கடலும் கூகுளும் பின்னே ஆன்ட்ராய்டும்

எத்தனை முறை பார்த்தாலும் புதிதாகவே தெரிகிறது கடல். கடல் அலைகளால் பாறைகள் மட்டும் அல்ல, நம்முடைய சோகங்களும் சில மணி நேரங்கள் கரைந்துவிடுகிறது. “ஐயையோ! ப்ளாக்கர் நண்பனுக்கு ஏதோ ஆயிடுச்சு!” என்று நீங்கள் நினைப்பதற்குள் நாம் பதிவிற்குள்ளே அல்லது கடலுக்குள்ளே சென்றுவிடுவோம்.

கூகுள் மேப் பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள். உலக வரைப்படத்தை நம் கைக்குள் வைத்திருக்கும் கூகுளின் சேவையாகும். கூகுள் மேப்பின் சில வசதிகளை இந்தியாவில் கூகுள் வணிக புகைப்படங்கள் என்ற  பதிவிலும், இலவசமாக ஹெலிகாப்டரில் ஊர் சுற்றலாம் என்ற  பதிவிலும் ஏற்கனவே பார்த்துள்ளோம். தற்போது Street view வசதி மூலம் ஆழ்கடல் அதிசயங்களை நம் கண் முன்னே காட்டுகிறது.

இது பற்றிய வீடியோவை பாருங்கள்.

சுற்றி பார்க்க வேண்டிய கடல் பகுதிகள்:

Heron Island resort

Wilson Island

Apo Island

Hawaii

Lady Elliot Island

மேலும்  பல இடங்களை இங்கே கிளிக் செய்து பார்க்கலாம்.

கூகுளுக்கு இன்று பிறந்நாள்:

கூகுள்  தளத்திற்கு இன்று பதினான்காவது பிறந்தநாள். அதனையொட்டி கூகுள் வெளியிட்டுள்ள டூடுல்.

கூகுளுடன் சேர்ந்து நண்பர் கோகுலும் இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார். என்னவொரு ஒற்றுமை?


அதிரடிச் சலுகையில் ஆன்ட்ராய்ட் அப்ளிகேசன்கள்:

கூகுள் ப்ளே தளத்தில் இருந்து இதுவரை 25 பில்லியன் அப்ளிகேசன்கள் மற்றும் விளையாட்டுக்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. இதனை முன்னிட்டு நேற்றிலிருந்து ஐந்து நாட்களுக்கு கூகுள் தளம் சில அப்ளிகேசன்களை 25 சென்ட் அமெரிக்க காசுக்கு சலுகை விலையில் தருகிறது. தற்போது வரையிலான அப்ளிகேசன்களில் எதுவும் எனக்கு பிடிக்கவில்லை.

சலுகை விலையில் உள்ள அப்ளிகேசன்கள் மற்றும் கேம்களை பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

இதையும் படிங்க:  ஆண்ட்ராய்ட் 4.4 கிட்காட் (Android 4.4 KitKat)

13 thoughts on “கடலும் கூகுளும் பின்னே ஆன்ட்ராய்டும்”

  1. உங்கள் புண்ணியத்தில் கடலுக்குள் போயிட்டு வந்தாச்சு. முத்து தான் எதுவும் கிடைக்கல.

    கூகுள்க்கும், நண்பர் கோகுல்க்கும் பிறந்த நாள் நல்வாழ்த்துகள். :-)))

  2. சலாம்,
    குளு குளுன்னு அருமையான பதிவு சகோ.அசத்துறிங்க சகோ…

    என் தளத்தில் இப்பொழுது:

    நரேந்திர மோடி-அதிகாரபூர்வ பெயர் மாற்றம்

    கட்டுரையை பற்றி :
    பதிவுலகில் இருபவர்களுக்கே இவ்விசயம் தெரியவில்லை என்றால் மற்ற மக்களை பற்றி யோசியுங்கள்,நம் ஊடகங்கள் அப்படி உள்ளது….

    நீங்கள் அறிந்த இவ்வசயத்தை பிறருக்கும் சொல்லுங்கள் முடிந்தால் இந்த கட்டுரையின் லிங்கையும் உங்கள் தளத்தில் கொடுங்கள்,பிறருக்கும் இவ்விசயம் தெரிய உதவுங்கள்.

    http://tvpmuslim.blogspot.in

  3. ம்ம்ம்ம்….#எத்தனை முறை பார்த்தாலும் புதிதாகவே தெரிகிறது #கடலின் ஆழத்தை போல கூகுளின் ஆழமும் அளவிட முடியாதது என்றே நினைக்கின்றேன்….நல்ல தகவல்கள்