கூகிளின் அதிரடி மாற்றங்கள்

கூகிள் ப்ளஸ் வந்த பிறகு தனது எல்லா தளங்களின் தோற்றங்களையும் மாற்றி வருகிறது கூகிள் தளம் (இதனை எத்தனையாவது தடவை எழுதுகிறேன் என்று எனக்கே தெரியவில்லை). தற்போது மாற்றம் பெற்றிருப்பது ஜிமெயில் மற்றும் கூகிள் ரீடர் தளங்கள். அதனை பற்றி இங்கு பார்ப்போம்.

ஜிமெயில் மாற்றங்கள்:

ஜிமெயிலில் மாற்றம் கொண்டுவரப் போவதாக கடந்த ஜூலை மாதமே அறிவிப்பு செய்தது கூகுள் தளம். தற்போது அதன் தோற்றத்தை மாற்றி மேலும் சில வசதிகளையும் அளித்துள்ளது. உங்கள் ஜிமெயில் கணக்கில் உள்நுழைந்தால், கீழே Switch to New Look என்று இருக்கும். அதன் மூலம் புதிய தோற்றத்தை பெறலாம்.

புதிய தோற்றம்:அமைவுகள் (Settings):


ஜிமெயில் பக்கத்தில் settings பட்டனை அழுத்தினால் மேலுள்ள படத்தை போல் காட்டும்.

Display Density – Comfortable, Cozy, Compact என்று மூன்று விதமாக ஜிமெயில் பக்கத்தின் அளவை மாற்றிக் கொள்ளலாம்.

Revert to the old look temporarily – இதனை சொடுக்கி மீண்டும் பழைய தோற்றத்திற்கு மாறிக் கொள்ளலாம்.

Settings –  இதனை சொடுக்கி அனைத்து அமைவுகளையும் மாற்றிக் கொள்ளலாம்.

Themes – இதனை சொடுக்கி பின்னணிப் படங்களை மாற்றிக் கொள்ளலாம். தற்போது புதிதாக HD (High-Definition) படங்களை சேர்த்துள்ளது.


Report a Bug – புதிய தோற்றத்தில் ஏதாவது பிழைகள் இருந்தால் அவர்களுக்கு தெரிவிக்கலாம்.

குழு உரையாடல்கள்:

ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பும் போது நிறைய உரையாடல்கள் இருக்கும் அல்லவா? அதன் தோற்றத்தையும் மாற்றியுள்ளது. மேலும் மின்னஞ்சல் அனுப்பியவரின் ப்ரொஃபைல் படத்தையும் காட்டுகிறது. இதன் மூலம்அதிகமான பதில்கள் வரும் போது எந்த மின்னஞ்சல் யார் அனுப்பியது என்று எளிதாக பார்க்கலாம்.

புதிய மாற்றங்களின் முழுவிவரங்களை படிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.


கூகிள் ரீடர் மாற்றங்கள்:

கூகிள் ரீடர் தளத்தின் தோற்றத்தையும் மாற்றியுள்ளது. கிட்டத்தட்ட ஜிமெயில் போன்றே தோற்றமளிக்கின்றது. மேலும் ரீடரில் நாம் படிக்கும் பதிவுகளை நேரடியாக கூகிள் ப்ளஸ்ஸில் பகிரும் வசதியையும் அளித்துள்ளது.மேலும் சில வசதிகளை நீக்கியுள்ளதாக சொல்கிறது.

கூகிள் ப்ளஸ் மாற்றம்:

கூகிள் ப்ளஸ் தளத்தில் நண்பர்களுக்கு தனிப்பட்ட செய்தி அனுப்பும் வசதி இல்லாமல் இருந்தது. தனி செய்தி அனுப்ப வேண்டுமெனில் “Add people or circles” பகுதியில் நாம் அனுப்ப வேண்டிய நண்பர்களை மட்டும் சேர்த்து அனுப்ப வேண்டும். தற்போது அதனை எளிமைப்படுத்தியுள்ளது.

நாம் யாருக்கு செய்தி அனுப்ப வேண்டுமோ அவர்களின் ப்ரொஃபைல் பக்கத்திற்கு சென்றால், அங்கு இடதுபுறம் Send Message என்னும் பட்டனை க்ளிக் செய்தால் ஒரு புதிய விண்டோ வரும்.

அதில் உங்கள் செய்தியினை கொடுத்து, share என்பதை சொடுக்கினால் போதும். செய்தி சென்றுவிடும். மேலும் புகைப்படம், வீடியோ போன்றவற்றையும் இணைத்து அனுப்பலாம்.

இதையும் படிங்க:  ப்ளாக்கரில் மறைந்திருந்த புதிய வசதி

Creative Kit:

ப்ளாக்கரில் பிக்னிக் வசதி என்ற  பதிவில் picnik என்னும் புகைப்படத்தை அழகுபடுத்தும் வசதியை பற்றி பார்த்தோம் அல்லவா? அதே வசதியை Creative Kit என்னும் பெயரில் கூகிள் ப்ளஸ் தளத்திலும் அறிமுகப்படுத்தியுள்ளது.

கூகிள் ப்ளஸ்ஸில் நீங்கள் பதிவேற்றிய புகைப்படத்தை க்ளிக் செய்தால் அங்கு Edit என்ற தேர்வு இருக்கும். அதை க்ளிக் செய்து, Creative Kit என்பதை க்ளிக் செய்தால் உங்கள் படம் picnik விண்டோவில் வரும்.

அங்கு உங்கள் படத்தை உங்கள் விருப்பப்படி மாற்றிக் கொள்ளலாம்.


ப்ளாக்கர் மாற்றம்:

நம்முடைய பதிவுகளில் மற்ற தளங்களுக்கு இணைப்புகள் (Links) கொடுப்போம் அல்லவா? அப்படி கொடுக்கும் போது அந்த இணைப்புகள் புதிய விண்டோவில் அல்லது Tab-ல் திறப்பதற்காக html Code-ல் மாற்றம் செய்வோம். தற்போது அந்த வசதியை எளிமைப்படுத்தியுள்ளது ப்ளாக்கர் தளம்.

பதிவெழுதும் போது Link என்பதை க்ளிக் செய்தால் ஒரு விண்டோ வரும்.  அதில் Text To Display என்னும் பகுதியில் ஏதாவது வார்த்தைகளையும், Link To  என்ற பகுதியில், அந்த வார்த்தையை க்ளிக் செய்தால் எந்த தளத்திற்கு செல்ல வேண்டுமோ அதனுடைய முகவரியையும் கொடுத்து, கீழே Open this link in a new window  என்ற இடத்தில் டிக் செய்து OK என்பதை சொடுக்கவும்.

இந்த வசதி எப்போது வந்தது? என்று தெரியவில்லை. நான் தற்போது தான் தெரிந்துக் கொண்டேன்.

Image Credits: Google , 247freetips.com

28 thoughts on “கூகிளின் அதிரடி மாற்றங்கள்”

 1. gmail, கூகுள் பிளஸ், கூகுள் ரீடர், பிளாக்கர் மொத்தம் நான்கு பயனுள்ள பதிவை ஒரே பதிவில் கொடுத்து அசத்திவிட்டீர்கள்… நன்றியுடன் வாழ்த்துக்கள் நண்பா!

 2. மிகவும் பயனுள்ள விசயங்கள் நண்பா… நானும் மெயிலை மாற்றிப்பார்க்கிறேன்… பகிர்வுக்கு நன்றி நண்பா!

 3. சலாம் சகோ

  இன்னைக்கு காலைல ஜீமெயில்ல ஒரு புது ஆப்சன் பார்த்ததும் எப்படியும் நீங்க பதிவு போடுவீங்கன்னு நெனச்சென் 🙂

  தனித்தனியாவே போட்டிருக்கலாமே 🙂

 4. மாத்திட்டேன் மெயில் செட்டப் ரியலி சூப்பரா மாறிடுச்சு.. நன்றி நண்பா

 5. ஸலாம் சகோ.அப்துல் பாஸித்…
  மாஷாஅல்லாஹ், பயனுள்ள பல பகிர்வுகள்… ஒரே பதிவில்..! நன்றி.

  ஆனாலும், யானைக்கும் அடி சறுக்கும் போல…
  //இந்த வசதி எப்போது வந்தது? என்று தெரியவில்லை. நான் தற்போது தான் தெரிந்துக் கொண்டேன்.//—சுமார் ஒரு வருஷத்துக்கு முன்னர் நான் பதிவு எழுத வந்த காலத்திலிருந்தே அந்த லிங்க் கொடுக்கும் வசதி இருக்கிறதே சகோ..!?

  ஏனெனில், html-இல் பின்னூட்டத்தில் லிங்க் கொடுக்கும் டெக்னாலஜியை(?) நான் அறியாமல் இருந்தேன்..! அப்போது… "ஜி-மெயிலில், பிளாகில் என்னால் 'லிங்க்'ஐ கிளிக்கி லிங்க் கொடுக்க முடிகிறது. அதேபோல, "அதை, மறுமொழி பெட்டியில் எப்படி தருவது" என்று உங்களிடம் கேட்டேன். நீங்கள் எனக்கு மெயில் அனுப்பி சொல்லிக்கொடுத்தீர்கள். அதுதான் எனக்கு நீங்கள் அனுப்பிய உங்களின் முதல் மெயில். நியாபகம் உள்ளதா சகோ.அப்துல் பாஸித்..?

 6. //Prabu Krishna said… 1

  அடேங்கப்பா ஒரே பதிவில் இவ்வளவு விஷயங்களா? எல்லாமே அருமை. நன்றி சகோ.//

  நன்றி சகோ.!

 7. //ஆமினா said… 2

  சலாம் சகோ

  இன்னைக்கு காலைல ஜீமெயில்ல ஒரு புது ஆப்சன் பார்த்ததும் எப்படியும் நீங்க பதிவு போடுவீங்கன்னு நெனச்சென் :-)//

  வ அலைக்கும் ஸலாம். நன்றி சகோ.!

  // தனித்தனியாவே போட்டிருக்கலாமே :-)//

  இல்லை சகோ. மற்றவைகள் சின்னதாக இருந்ததால எப்படி பதிவிடுவது என்றி விட்டுவிட்டேன். இந்த பதிவு எழுதியதால் சேர்த்து பதிவிட்டேன்.

 8. //மாய உலகம் said… 3

  மிகவும் பயனுள்ள விசயங்கள் நண்பா… நானும் மெயிலை மாற்றிப்பார்க்கிறேன்… பகிர்வுக்கு நன்றி நண்பா!//

  //gmail, கூகுள் பிளஸ், கூகுள் ரீடர், பிளாக்கர் மொத்தம் நான்கு பயனுள்ள பதிவை ஒரே பதிவில் கொடுத்து அசத்திவிட்டீர்கள்… நன்றியுடன் வாழ்த்துக்கள் நண்பா!//

  //மாத்திட்டேன் மெயில் செட்டப் ரியலி சூப்பரா மாறிடுச்சு.. நன்றி நண்பா//

  நன்றி நண்பா!

 9. //~முஹம்மத் ஆஷிக்_citizen of world~ said… 10

  ஸலாம் சகோ.அப்துல் பாஸித்…
  மாஷாஅல்லாஹ், பயனுள்ள பல பகிர்வுகள்… ஒரே பதிவில்..! நன்றி.//

  வ அலைக்கும் ஸலாம்.

  நன்றி சகோ.!

  // ஆனாலும், யானைக்கும் அடி சறுக்கும் போல…
  //இந்த வசதி எப்போது வந்தது? என்று தெரியவில்லை. நான் தற்போது தான் தெரிந்துக் கொண்டேன்.//—சுமார் ஒரு வருஷத்துக்கு முன்னர் நான் பதிவு எழுத வந்த காலத்திலிருந்தே அந்த லிங்க் கொடுக்கும் வசதி இருக்கிறதே சகோ..!?

  ஏனெனில், html-இல் பின்னூட்டத்தில் லிங்க் கொடுக்கும் டெக்னாலஜியை(?) நான் அறியாமல் இருந்தேன்..! அப்போது… "ஜி-மெயிலில், பிளாகில் என்னால் 'லிங்க்'ஐ கிளிக்கி லிங்க் கொடுக்க முடிகிறது. அதேபோல, "அதை, மறுமொழி பெட்டியில் எப்படி தருவது" என்று உங்களிடம் கேட்டேன். நீங்கள் எனக்கு மெயில் அனுப்பி சொல்லிக்கொடுத்தீர்கள். அதுதான் எனக்கு நீங்கள் அனுப்பிய உங்களின் முதல் மெயில். நியாபகம் உள்ளதா சகோ.அப்துல் பாஸித்..?
  //

  இல்லை சகோ.! நீங்கள் தவறாக புரிந்துக் கொண்டீர்கள் என நினைக்கிறேன். Link கொடுக்கும் வசதி புதிதாக வந்துள்ளது என்று சொல்லவில்லை.

  இணைப்புகள் புதிய விண்டோவில் அல்லது Tab-ல் திறப்பதற்காக html Code-ல் மாற்றம் செய்வோம். தற்போது அந்த வசதியை எளிமைப்படுத்தியுள்ளது ப்ளாக்கர் தளம்.

  இந்த வசதி தான் புதிதாக வந்துள்ளது.

 10. //சம்பத் குமார் said… 11

  புதிய வசதியை activate செய்துவிட்டேன் நண்பரே..

  தகவலுக்கு மிக்க நன்றி

  நட்புடன்
  சம்பத்குமார்//

  நன்றி நண்பரே!

 11. //மாணவன் said… 13

  கூகிளின் புதிய தகவல்களை அழகாக தொகுத்து தெளிவாக பதிவிட்டமைக்கு நன்றி நண்பா!
  //

  நன்றி நண்பா!