எச்சரிக்கை! கூகுள் பெயரில் மோசடி

நேற்று எனக்கு ஈமெயில் ஒன்று வந்தது. அது கூகுள் அனுப்பியது போலவே இருந்தது. அதில் நான் புதிய இடத்திலிருந்து “Handel”-ஐ பயன்படுத்தியதாகவும், அந்த இடத்தை என் “Handel”-லில் இணைப்பதற்கு கூகுள் கணக்கு மூலம் அமைப்புகளை மாற்றவும் எனவும் சொல்லப்பட்டிருந்தது.

அந்த மெயிலை பார்த்ததும் அது போலி என தெரிந்துவிட்டது. அதில் உள்ள லின்க்கை கிளிக் செய்தால் கூகுள் Login Page போலவே தோன்றும் பக்கத்திற்கு சென்றது.

இதை பார்த்ததும் உங்கள் கூகுள் கணக்கு மூலம் உள்ளே போனால் அவ்வளவுதான்! உங்கள் கணக்கு இந்த பக்கத்தை உருவாக்கியவர்கள் கைக்கு சென்றுவிடும். Address Bar-ல் உள்ள முகவரியை பாருங்கள். அது வேறு முகவரியாக இருக்கும்.

இது இணையக் குற்றங்களில் ஒன்றான Phishing என்ற மோசடியாகும். இது போல உங்களுக்கு ஈமெயில் வந்தால் அதனை ஸ்பாம் பகுதிக்கு அனுப்பிவிடுங்கள்.

இதே போன்ற ஒரு மோசடியை ஏற்கனவே  ட்விட்டரில் பரவும் வைரஸ் – எச்சரிக்கை என்ற  பதிவில் பார்த்தோம்.

இது பற்றிய வீடியோ:

இது போன்ற மெயில்கள் வந்தால் கவனமாக இருங்கள். முதலில் அனுப்பியவரின் முகவரியை பாருங்கள்.

### நானும் இணையத்தில் தேடிப் பார்த்துவிட்டேன். Handel என்றால் என்னவென்று இன்னும் தெரியவில்லை. ஒரு வேலை மெயில் அனுப்பியவர்களுக்கு ஆங்கிலம் தெரியாதோ? (இல்லையென்றால் எனக்கு ஆங்கிலம் தெரியவில்லையா?)

இதையும் படிங்க:  Youtube மூலம் பணம் சம்பாதிக்க - [Video Post]

24 thoughts on “எச்சரிக்கை! கூகுள் பெயரில் மோசடி”

  1. ஆமா தல இங்கே உங்கள் கடவுச் சொல் என்று இல்லை என்ன டைபினாலும் ஏற்றுக் கொள்ளும்… பலரும் இதன் வழி விழுந்து ஏமாறுகிறார்கள்

    Reply
  2. அருமையான விழிப்புணர்வு பதிவு! ட்விட்டரில் பரவும் வைரஸ் என்ற பதிவும் என்னை கவர்ந்த விழிப்புணர்வு பதிவுகளில் ஒன்று!

    BTW.., Handel என்பவர் 1685 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்து பின்பு ஜெர்மனியில் வாழ்த்த ஒரு மியூசிக் கம்போசர் ஆவர்! (நாங்கெல்லாம் STD-ஐ கரைச்சு குடிச்சவங்களாக்கும் ஹி ஹி ஹி ஹி)

    Reply
  3. ப்ளாக்கர் நண்பன் அவர்களுக்கு,
    என்னால் என்னோட தளத்தில் இருந்து பதிவை தமிழ்மணத்தில் இணைக்க முடியவில்லை. இணைத்தால் பின்வருவன போல தெரிகிறது.

    Your Blog http://yayathin.blogspot.in is not listed in Tamilmanam. Please submit your blog to Tamilmanam

    Please click here to submit your blog to tamilmanam

    எப்படி இணைப்பது என்று சொல்லவும் நன்றி…

    Reply
  4. அந்த வெப் பேஜில் ஏதாவது ஒரு டண்டணக்கா பெயரில் லாகின் செய்து தப்பு தப்பாய் பாஸ்வோர்ட் அடிக்கவும் – கிடந்து சாகட்டும்! 😉

    Reply
  5. நான் வேற கொடுத்து லாகின் செய்தேன். அது என்னெவென்று தனியாக சொல்கிறேன்…

    😀

    Reply
  6. வாழ்த்துக்கள் சகோ அருமையான எச்சரிக்கைப் பகிர்வு .
    இதன்மூலம் ஒவ்வருதருடைய உழைப்பும் உங்களால்
    காக்கப் படுவதை எண்ணி பெரும் மகிழ்வு கொள்கின்றேன் .
    மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .

    Reply
  7. நண்பர் யாயாதீன் அவர்கள் சொன்னது போல் தான் எனக்கும் வந்தது. நீங்கள் கொடுத்த வலையில் சென்று அதன் படி செய்தேன். சரியாகி விட்டது. மிக்க நன்றி நண்பரே.

    Reply
  8. தகவலுக்கு நன்றி அண்ணா,எச்சரிக்கையா இருக்கனும்…"நம் மெயிலுக்கு வரும் லிங்க் களை க்ளிக் செய்வதில் கவனம் தேவை"-னு எச்சரிக்கை செய்தமைக்கு நன்றிகள்

    Reply
  9. இங்க தான் நிக்குறார் வரலாற்று சுவடுகள். அப்புறம் Handel அவர்களைப் பற்றிய பதிவு எப்போ? 😛

    Reply
  10. எனக்கு டெக் பத்தி அதிகம் தெரியாது தான் என்றாலும் இந்த மாதிரி எந்த லிங்க்கிலும் சென்று ஓப்பன் செய்வதில்லை !! 😉

    # உள்ளுணர்வின் தடத்தில்

    Reply
  11. வணக்கம் சகோ google account ல் ஒருமுறை எமது சொந்தப் பெயர்
    முழுப் பெயர் கொடுத்துவிட்டால் அதை மாற்ற முடியுமா ?…
    அப்படி மாற்றம் செய்ய முடியாது எனில் இதனால் வேறு
    சிக்கல்கள் வருமா ?…

    Reply
  12. முடியும் சகோ.!

    உங்கள் கூகுள் ப்ளஸ் ப்ரொபைல் பக்கத்திற்கு சென்று, edit profile என்பதை கிளிக் செய்து, உங்கள் பெயரில் கிளிக் செய்து மாற்றிக் கொள்ளலாம்.

    ஆனால் இரண்டு வருடங்களுக்கு மூன்று முறை மட்டுமே மாற்ற முடியும்.

    Reply
  13. google account ல் உள்ள first name and last name
    இதைத்தான் சகோ மாற்ற வேண்டும் .ஆனால்
    நீங்கள் சொன்னதுபோல் முயற்சித்தேன் புனைப்பெயர்
    மட்டுமே மாறுகின்றது சகோ .

    Reply
  14. உண்மை தான் நண்பா!

    சிறு வேண்டுகோள்! நண்பன் என்றே என்னை அழையுங்கள், 'தல' என்று சொல்ல வேண்டாம்! 😀

    Reply
  15. இல்லை சகோ.! முன்னர் சொன்னது போல, ப்ரொபைலில் உங்கள் பெயரை கிளிக் செய்தால், First name, last name தான் இருக்கும். அதன் மூலம் மாற்றலாமே?

    Reply

Leave a Reply