென்று எதிர்பார்க்கிறேன். பகிர்வுக்கு நன்றி நண்பரே!//

    நன்றி நண்பரே!

  7. //Minmalar said… 13

    எனக்கு இன்னும் மாறவில்லை.
    தகவலுக்கு நன்றி!.//

    அடுத்த பதிவை பாருங்கள் நண்பரே!

  8. பேஸ்புக் நான் வேலை செய்யும் இடத்தில் குறுக்கே கட்டையை போட்டுட்டாங்க இருந்தால் என்ன… கூகுள் ப்ளஸ் போதுமே எனக்கு.. 🙂