ஏமாற்றத்தைக் கொடுத்த ப்ளாக்கர் புது வசதி

ப்ளாக்கர் தளம் தனது டாஷ்போர்ட் தோற்றத்தை மாற்றியுள்ளது அனைவருக்கும் தெரியும். நம்முடைய ப்ளாக்கை விதவிதமாக பார்க்கும் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளதாக இப்படியும் படிக்கலாம்! (Dynamic Views) என்ற பதிவில் பார்த்தோம். தற்போது அந்த வசதியை அறிமுகப்படுத்திவிட்டது.

இந்த வசதி மூலம் நமது தளத்தை ஏழு விதமாக பார்க்கலாம். அவைகள்,

Classic, FlipCard, Magazine, Mosaic, Sidebar, Snapshot, TimeSlide

இந்த புதிய வசதியை ஆக்டிவேட் செய்ய, Blogger Dashboard => Template பகுதிக்கு செல்லுங்கள்.

அங்கு Dynamic Views என்ற பகுதியில் ஏழு டிசைன்களும் இருக்கும். அவற்றில் ஏதாவது ஒன்றை க்ளிக் செய்யுங்கள்.

அந்தந்த டிசைன்களின் preview காட்டும். அதில் உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து, Apply to Blog என்பதை க்ளிக் செய்யுங்கள்.

அவ்வளவுதான்! இனி உங்கள் ப்ளாக் புதிய தோற்றத்தில் காட்சி அளிக்கும்.

புதிய  வசதியை ஆக்டிவேட் செய்த பிறகு, அது பிடிக்காமல் பழைய டெம்ப்ளேட்டை பயன்படுத்த நினைத்தால்,

அதே Template பக்கத்தில் மேலே Customize என்னும் பட்டனை க்ளிக் செய்யுங்கள்.

பிறகு வரும் பக்கத்தில் Revert To Previous Template என்பதை க்ளிக் செய்யுங்கள். உங்கள் டெம்ப்ளேட் பழைய நிலைக்கு மாறிவிடும்.

இதனை தற்போது பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் இந்த புது வசதியில் சில குறைகள் இருக்கின்றன.

1. Sidebar-ல் நாம் சேர்த்துள்ள எந்த gadgets-ம் தெரியவில்லை.

2. Rss Feed-ஐ நாம் முழுவதுமாக வைக்க வேண்டும். இல்லையெனில் Read More-ஐ க்ளிக் செய்தாலும் அதனையே காட்டுகிறது. முழு பதிவையும் காட்டுவதில்லை.

3. Load ஆக அதிக நேரம் எடுக்கிறது.

4. நீங்கள் எந்த டிசைனை தேர்ந்தெடுத்தாலும், வாசகர்கள் தமக்கு பிடித்தவாறு பார்க்க வசதியாக ப்ளாக் மேலே இடதுபுறம் டிசைன்களின் பெயர்கள் Drop Down முறையில் இருக்கிறது. ஆனால் அந்த எழுத்துக்கள் தெரியவில்லை.

5. இவைகள் எல்லாவற்றையும்விட ஓட்டு பட்டைகள் தெரிவதில்லை.

ஆனால் வி…..ரை…..வி…..ல் இதனை ப்ளாக்கர் சரி செய்துவிடும் என்று நம்புகிறேன். மேலே சொன்ன பிரச்சனைகளில் முதல் இரண்டை பிளாக்கருக்கு சொல்லியிருக்கிறேன். நீங்களும் அவர்களுக்கு இதனை பற்றி சொல்ல நினைத்தால் இங்கு க்ளிக் செய்து சொல்லவும்.

இதையும் படிங்க:  பிளாக்கரில் புதிய/பழைய கூகிள்+ வசதிகள்

31 thoughts on “ஏமாற்றத்தைக் கொடுத்த ப்ளாக்கர் புது வசதி”

  1. நானும் முயற்சித்துப் பார்த்தேன் நீங்கள் சொல்வதுபோல் சில குறைகள் இருக்கிறது. தகவலுக்கு நன்றி நண்பா!

  2. உண்மைதான் நண்பரே..

    இந்தக் குறைகளும் நீக்கப்பட்டு பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தால் இன்னும் வசதியாக இருக்கும்..

    நானும் இதே பொருள் குறித்து இன்று எழுதியிருக்கிறேன் நண்பரே..

  3. நான் இந்த டைனமிக் வியூவ் பயன்படுத்தியதில்லை, அது லோட் ஆக அதிக நேரம் எடுக்கும் என எங்கோ படித்த ஞாபகம்…பயனுள்ள பதிவு.. நன்றி…

    புதிய டாஷ்போர்டின் பயனர் இடைமுகம் நன்றாக் இருக்கிறது….

  4. //மாணவன் said… 2

    நானும் முயற்சித்துப் பார்த்தேன் நீங்கள் சொல்வதுபோல் சில குறைகள் இருக்கிறது. தகவலுக்கு நன்றி நண்பா!//

    நன்றி நண்பா!

  5. //♔ம.தி.சுதா♔ said… 3

    ஆமாப்பா… ஒரு தடவை திணற வச்சிட்டுது..

    அன்புச் சகோதரன்…
    ம.தி.சுதா//

    🙂 🙂 🙂

    நன்றி சகோ.!

  6. //நிரூபன் said… 5

    இனிய மாலை வணக்கம் நண்பா,

    நானும் இந்தப் புதிய டெம்பிளேட் வசதியினை மாற்றிப் பார்த்தேன்.
    பிடிக்கல….//

    🙂 🙂 🙂

    நன்றி நண்பா!

  7. //ஆர்.சண்முகம் said… 6

    வசதி நன்றாக இருக்கிறது. நீங்கள் சொன்னதை போல் மேம்படுத்தினால் இன்னும் நன்றாக இருக்கும்.//

    ஆம் நண்பா. கருத்துக்கு நன்றி!

  8. //முனைவர்.இரா.குணசீலன் said… 7

    உண்மைதான் நண்பரே..

    இந்தக் குறைகளும் நீக்கப்பட்டு பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தால் இன்னும் வசதியாக இருக்கும்..

    நானும் இதே பொருள் குறித்து இன்று எழுதியிருக்கிறேன் நண்பரே..//

    படித்தேன். நன்றி நண்பரே!

  9. //Heart Rider said… 8

    நான் இந்த டைனமிக் வியூவ் பயன்படுத்தியதில்லை, அது லோட் ஆக அதிக நேரம் எடுக்கும் என எங்கோ படித்த ஞாபகம்…பயனுள்ள பதிவு.. நன்றி…

    புதிய டாஷ்போர்டின் பயனர் இடைமுகம் நன்றாக் இருக்கிறது….//

    நன்றி நண்பா!

  10. //வைரை சதிஷ் said… 9

    நல்ல தகவல் நண்பா.

    நானும் பயன்படுத்தி பார்த்தேன்.எனக்கு பிடிக்கவில்லை//

    🙂 🙂 🙂

    நன்றி நண்பா!

  11. //ஆமினா said… 10

    //ஆமாப்பா… ஒரு தடவை திணற வச்சிட்டுது..
    //

    அதனால தான் பார்த்ததோட apply பண்ணாம திரும்பிட்டேன் :-)//

    🙂 🙂 🙂

    நன்றி சகோதரி!

  12. //ந.ர.செ. ராஜ்குமார் said… 11

    எனது blogல் followers widget போய்விட்டது. எப்படி மீட்பதெனத் தெரியவில்லை//

    நண்பா! தாங்கள் ப்ளாக் மொழியினை தமிழ் என்று வைத்துள்ளீர்கள். தமிழ் மொழி என்று வைத்தால் Follower gadget தெரியாது. ப்ளாக் மொழியினை ஆங்கிலத்திற்கு மாற்றவும்.

    Dashboard => settings => Language and settings பக்கத்திற்கு சென்று Language என்ற இடத்தில் மாற்றவும்.

  13. நானும் இந்தப் புதிய டெம்பிளேட் வசதியினை மாற்றிப் பார்த்தேன். ஏதோ பாதியில் நின்றது போல் இருக்கிறது.. ..

  14. //anbu said… 26

    நானும் இந்தப் புதிய டெம்பிளேட் வசதியினை மாற்றிப் பார்த்தேன். ஏதோ பாதியில் நின்றது போல் இருக்கிறது.. ..
    //

    ஆம் நண்பரே! தங்கள் கருத்துக்கு நன்றி!

  15. //எனது blogல் followers widget போய்விட்டது. எப்படி மீட்பதெனத் தெரியவில்லை?

    நண்பா! தாங்கள் ப்ளாக் மொழியினை தமிழ் என்று வைத்துள்ளீர்கள். தமிழ் மொழி என்று வைத்தால் Follower gadget தெரியாது. ப்ளாக் மொழியினை ஆங்கிலத்திற்கு மாற்றவும்.
    //

    எனக்கும் பல நாட்களாக இருந்த ஐயம்… நன்றி

  16. ஒருவருக்கு விஷம் மற்றொருவருக்கு அமிழ்தம்…

    பலருக்கு சற்று விஷமாக படும் புதிய வசதி (Dynamic Views) எனக்கு வரப்பிரசாதமாக உள்ளது..

    தமிழ்,ஆங்கிலம் போன்ற மனிதர்கள் பேசும் மொழிகளைப் புரிந்து கொள்ளும் எனக்கு ஏனோ HTML மொழி விளங்கவே இல்லை.. அதில் ஏதோ பேசப்போய் தளம் முழுதாய் load ஆகாமலே இருந்தது.. மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் ஒரு நண்பனைப் போல காத்தது இது…

    இப்ப விட்ஜெட் எதுவும் இல்லை..

    தேவையான விட்ஜெட்கள் மட்டும் எனது டெம்பிளேட்டில்!!
    முன்பை விட எனது தளம் மிகவும் வேகமாக load ஆகுது!!

    இது எனது அனுபவம்..